ஈலமைட்டு மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: de:Elamische Sprache is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சி clean up, replaced: {{Link FA|de}} →
வரிசை 7:
: '''மூல-ஈலமைட்டு''': [[ஈரான்|ஈரானில்]] கண்டறியப்பட்ட வரிவடிவங்களுள் இதுவே மிகப் பழமையானது. இது கிமு 3100 க்கும் 2900 க்கும் இடைப்பட்ட குறுகிய காலப்பகுதியில் புழக்கத்தில் இருந்தது. மூல-ஈலமைட்டு வரிவடிவங்களைக் கொண்ட களிமண் தகடுகள் ஈரானின் பல பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இவ்வரி வடிவம், மூல-[[ஆப்பெழுத்து]]க்களில் இருந்து வளர்ச்சி அடைந்திருக்கக் கூடுமெனக் கருதப்படுகின்றது. மூல-ஈலமைட்டு ஆயிரத்துக்கு மேற்பட்ட குறியீடுகளைக் கொண்டிருந்தது. இவற்றுள் ஒரு பகுதி [[படவெழுத்து]]க்களாக (''logographic'') இருக்கலாமெனவும் கருதப்படுகிறது. இது இன்னமும் வாசித்துப் புரிந்துகொள்ளப்படாததால், இது ஈலமட்டுக்குரியதா அல்லது வேறு மொழிக்கு உரியதா என்பதும் இன்னும் தெரியவில்லை. மூல-ஈலமைட்டு உட்படப் பல பண்டைய வரிவடிவங்கள், [[பேச்சு மொழி]]களுடன் தற்கால மொழிகள் கொண்டிருப்பது போன்ற தொடர்புகளைக் கொண்டிராமல் இருந்திருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.
 
: '''நீளுருவ ஈலமைட்டு''' மூல-ஈலமைட்டு வரிவடிவத்திலிருந்து பெறப்பட்ட [[அசையெழுத்து]] முறையாக இருக்கலாம் எனக் கருதப்படினும் இது ஐயத்துக்கு இடமின்றி நிறுவப்படவில்லை. இந்த எழுத்து முறை கிமு மூன்றாம் [[ஆயிரவாண்டு|ஆயிரவாண்டின்]] இறுதிக் கால் பகுதியிலேயே புழங்கியதாகத் தெரிகிறது. இதுவும் இன்னும் வாசித்து அறிந்து கொள்ளப்படவில்லை.
 
: '''ஈலமைட்டு ஆப்பெழுத்து''' கி.மு 2500 க்கும் 331 க்கும் இடைப்பட காலப்பகுதியில் புழங்கிய ஒரு வரிவடிவம். இது [[அக்காடிய ஆப்பெழுத்து|அக்காடிய ஆப்பெழுத்தின்]] இசைவாக்கம் ஆகும். இது 130 குறியீடுகளைக் கொண்டுள்ளது. இது பிற ஆப்பெழுத்துகளுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவானதாகும்.
 
== பிற மொழிக் குடும்பங்களுடனான தொடர்புகள் ==
ஈலமைட்டு மொழி, சுமேரிய அசையெழுத்து முறையைக் கைக்கொண்ட போதும்; அயலிலுள்ள [[செமிட்டிய மொழிகள்|செமிட்டிய மொழிகளுடனோ]], [[இந்திய-ஐரோப்பிய மொழிகள்|இந்திய-ஐரோப்பிய மொழிகளுடனோ]], [[சுமேரிய மொழி]]யுடனோ நெருங்கிய தொடர்பு எதையும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.
 
=== ஈலமைட்டு-திராவிடமும், ஆபிரிக்க-ஆசிய மொழிகளும் ===
வரிசை 25:
 
[[பகுப்பு:தனித்த மொழிகள்]]
 
{{Link FA|de}}
"https://ta.wikipedia.org/wiki/ஈலமைட்டு_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது