"பிரித்தானியப் பேரரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

38 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up, replaced: {{Link FA|de}} → (2)
சி (clean up, replaced: {{Link FA|de}} → (2))
[[படிமம்:British Empire 1897.jpg|thumb|300px|right|1897 ஆம் ஆண்டில் பிரித்தானியப் பேரரசு]]
[[படிமம்:BritishEmpire1919.png |thumb|300px|பிரித்தானியப் பேரரசினதும் அதன் செல்வாக்குப் பகுதிகளினதும் நிலப்படம்]]
'''பிரித்தானியப் பேரரசு''' (''British Empire'') உலக வரலாற்றில் இருந்த [[பேரரசு]]கள் அனைத்திலும் பெரியது ஆகும்.<ref>{{Cite book |last=Ferguson |first=Niall |year=2004 |title=Empire, The rise and demise of the British world order and the lessons for global power |publisher=Basic Books |isbn=0-465-02328-2}}</ref> ஒரு [[நூற்றாண்டு]]க்கும் மேலாக உலகின் முதன்மையான [[வல்லரசு|வல்லரசாகத்]] திகழ்ந்தது. ஐரோப்பியக் [[குடியேற்றவாதம்|குடியேற்றவாதப்]] பேரரசுகளைத் தோற்றுவித்த [[15ம் நூற்றாண்டு|15]] ஆம் நூற்றாண்டின் புத்தாய்வுக் கடற் பயணங்களுடன் தொடங்கிய [[கண்டுபிடிப்புக் காலம்|கண்டுபிடிப்புக் காலத்தின்]] விளைவாக இது உருவாகியது. [[1921]] ஆம் ஆண்டளவில் பிரித்தானியப் பேரரசு உலகின் 458 [[மில்லியன்]] மக்களை உள்ளடக்கியதாக இருந்தது. இது அக்காலத்தின் உலக [[மக்கள்தொகை]]யின் காற்பங்கு ஆகும். 33 மில்லியன் [[சதுர கிலோமீட்டர்]] (13 மில்லியன் [[சதுர மைல்]]) பரப்பளவைக் கொண்டிருந்த இப்பேரரசு உலக மொத்த நிலப்பரப்பிலும் காற்பங்கைத் தன்னுள் அடக்கியிருந்தது. இதனால் இதன் மொழி மற்றும் பண்பாட்டுப் பரவல் உலகம் தழுவியதாக இருந்தது. இது உயர் நிலையில் இருந்தபோது, இதன் ஆட்சிப்பரப்பு புவிக் கோளத்தில் எல்லாப் பகுதிகளிலும் பரவி இருந்ததனால், "பிரித்தானியப் பேரரசில் சூரியன் மறைவதில்லை" என்று சொல்லப்பட்டது.
 
[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரைத்]] தொடர்ந்து வந்த ஐந்து பத்தாண்டுகளில் இப் பேரரசுக்குள் அடங்கியிருந்த பல நாடுகள் [[விடுதலை]] அடைந்தன. இவற்றுட் பல விடுதலையடைந்த பிரித்தானியப் பேரரசு நாடுகளின் [[பொதுநலவாய நாடுகள்]] குழுவில் சேர்ந்து கொண்டன. சில நாடுகள் பிரித்தானியப் பேரரசர் / பேரரசியையே தமது நாடுகளின் தலைவராகவும் ஏற்றுக்கொண்டிருந்தன.
 
== தொடக்கம் (1497-1583) ==
[[பெரிய பிரித்தானியா]] வின் [[ஐக்கிய இராச்சியம்]] உருவாக முன்னரே பிரித்தானியப் பேரசுக்கான அடிப்படை அமைக்கப்பட்டுவிட்டது. அக்காலத்தில் [[இங்கிலாந்து]]ம் [[ஸ்காட்லாந்து]]ம் தனித்தனி அரசுகளாக இருந்தன. [[போர்த்துக்கீசர்|போர்த்துக்கீசரதும்]], [[ஸ்பெயின்|ஸ்பானியர்களதும்]] கடல் கடந்த புத்தாய்வுப் பயணங்கள் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, [[1496]] ஆம் ஆண்டில், [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] அரசரான [[ஏழாம் ஹென்றி]], வட அத்திலாந்திக் வழியாக [[ஆசியா]]வுக்குச் செல்வதற்கான வழியைக் கண்டுபிடிப்பதற்காக [[ஜான் கபோ]] (John Cabot) என்பவரை அமர்த்தினார். [[1497]] இல் பயணத்தைத் தொடங்கிய கபோ, [[ஆசியா]] எனத் தவறாகக் கருதிக் [[கனடா]]வில் இறங்கினார். ஆனாலும், [[குடியேற்றம்|குடியேற்றங்களை]] உருவாக்கும் முயற்சி எதுவும் அப்போது மேற்கொள்ளப்படவில்லை. அடுத்த ஆண்டில் கபோ [[அமெரிக்கா]]க்களுக்கான பயணத்தைத் தொடங்கினார் எனினும் அதன் பின்னர் அவரது [[கப்பல்]]களைப் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. இதன் பின் 16 ஆம் நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டுகளில், [[முதலாம் எலிசபெத்]]தின் ஆட்சி தொடங்கிப் பல காலங்களுக்குப் பின்வரை ஆங்கிலக் குடியேற்றங்களை அமைப்பதற்கான முயற்சிகள் எதுவும் நடைபெறவில்லை. [[ஆங்கில - ஸ்பானியப் போர்]]க் காலத்தில், [[ரோமன் கத்தோலிக்கம்|ரோமன் கத்தோலிக்க]] ஸ்பெயினுக்கும், புரட்டஸ்தாந்திய இங்கிலாந்துக்கும் [[பகைமை]]யும் போட்டியும் நிலவின. சர் [[ஜான் ஹோக்கின்ஸ்]], சர் [[பிரான்சிஸ் டிரேக்]] போன்ற தனியார் கடற்போராளிகள் அமெரிக்காக்களில் இருந்த ஸ்பானியத் [[துறைமுகம்|துறைமுகங்களையும்]], புதிய உலகிலிருந்து பெருமளவு செல்வத்தைக் கொண்டுவரும் அவர்களின் கப்பல்களையும் தாக்கிக் கொள்ளையிட இங்கிலாந்து அனுமதி வழங்கியது. அவ்வேளையில், புகழ் பெற்ற எழுத்தாளர்களான [[ரிச்சார்ட் ஹக்லுயிட்]], [[ஜான் டீ]] ஆகியோர், ஸ்பெயினுக்கும், போர்த்துக்கலுக்கும் போட்டியாக இங்கிலாந்தும் தனது குடியேற்றங்களை உருவாக்கவேண்டும் எனக் கோரிவந்தனர். அப்போது, ஸ்பெயின் அமெரிக்காவில் உறுதியாக நிலைகொண்டிருந்தது. போர்த்துக்கல் நாடோ, [[ஆபிரிக்கா]], [[பிரேசில்]], [[சீனா]] ஆகியவற்றின் கரைப்பகுதிகளில் [[வணிக நிலை]]களை அமைத்திருந்தது. பிரான்ஸ் [[செயிண்ட் லாரன்ஸ் ஆறு|செயிண்ட் லாரன்ஸ் ஆற்றுப்]] பகுதியில் குடியேறத் தொடங்கியிருந்தது.
 
=== அயர்லாந்தின் பெருந்தோட்டங்கள் ===
இங்கிலாந்தின் முதலாவது நிரந்தரமான கடல்கடந்த குடியேற்றத்தை 1607ல் ஜேம்ஸ்டவுனில், கப்டன் ஜான் சிமித் என்பவர் நிறுவினார், [[வெர்ஜீனியாக் கம்பனி]] என்னும் நிறுவனம் இதனை நிர்வாகம் செய்தது. இந் நிறுவனத்தின் ஒரு கிளையே 1609ல் கண்டுபிடிக்கப்பட்ட [[பெர்முடாத்]] தீவில் ஒரு குடியேற்றத்தை நிறுவியது. இந் நிறுவனத்தின் உரிமைப் பட்டயம் 1624 ஆம் ஆண்டில் விலக்கிக் கொள்ளப்பட்டு இப் பகுதிகளை இங்கிலாந்து அரசு தனது நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, [[வெர்ஜீனியாக் குடியேற்றநாடு|வெர்ஜீனியாக் குடியேற்றநாட்டை]] உருவாக்கியது. 1610ல், நியூபவுண்ட்லாந்தில் நிலையான குடியேற்றங்களை நிறுவுவதற்காக நியூபவுண்ட்லாந்து கம்பனி நிறுவப்பட்டது. எனினும் இது அதிக வெற்றியளிக்கவில்லை. 1620ல், பெரும்பாலும், தூய்மைவாத மதப் பிரிவினையாளர்களுக்கான பாதுகாப்பிடமாக [[பிளைமவுத்]] குடியேற்றம் உருவானது. மத வேறுபாடுகள் தொடர்பில் துன்புறுத்தப்படுவதில் இருந்து தப்புவதற்காகப் பல பிற்காலக் குடியேற்றக்காரர்கள் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு கடல்கடந்து சென்றனர். இவ்வாறு, மேரிலாந்து ரோமன் கத்தோலிக்கர்களுக்கும், [[ரோட் தீவு]] பல மதத்தவர்களுக்காகவும் உருவானவை. கரோலினா மாகாணம் 1663ல் உருவானது. இரண்டாம் ஆங்கில-டச்சுப் போரைத் தொடர்ந்து, 1664 ஆம் ஆண்டில் டச்சுக் குடியேற்றமாக இருந்த தற்போதைய [[நியூ யார்க்]]கான, நியூ ஆம்ஸ்டர்டாமைப் பேச்சுவார்த்தைகள் மூலம் இங்கிலாந்து தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. இதற்கு ஈடாக [[சுரினாம்|சுரினாமை]] இங்கிலாந்து டச்சுக்காரருக்கு விட்டுக்கொடுத்தது. 1681ல் [[பென்சில்வேனியா]]க் குடியேற்றம் வில்லியம் பென் என்பவரால் நிறுவப்பட்டது.
 
1695 ஆம் ஆண்டில், ஸ்காட்லாந்து நாடாளுமன்றம், "ஸ்காட்லாந்துக் கம்பனி" என்னும் நிறுவனத்துக்கு உரிமப் பட்டயம் ஒன்றை வழங்கியது. இதன் அடிப்படையில் இந்த நிறுவனம் 1698ல் பனாமாத் தொடுப்புப் பகுதிக்குச் சென்று அங்கே கால்வாய் ஒன்றை வெட்டும் நோக்குடன் குடியேற்றம் ஒன்றையும் அமைத்தது. எனினும் அயலில் இருந்த ஸ்பானியக் குடியேற்றக்காரரின் முற்றுகையாலும், மலேரியா நோயினாலும் இக் குடியேற்றம் இரண்டு ஆண்டுகளின் பின் கைவிடப்பட்டது. இத்திட்டம் ஸ்காட்லாந்துக்குப் பெரும் இழப்பாக முடிந்தது. ஸ்காட்லாந்தின் முதலீடுகளின் கால்பகுதி இத்திட்டத்தினால் இழக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஐக்கிய இராச்சியம் அமைப்பதற்கு ஸ்காட்லாந்து ஒத்துக்கொண்டதற்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்றெனக் கருதப்படுகிறது.
 
தெற்கில் [[புகையிலை]], [[பருத்தி]], [[அரிசி]] போன்றவற்றையும், வடக்கில் கப்பல்களுக்கான பொருட்களையும், [[கம்பளி]]களையும் வழங்கிய அமெரிக்கக் குடியேற்றங்கள், கரிபியக் குடியேற்றங்களைப்போல் கூடிய வருமானம் தருபவையாக இருக்கவில்லை. ஆனாலும், இப்பகுதிகளின் பெரிய செழிப்பான வேளாண்மை நிலங்களும், இப் பகுதிகளின் காலநிலையும் பெருமளவு ஆங்கிலக் குடியேற்றக்காரரைக் கவர்ந்தது. [[அமெரிக்கப் புரட்சி]] 1775 ஆம் ஆண்டில் அப்பகுதிகளில் 13 குடியேற்றங்களுக்கான சொந்த அரச நிர்வாகத்தை ஏற்படுத்தியது. 1776 ஆம் ஆண்டில் விடுதலை அறிவிப்புச் செய்து ஐக்கிய அமெரிக்க நாடுகள் உருவாக்கப்பட்டது. சுமார் 20 - 30% குடியேற்றக்காரர் பிரித்தானிய அரசருக்கு ஆதரவாக இருந்தனர். புதிய அரசு தனது விடுதலையைப் பாதுகாப்பதற்காகப் போரில் ஈடுபட்டது. இந்த [[அமெரிக்க விடுதலைப் போர்|அமெரிக்க விடுதலைப் போரின்]] முடிவில் விடுதலை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
 
தொடக்கத்திலிருந்தே [[அடிமை முறை]]யே மேற்கிந்தியத் தீவுகளில் பிரித்தானியப் பேரரசின் அடிப்படையாக இருந்தது. 1807 ஆம் ஆண்டில் இம்முறை ஒழிக்கப்படும்வரை இது நீடித்தது. ஆபிரிக்காவில் இருந்து சுமார் 35 இலட்சம் மக்கள் அடிமைகளாக அமெரிக்காக்களுக்குக் கொண்டுவரப்பட்டதற்குப் பிரித்தானிய அரசே பொறுப்பாகும்.
 
அடிமை வணிகருக்கு இத்தொழில் பெரும் வருமானத்தை ஈட்டிக் கொடுத்ததுடன், மேற்குப் பிரித்தானிய நகரங்களான [[பிரிஸ்டல்]], [[லிவர்பூல்]] போன்றவற்றின் முக்கிய நிதி ஆதாரமாகவும் விளங்கியது. முக்கோண வணிகம் என வழங்கப்பட்ட இவ் வணிகத்தில், ஆப்பிரிக்கா, அமெரிக்காக்கள் என்பவற்றுடன் மூன்றாவது புள்ளியாக இந்த நகரங்கள் விளங்கின. எனினும் அடிமைகள் கடத்திவரப்பட்ட கப்பல்களின் சுகாதாரக் குறைவினாலும், மோசமான உணவினாலும் பயணத்தின் போதே இடைவழியில் பலர் இறக்க நேரிட்டது. இந்த இறப்பு விகிதம் ஏழுபேருக்கு ஒருவர் என்ற அளவில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
 
=== ஆசியா ===
[[பகுப்பு:பிரித்தானியப் பேரரசு| ]]
[[பகுப்பு:ஐக்கிய இராச்சியத்தின் வரலாறு]]
 
{{Link FA|de}}
{{Link FA|en}}
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1828231" இருந்து மீள்விக்கப்பட்டது