"படிவளர்ச்சிக் கொள்கை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

81 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up, replaced: {{Link FA|ar}} → (5)
சி (clean up, replaced: {{Link FA|ar}} → (5))
[[உயிரியல்|உயிரியலில்]] '''படிவளர்ச்சிக் கொள்கை''' (தமிழ்நாட்டு வழக்கு: '''பரிணாம வளர்ச்சிக் கொள்கை'''; இலங்கை வழக்கு: '''கூர்ப்புக் கொள்கை''') என்பது ஓர் உயிரினத்தின் பண்புகள், தலைமுறை தலைமுறையாக மரபணுவழி எடுத்துச் செல்லும் பொழுது காலப்போக்கில் அவ்வுயிரினத்தின் தேவை, சூழல், தன்னேர்ச்சியான நிகழ்வுகள் ஆகியவற்றால் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி விளக்கும் ஒன்று. உயிரினத்தின் படிப்படியான மாற்றங்கள், எதனால் எவ்வாறு மாறுபடுகின்றன என்று ஆய்ந்து அறிந்து கூறுகிறது இக்கொள்கை. இவ்வாறாக ''உள்ளது சிறந்து மிகுதலை'' [[தொல்காப்பியம்]] தொட்டு பல பண்டைத் [[தமிழ் இலக்கியம்|தமிழிலக்கியங்களில்]] '''கூர்ப்பு''' என்று வழங்கியுள்ளனர்.<ref name="கூர்ப்பு">{{cite book|title=Tamil Lexicon|publisher=[[சென்னைப் பல்கலைக்கழகம்]]|location=சென்னை|date=1924-1936|pages=1075|url=http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.3:1:4794.tamillex}}</ref>
 
பொதுவாக இப்படி வளர்ச்சி மாற்றங்கள் இருபெரும் வழிகளில் உந்தப்படுவதாகக் கருதப்படுகின்றன. முதல் வகை உந்துதலுக்கு [[இயற்கைத் தேர்வு]] என்று பெயர். இது ஓரினத்தில் தலைமுறை தலைமுறையாய் பரவிவரும் பண்புகளில் தங்கள் [[இனம் (உயிரியல்)|இனத்தின்]] நல்வாழ்வுக்கும் [[இனப்பெருக்கம்|இனப்பெருக்கத்திற்கும்]] உதவியாய் இருக்கும் பயனுடைய பண்புகள் அவ்வினத்திற் பரவலாக பாதுகாக்கப்பட்டும், கெடுதி தரும் பண்புகள் அருகியும் அற்றும் போகின்றன என்ற கருத்தாக்கம். இப்படிப் பயனுடைய பண்புகள் இருந்தால் அவை அடுத்த தலைமுறையிலும் பிழைக்க வாய்ப்பிருப்பதால், இவை பரப்பப்பட்டு நிலைபெறுவதாகக் கருதப்படுகின்றது.<ref>{{cite book |author=Futuyma, D.J. |authorlink=Douglas J. Futuyma |title=Evolution |publisher=Sinauer Associates |location=Sunderland |year=2005 |isbn=0-878-93187-2}}</ref><ref name=Lande>{{cite journal |author=Lande R, Arnold SJ |year=1983 |title=The measurement of selection on correlated characters |journal=Evolution |volume=37 |pages=1210–26} |doi=10.2307/2408842}}</ref> பல தலைமுறைகளாக வளர்ச்சியுறும்பொழுது ஓர் உயிரினத்தின் பண்புகள் தேவைக்கும் சூழலுக்கும் ஏற்ப, தக்க, இசைவான மாற்றங்கள் அடைகின்றன.<ref name="Ayala">{{cite journal |author=Ayala FJ |title=Darwin's greatest discovery: design without designer |journal=Proc. Natl. Acad. Sci. U.S.A. |volume=104 Suppl 1 |issue= |pages=8567–73 |year=2007 |pmid=17494753 |url=http://www.pnas.org/cgi/content/full/104/suppl_1/8567 |doi=10.1073/pnas.0701072104}}</ref> இவற்றை ''இயல் தேர்வு'' அல்லது [[இயற்கைத் தேர்வு]] என்று அழைக்கிறார்கள். படிவளர்ச்சி மாற்றத்திற்கு இரண்டாவது உந்துதலாக அமைவது தன் நேர்ச்சியாய் ஏற்படும் மாற்றங்கள், நிலைபெறும் வாய்ப்பைப் பொறுத்தது. இதற்குத் [[தகவமைவு]] அல்லது ''மரபணு பிறழ்வு நகர்ச்சி'' (Genetic drift) என்று பெயர்.
 
இக்கொள்கை புவியிலுள்ள உயிர்களின் [[பொது மூலம்|பொது மூலத்திலிருந்து]] எல்லா [[உயிரினம்|உயிரினங்களின்]] தோற்றத்தை விளக்குவதால், [[உயிரியல்]] பிரிவின் மையக்கொள்கையாகத் திகழ்கிறது.
 
== மரபு ==
''முதன்மைக் கட்டுரைகள்: [[மரபு]], [[மரபணு]]''
 
மாந்தர்களின் கண் நிறம், அவர்களின் சில நோய்களுக்கு எதிரான எதிர்ப்புத்தன்மை போன்ற பல உயிரியல் பண்புகளைப் பிள்ளைகள் பெற்றோரிடமிருந்து பெறுதல் ''மரபு'' என்று கூறப்படும். எந்தப் பண்புகள் அடுத்த தலைமுறைக்குச் செல்கின்றன என்பது பெற்றோர்களின் மரபணுக்கள் எவ்வாறு இணைகின்றன என்பதைப் பொறுத்தது. இவ்வாறான மரபுரிமை மரபணுக்களின் கட்டுப்பாட்டில் நடக்கிறது.
 
[[படிமம்:Darwin's finches cropped.jpeg|thumb|right|250px|[[கலாபகசுத் தீவுகள்|கலாபகசுத் தீவில்]] தனித்து வளரவேண்டிய சூழலினால் அங்குள்ள குருவியினங்கள் தங்களுக்குள் 10-12 வகையான குருவியினங்களாக வளர்ந்தன]]
அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ்வதற்கு ஒன்றோடொன்று போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன. மற்ற இனத்து உயிரினங்களுடன் உணவு மற்றும் இடம் ஆகியவற்றுக்குப் போட்டி ([[சிங்கம்]] மற்றும் [[கழுதைப்புலி]] ஒரே இடங்களில் வாழ்ந்து, ஒரே [[இரை]]யை [[கொன்றுண்ணல்|வேட்டையாடுபவை]]), மற்றும் தனது இனத்துள் உணவு மற்றும் துணைக்காகப் போட்டி (சிறந்த ஆண் சிங்கமே மற்ற பெண் சிங்கங்களுடன் உறவாடிக் குட்டிகள் இடும்) எனப் பல்வேறு நிலைகளில் போட்டி உள்ளது. இவ்வாறான போட்டி எனும் இயக்கத்துடன், இயற்கைச் சூழல்களின் இயக்கங்களும்(வறட்சி, குளிர், வெய்யில் போன்றவை) உயிரினங்களைப் பாதிக்கும்.
 
இவ்வாறாகப் பல்வேறு இயக்கங்களின் தாக்கங்களைச் சமாளிக்கவல்ல தனிப்பட்ட உயிர் மற்றும் உயிரினங்கள் செழித்துத் தமது நன்மைபயக்கும் உயிர்ப் பண்புகளைத் தமது அடுத்த தலைமுறைக்குச் செலுத்தும். சமாளிக்க இயலா உயிர் மற்றும் உயிரினங்கள் அற்றுப்போகும். எடுத்துக்காட்டாக, மற்ற பூச்சிகளைவிட மேம்பட்ட [[உருமறைப்பு]] (''camouflage'') கொண்ட ஒரு பூச்சி தன்னை உணவாகக் கொள்ளவரும் [[பறவை]]யின் கண்களுக்குத் தென்படாததால், மற்ற பூச்சிகளைவிட அதிகமாக வாழ்ந்து, தனது வழித்தோன்றல்களுக்குத் தனது மேம்பட்ட உருமறைப்பு எனும் உயிரியல் பண்பினைக் கொடுக்கும். அதேபோல், பறவைகளிலும், மேம்பட்ட உருமறைப்புப் பெற்ற பூச்சிகளைக் கண்டுபிடிக்கவல்ல மேம்பட்ட கண்பார்வை எனும் உயிரியல் பண்புபெற்ற பறவை, மற்ற பறவைகளை விட அதிக உணவு பெறுவதால், செழித்துத் தனது குஞ்சுகளுக்கும் அப்பண்பினைச் செலுத்தும். கோடுகள் எனப்பட்ட [[யானை#தந்தம்|தந்தங்களுக்காக]] மாந்தர்களால் மிகுதியாக வேட்டையாடப்பட்ட ஆப்பிரிக்க [[யானை]]களிடையே தந்தங்கள் அற்ற தன்மை [[யானை#மனிதர்களும் யானைகளும்|மேலோங்குவதாக]] அறியப்பட்டுள்ளது.
 
== படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய எதிர்வாதம் ==
படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய எதிர்வாதம் முன்வைப்போர் பின்வரும் ஐந்து காரணங்களை<ref>[http://www.talkorigins.org/faqs/faq-misconceptions.html Five Major Misconceptions about Evolution]</ref> <ref>[http://www.ethirkkural.com/p/blog-page.html]</ref> முன்வைக்கின்றனர்.
# படிவளர்ச்சிக் கொள்கை என்பது கொள்கை அளவிலேயே உள்ளது, மாறாக அது அவதானிக்கப்படவில்லை.
# [[வெப்ப இயக்கவியல்|வெப்ப இயக்கவியலின்]] இரண்டாம் விதியை இக் கொள்கை மீறுகின்றது.
[[பகுப்பு:AFTv5Test]]
[[பகுப்பு:உயிரியல் கோட்பாடுகள்]]
 
{{Link FA|ar}}
{{Link FA|bg}}
{{Link FA|ca}}
{{Link FA|en}}
{{Link FA|ru}}
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1828208" இருந்து மீள்விக்கப்பட்டது