சிமோன் த பொவார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up, replaced: {{Link FA|af}} →
வரிசை 13:
influenced = [[Judith Butler|Butler]], [[அல்பேர்ட் காம்யு|காம்யு]], [[ஜான் பவுல் சாட்டர்|சாட்டர்]], [[கமில் பக்லியா]], [[பெட்டி ஃபிரைடான்]], [[சாரா லூசியா ஹோக்லாண்ட்|ஹோக்லாண்ட்]], [[ஏட்ரியென் ரிச்|ரிச்]], [[ஜெர்மைன் கிரியர்|கிரியர்]] |
notable_ideas = ethics of ambiguity, feminist ethics, existential feminism |
}}
 
'''சிமோன் ட பொவார்''' (''Simone de Beauvoir'', [[ஜனவரி 9]], [[1908]] – [[ஏப்ரல் 14]], [[1986]]) ஒரு பிரெஞ்சுப் பெண் எழுத்தாளரும், மெய்யியலாளரும் ஆவார். மேலும் இவர் இருத்தலியல் தத்துவ அறிஞராகவும் பெண்ணியவாதியாகவும் அரசியல் செயல்பாட்டாளராகவும் சமூகச் சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார். இவர் [[புதினம்|புதினங்கள்]]; [[மெய்யியல்]], [[அரசியல்]], [[சமூகப் பிரச்சினை]]கள் பற்றிய தனிக்கட்டுரைகள், தனி நபர் வரலாறுகள், [[தன்வரலாறு]] என்னும் துறைகளில் எழுதியுள்ளார். இப்பொழுது இவர் ''அவள் தங்குவதற்காக வந்தாள்'' ''(She Came to Stay)'', ''மாண்டரின்கள்'' ''(The Mandarins)'' போன்ற இவரது [[மீவியற்பியல்]] புதினங்களுக்காகவும்; பெண்கள் மீதான அடக்குமுறை, தற்காலப் [[பெண்ணியம்|பெண்ணிய]] அடிப்படைகள் என்பன குறித்த ''இரண்டாம் பால்'' ''(The Second Sex)'' என்னும் விரிவான பகுப்பாய்வு நூலுக்காகவும் பெரிதும் அறியப்படுகிறார்.
 
== இளமைக்காலம் ==
''சிமோன் லூசி ஏர்னஸ்டைன் மேரி பேர்ட்ரண்ட் டி பொவார்'' என்னும் இயற்பெயர் கொண்ட சிமோன் டி பொவார், ஒரு [[சட்ட வல்லுனர்|சட்ட வல்லுனரும்]], [[நடிகர்|நடிகருமான]] ஜார்ஜ் டி பொவார் என்பவருக்கும், பிராங்கோய்ஸ் பிராசியர் என்னும் இளம் பெண்ணுக்கும் மகளாகப் [[பாரிஸ்]] நகரில் பிறந்தார். இவர் நல்ல பாடசாலைகளில் கல்வி கற்றார். [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போருக்குப்]] பின்னர், மியூஸ் வங்கியின் தலைவராக இருந்த இவரது தாய்வழிப் பாட்டனான குஸ்தாவ் பிரேசியர் வங்குரோத்து ஆனார். இதனால் முழுக் குடும்பமும் பிறரின் பழிப்புக்கு ஆளானதுடன் [[வறுமை]] நிலைக்கும் தள்ளப்பட்டது. இவர்கள் ஒரு சிறிய வீட்டுக்குக் குடிபுக வேண்டியதாயிற்று.
 
இரண்டு பெண்பிள்ளைகளைப் பெற்றிருந்த சிமோனின் தந்தையார் ஆண்பிள்ளைகளை விரும்பியிருந்தார். எனினும், சிமோன் "ஆண்பிள்ளைகளுக்கு உரிய மூளை"யைப் பெற்றிருப்பதாகக் கூறிவந்தார். இளம் வயதிலிருந்தே சிமோன் படிப்பில் கெட்டிக்காரியாக இருந்தார். ஜார்ஜ் தனக்கு [[நாடகம்]], [[இலக்கியம்]] போன்றவற்றில் இருந்த ஆர்வத்தைத் தனது மகளிடத்திலும் உருவாக்கினார். கல்வியறிவின் மூலமே தனது மகள்கள் [[வறுமை]]யில் இருந்து மீள முடியும் என அவர் நம்பினார்.
 
15 ஆவது வயதிலேயே தான் ஒரு எழுத்தாளர் ஆக வேண்டும் என சிமோன் முடிவெடுத்துவிட்டார். இவர் பல பாடங்களிலும் சிறந்து விளங்கினாலும், மெய்யியலின் பால் பெரிதும் கவரப்பட்டு, அதனைக் கற்பதற்காக [[பாரிஸ் பல்கலைக்கழகம்]] சென்றார். அங்கே அவர் [[இழான் பவுல் சார்த்ர]] உட்படப் பல அறிவுத்துறை சார்ந்தோரைச் சந்திக்கும் வாய்ப்புப் பெற்றார்.
வரிசை 28:
[[பகுப்பு:1908 பிறப்புகள்]]
[[பகுப்பு:1986 இறப்புகள்]]
 
{{Link FA|af}}
"https://ta.wikipedia.org/wiki/சிமோன்_த_பொவார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது