வரைவிலக்கணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 59 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up, replaced: {{Link FA|pl}} →
வரிசை 1:
'''வரைவிலக்கணம்''' என்பது ஒரு [[சொல்]] அல்லது தொடரின் பொருளை விளக்கும் ஒரு [[கூற்று]] ஆகும்.
 
== வரைவிலக்கண வகைகள் ==
வரிசை 5:
 
# '''விளக்க வரைவிலக்கணம்''' (descriptive definition): இது ஒரு சொல்லுக்கு அல்லது தொடருக்குரிய பொதுவான பொருளை விளக்குவது ஆகும்.
# '''எடுபொருள் வரைவிலக்கணம்''' (stipulative definition): இது ஒருவர் தான் எடுத்துக்கொண்ட விடயத்தை விளக்குவதற்காக, ஒரு சொல்லுக்கு அல்லது தொடருக்குக் கொடுக்கும் பொருள் ஆகும். குறிப்பிட்ட சொல் புதியதாக இருக்கலாம் அல்லது ஏற்கெனவே உள்ள சொல்லுக்கான புதிய பொருளொன்றைக் கொடுத்து அதனை விளக்குவதாக இருக்கலாம்.
 
வழக்கு நிலையுடன் ஒப்பிட்டு ஒரு விளக்க வரைவிலக்கணம் [[சரி]] அல்லது [[பிழை]] எனக் காட்ட முடியும். ஆனால் எடுபொருள் வரைவிலக்கணம் அதனைக் கொடுப்பவரின் தேவைக்கானது என்பதால் அது பிழை, சரி என்பது கிடையாது.
 
== துல்லியமாக்கல் வரைவிலக்கணம் ==
இவற்றைவிட, அகரமுதலிகளில் கொடுக்கப்படும் விளக்க வரைவிலக்கணங்களை ஒரு குறிப்பிட்ட தேவைக்குப் பயன்படுத்துவதற்காக மேலதிக கட்டளை விதிகளின் (criteria) அடிப்படையில் அச் சொல்லை ஒரு குறுகிய பொருள் குறிக்கும் வகையில் கொடுப்பது [[துல்லியமாக்கல் வரைவிலக்கணம்]] (precising definition) எனப்படுகின்றது.
 
== இணக்கமுறை வரவிலக்கணம் ==
வரிசை 21:
வரைவிலக்கணம் ஒரு பொருளின் அடிப்படையான பிழிவைக் குறிக்கும் கூற்றாக இருக்கவேண்டும் என்ற எண்ணம், ''பெயரளவுப்'' பிழிவு (nominal essence), ''உண்மை''ப் பிழிவு (real essence) என்ற வேறுபாட்டுக்கு வித்திட்டது.
 
இதையும் அரிஸ்ட்டாட்டிலே தொடக்கி வைத்தார். உருவாக்கப்பட்ட சொல்லொன்றின் பொருளை, அச் சொல் குறிக்கும் பொருளின் அடிப்படை இயல்புகளை அறிந்து கொள்ளாமலேயே, நாம் அறிந்து கொள்ளலாம் என்று, ''போஸ்ட்டீரியர் அனாலிஸ்ட்டிக்'' (Posterior Analytics) என்னும் அவரது உரையிலுள்ள ஒரு பத்தியில் அரிஸ்ட்டாட்டில் கூறுகிறார். இது மத்தியகாலத் தருக்க அறிஞர், ''பெயரின் என்ன தன்மை'' க்கும், அப்பெயர் குறிக்கும் பொருளின் எல்லாப் பொருட்களிலும் காணும் அடிப்படை இயல்பைக் குறிக்கும் ''பொருளின் என்ன தன்மை'' என்பதற்கும் இடையில் வேறுபாடு கண்டதில் முடிந்தது.
 
== உண்மை வரைவிலக்கணம் ==
இது, ''[[பெயரளவு வரைவிலக்கணம்]]'', ''[[உண்மை வரைவிலக்கணம்]]'' என்பவற்றுக்கிடையே வேறுபாடு காண்பதற்கு வழி சமைத்தது. பெயரளவு வரைவிலக்கணம் என்பது சொல் எப்பொருள் குறிக்கிறது என்பதை விளக்குவதாகும். ஆனால், உண்மை வரைவிலக்கணம் அச் சொல் குறிக்கும் பொருளின் உண்மை இயல்பை வெளிப்படுத்துவது ஆகும்.
 
== குழம்பிய மூளைக்குரிய எண்ணக்கரு ==
இந்தப் ''பிழிவு'' தொடர்பிலேயே நவீன மெய்யியலின் பெரும்பகுதி கழிந்தது. குறிப்பாகப் [[பகுத்தாய்வு மெய்யியல்]], ஒரு பொருளின் ''பிழிவை'' விளக்கும் முயற்சியை விமர்சித்தது. [[பேட்ரண்ட் ரஸ்ஸல்|ரஸ்ஸல்]] என்பார் இதை "சரி செய்ய முடியாத அளவுக்குக் குழம்பிய மூளைக்குரிய எண்ணக்கரு" என்று விபரித்தார்.
 
== இருக்கக்கூடிய உலகம் ==
வரிசை 34:
== மேற்கோள்கள் ==
<references/>
{{Link FA|pl}}
 
[[பகுப்பு:சொற்பொருளியல்]]
"https://ta.wikipedia.org/wiki/வரைவிலக்கணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது