கருத்தரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
சி clean up, replaced: {{Link FA|af}} →
வரிசை 77:
 
== தாயில் நிகழும் மாற்றங்கள் ==
[[பெண்]]ணின் உடலில் நிகழும் மாற்றங்கள் அனைத்தும் [[முளையம்]], அல்லது [[முதிர்கரு]]வைச் சிறந்த முறையில் உடலினுள் வைத்துப் பராமரிப்பதற்கான ஒழுங்குகளாக இருக்கும். இந்த மாற்றங்கள் சாதாரணமான உடற்கூற்றியல் மாற்றங்களே. இவை [[சுற்றோட்டத் தொகுதி]], [[வளர்சிதைமாற்றம்]], [[சிறுநீர்த்தொகுதி]], [[மூச்சியக்கம்]] போன்றவற்றை உள்ளடக்கிய மாற்றங்களாக இருப்பதுடன், மகப்பேற்றுச் சிக்கல்கள் ஏதாவது ஏற்படுகையில், அப்போது மிக முக்கியமானவையாகவும் இருக்கின்றன. கருத்தரிப்புக் காலமானது மூன்று பருவங்களாகப் பிரிக்கப்பட்டுப் பார்க்கப்படுகின்றது.<br />
 
===மூன்று பருவங்களில் நிகழும் மாற்றங்கள்===
வரிசை 85:
</ref>. உண்மையில் சராசரியான கருத்தரிப்புக் காலமானது 40 கிழமைகளாக இருக்கின்றது<ref>Cunningham, et al., (2010). Williams Textbook of Obstetrics, chapter 8.</ref>. இந்த முப்பருவங்களையும் தெளிவாக வேறுபடுத்தும் எந்த விதிகளும் இல்லாவிட்டாலும், இந்த பிரிவுகளானது, குறிப்பிட்ட காலத்தில் நிகழும் மாற்றங்களைக் காட்ட மிகவும் உதவியாக இருக்கும்.
===== முப்பருவத்தின் முதலாவது பகுதி =====
மூச்சியக்கத்தில் ஒரு நிமிடத்தில் உள்ளெடுக்கும், வெளிவிடும் வளிமத்தின் கனவளவு 40% ஆல் அதிகரிக்கும்<ref name="pmid11316633">{{cite journal|last=Campbell|first=LA|coauthors=Klocke, RA|title=Implications for the pregnant patient|journal=American Journal of Respiratory and Critical Care Medicine|date=April 2001|volume=163|issue=5|pages=1051–54|pmid=11316633|doi=10.1164/ajrccm.163.5.16353}}</ref>. 8 கிழமைகளில் கருப்பையின் அளவானது ஒரு எலுமிச்சை அளவில் வளர்ந்து காணப்படும். கருத்தரிப்பிற்கான அறிகுறிகளும், அதிலுள்ள பல சங்கடங்களும் இந்தக் காலத்திலேயே காணப்படும்<ref name="NHS">{{cite web | url=http://www.nhs.uk/conditions/pregnancy-and-baby/pages/pregnancy-weeks-4-5-6-7-8.aspx#close| title=You and your baby at 0-8 weeks pregnant | publisher=NHS,UK]}}</ref>.
 
===== முப்பருவத்தின் இரண்டாவது பகுதி =====
[[படிமம்:2917 Size of Uterus Throughout Pregnancy-02-ta.svg|right|200px]]
கருத்தருப்பில் 13 தொடக்கம் 28 கிழமைக்கிடையிலான காலமே இந்த இரண்டாவது பகுதியாகக் கொள்ளப்படுகின்றது. இந்தக் காலத்தில் பொதுவாக தாய்மாரில் [[மசக்கை]] என்று அறியப்படும் காலை நேர அசெளகரியங்கள் குறைந்து, நின்றுபோவதனால் நிறை அதிகரிப்பு ஏற்படுவதுடன் அதிகரித்த ஆற்றலைப் பெறுவதாக உணர்வார்கள். [[கருப்பை]]யானது தனது சாதாரண அளவைவிட 20 மடங்கு அதிகரிக்கும்.
 
முதலாவது பகுதியிலேயே முதிர்கருவானது மனித உருவத்தை ஓரளவு பெற்று அசைய ஆரம்பித்தாலும், இந்த இரண்டாம் பகுதியிலேயே அசைவை தாய்மார் உணரத் தொடங்குவார்கள். நாலாவது மாதத்திலேயே, குறிப்பாக 20ஆம், 21 ஆம் கிழமைகளில் அசைவுகள் உணர ஆரம்பிப்பார்கள். ஏற்கனவே கருத்தரித்த பெண்களாயின், 19 கிழமையிலேயே இதனை உணர ஆரம்பிக்கக்கூடும். இருப்பினும் சிலர் இந்த அசைவை பிந்திய நிலைகளிலேயே உணர்வார்கள்.
வரிசை 100:
கருத்தரிப்பின்போது தாயில் பல [[உடற்கூற்றியல்]], [[உடலியங்கியல்]], [[உளவியல்]] மாற்றங்கள் நிகழ்கின்றன. உடற்கூற்றியலில் மற்றும் உடலியங்கியலில் நிகழும் மாற்றங்களே கூட உளவியல் மாற்றங்களுக்கு இட்டுச் செல்லும். கருப்பகாலம் முழுமைக்கும் ஒரு பெண் பல்வேறுபட்ட சங்கடங்களை எதிர்நோக்க வேண்டி வரும். [[தூக்கமின்மை]], உட்கார்வதில் ஏற்படும் சிரமம், உணர்ச்சி பூர்வமாக ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் என்று பல்வேறுபட்ட சூழ்நிலைகள் ஏற்படும். சிலசமயம் ஒருவகை அரிப்பு, சூடாக உணர்தல், தலைமுடி, தோலில் மாற்றங்கள் ஏற்படல் போன்றனவும் நிகழும்<ref>{{cite book | title=The Pregnancy Book 2001 | publisher=National Health Service, London: Health Promotion England | year=2001}}</ref>. <br />
முக்கியமான சில தொந்தரவுகள்/சங்கடங்கள்:
*[[குமட்டல்]], [[வாந்தி]] - கருத்தரிப்பின் ஆரம்ப காலங்களில் [[மனித இரையகக் குடற்பாதை]]யில் ஏற்படும் சில மாற்றங்களால் குமட்டல், வாந்தி போன்ற சங்கடங்கள் தோன்றும். பொதுவாக மூன்றாம் மாதம் முடிந்து 4ஆம் மாதம் ஆரம்பிக்கையில் இந்த சங்கடங்கள் இல்லாமல் போகின்றது. குமட்டல் 50-90% மான பெண்களிலும், வாந்தி 25-55% மான பெண்களிலும் ஏற்படும். <ref>{{cite journal | url=http://annals.org/article.aspx?articleid=706161; http://www.ncbi.nlm.nih.gov/pubmed/8257464 | title=Gastrointestinal motility disorders during pregnancy. . | author=Baron TH, Ramirez B, Richter JE | journal=Annals of Internal Medicine | year=1993 | month=March 1 | volume=118 | issue=5 | pages=366–75}}</ref> இதற்குக் காரணம் [[மனிதக்கரு வெளியுறை கருவகவூக்கி]] என்னும் [[இயக்குநீர்]] அதிகரிப்பாக இருக்கலாம் எனக் கருதப்பட்டாலும், இதில், மாறுபட்ட கருத்துக்கள் உண்டு.<ref>{{cite journal | url=http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3676933/ | title=Nausea and Vomiting of Pregnancy | author=Noel M. Lee, M.D., Sumona Saha, M.D. | journal=Gastroenterol Clin North Am | year=2011 | month=June | volume=40 | issue=2 | pages=309-vii | doi=10.1016/j.gtc.2011.03.009}}</ref>. இந்தத் தொந்தரவு மிக அதிகமாக இருக்குமானால் சில Antihistamine [[மருந்து]]கள் [[மருத்துவர்|மருத்துவரால்]] வழங்கப்படும். [[இஞ்சி]] பயன்படுத்துவதனால் நன்மையுண்டா என்பது பற்றி மிகச் சரியாக அறியப்படாவிடினும், இதன்போது குமட்டல், வாந்தி குறைவதனால் இஞ்சிப் பயன்பாடும் பரிந்துரைக்கப்படுகின்றது.<ref name="nice"/>
*[[நெஞ்செரிவு]] - [[தொண்டை]]யில் அல்லது [[மார்பு]]ப் பகுதியில் அல்லது இரு பகுதியிலும் எரிவதுபோன்ற ஒரு உணர்வு, அல்லது ஒருவித அசௌகரியம் உணரப்படும். இதனுடன் சேர்ந்து [[அமிலம்|அமிலச்]] சுரப்பும் வாயினுள் வருவதனால் ஒருவகை கசப்பு அல்லது புளிப்புத் தன்மையை உணர்வார்கள். இதனால் வேறு கெடுதலான விளைவுகள் இல்லை என்பதனால் மருந்துகள் பொதுவாகப் பயன்படுத்துவதில்லை. இருக்கும்பொழுதும், படுக்கும்பொழுதும் சரியான நிலையைப் பேணுதல், குறைந்தளவு உணவை சிறிய இடைவெளிகளில் உண்ணுதல், கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகள், கோப்பி போன்றவற்றைத் தவிர்த்தல் போன்றன இதச் சங்கடத்திலிருந்து விடுபட உதவும். இவற்றினால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தொந்தரவு இருக்குமானால் மட்டும் Antacid வகை மருந்து மருத்துவரால் வழங்கப்படும்<ref name="nice"/>.
:இது 22% மான பெண்களில் முதலாவது பருவத்திலும், 39% மான பெண்களில் இரண்டாவது பருவத்திலும், 72% மானோரில் மூன்றாவது பருவத்திலும் இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகின்றது<ref>{{cite journal | url=http://www.ncbi.nlm.nih.gov/pubmed/1420011 | title=Determinants of pregnancy heartburn | author=Marrero JM1, Goggin PM, de Caestecker JS, Pearce JM, Maxwell JD. | journal=British Journal of Obstetrics and Gynaecology | year=1992 | month=Sep. | volume=99 | issue=9 | pages=731–4}}</ref>.
வரிசை 106:
*[[மூலம் (நோய்)|மூலநோய்]] - 8% மான கர்ப்பிணிப் பெண்களில் கருப்பகாலத்தின் இறுதி மூன்று மாதங்களில் மூலநோய்ப் பிரச்சனை இருப்பதாக ஆய்வொன்று கூறுகின்றது.<ref>{{cite journal | url=http://www.ncbi.nlm.nih.gov/pubmed/12004215 | title=Anal fissure and thrombosed external hemorrhoids before and after delivery. | author=Abramowitz L, Sobhani I, Benifla JL, Vuagnat A, Darai E, Mignon M, et al . | journal=Diseases of the Colon and Rectum | year=2002 | month=45 | issue=650–5.}}</ref> இதனால் வேறு கெடுதலான விளைவுகள் இல்லையென்பதனால் உணவுப் பழக்க வழக்கத்தை மாற்றுதலே பரிந்துரைக்கப்படுகின்றது. தொந்தரவு தொடர்ந்தும் அதிகமாக இருப்பின், வழமையாக மூலநோய்க்கு வழங்கப்படும் களிம்புகள் வழங்கப்படலாம்.<ref name="nice"/>
*காலில் புடைசிரைகள் ([[:en:Varicose veins]]) - காலிலுள்ள [[சிரை]]கள் வீங்கி, நீலநிறமாகிக் காணப்படல். இது பொதுவாக கருப்பகாலத்தில் அவதானிக்கப்படுவது என்பதனால், இந்த அறிகுறியை மட்டுப்படுத்த சில வகை பாதவுறைகள் பயன்படுத்தப் பரிந்துரைக்கப்படுகின்றது<ref name="nice"/>
*யோனியூடான வெளியேற்றம் - கருப்பகாலத்தில் பொதுவாகவே [[யோனி]]யூடாக சிலவகைப் பதார்த்தங்களின் வெளியேற்றம் அவதானிக்கப்படலாம். ஆனால் இவ்வகை வெளியேற்றத்தின்போது அரிப்பு, புண், வலி, துர்நாற்றம் என்பன இருப்பின், அதற்குக் காரணம் ஏதாவது [[நோய்த்தொற்று|தொற்றாக]] இருக்கலாம். [[மருத்துவர்|மருத்துவரை]] நாடி, அவரின் ஆலோசனையின்பேரில் தகுந்த சிகிச்சையைப் பெறலாம். <ref name="nice"/>
*[[முதுகு வலி]] - 35-60% மான கர்ப்பிணிப் பெண்கள் முதுகு வலிப் பிரச்சனைக்கு உள்ளாவதாகச் சில ஆய்வுகள் கூறுகின்றன. கருப்பகாலத்தின் 5-7 மாதங்களில் இது அதிகளவில் காணப்படுகின்றது. இந்தத் தொந்தரவைக் குறைக்க சரியான [[உடற் பயிற்சி|உடற் பயிற்சிகள்]], உடல் பிடித்துவிடல் என்பன செய்யலாம்.<ref name="nice"/>
*இடுப்பு செயல் பிறழ்ச்சி (Symphysis pubis dysfuntion) - இடுப்புப்பகுதியில் ஏற்படும் அனைத்துவகை பிரச்சனைகளையும் சேர்த்து இடுப்பு செயல் பிறழ்ச்சி எனக் கூறலாம். இடுப்பெலும்பிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான தொடை, ஏனைய பகுதிகளிலும் வலி ஏற்படலாம். வலி அதிகமாக இருப்பின் நடத்தலில் சிரமம் ஏற்படலாம். 1/36 கருப்பத்தரிப்பில் இந்தப் பிரச்சனை இருப்பதாக அறியப்பட்டுள்ளது.<ref>{{cite journal | url=http://www.ncbi.nlm.nih.gov/pubmed/12381476 | title=Symphysis pubis dysfunction: a cause of significant obstetric morbidity | author=Owens K, Pearson A, Mason G. | journal=European Journal of Obstetrics Gynecology and Reproductive Biology | year=2002 | month=Nov | volume=105 | issue=2 | pages=143–6}}</ref> எலும்பு வலி, மூட்டு வலிகளுக்குப் பயன்படுத்தும் அனேகமான மருந்துகள் கருப்ப காலத்தில் பயன்படுத்தக் கூடாதவை ஆகும்.<ref name="nice"/> பயிற்சிகள், உடம்பு பிடித்துவிடல் போன்றவற்றால் வலியைக் குறைக்க முயலலாம்.
வரிசை 128:
|}
 
இயற்கையான கருத்தரிப்பில், கருக்கட்டல் நிகழ்ந்த நாளை மிகச் சரியாகக் கணித்தல் கடினமாகும். எனவே இறுதியாக ஏற்பட்ட மாதவிடாயின் முதல் நாளைக் கருத்தில்கொண்டே குழந்தை பிறப்பிற்கான நாள் பொதுவில் தீர்மானிக்கப்படுகின்றது. இந்தக் கணிப்பீடானது, கருக்கட்டலுக்கும், குழந்தை பிறப்பிற்கும் இடையிலான காலத்தை விட 2 கிழமைகள் அதிகமாக இருக்கும். இது [[கருக்காலம்]] (Gestational age) எனப்படுகின்றது. இறுதியான மாதவிடாயின் ஆரம்ப நாளிலிருந்து 2 கிழமைகளிலேயே கருக்கட்டலுக்கான சாத்தியம் அதிகமாக இருப்பதுவே இத்தகைய கணிப்பீட்டிற்குக் காரணமாகும். இதனால் பொதுவான கருத்தரிப்புக் காலம் 40 கிழமைகளாகக் கொள்ளப்படுகின்றது<ref name="APA">{{cite web | url=http://americanpregnancy.org/duringpregnancy/calculatingdates.html | title=Calculating Conception | publisher=American Pregnancy Association | accessdate=மே 22, 2014 | pages=Last Updated: 07/2007}}</ref>.
 
மீயொலிப் பரிசோதனையின்போது [[முதிர்கரு]]வை அளந்து பார்த்து, எப்போது கருக்கட்டல் நிகழ்ந்திருக்கக் கூடும் என்பதைக் கணித்தும் குழந்தை பிறப்பிற்கான நாள் தீர்மானிக்கப்படும். இந்தக் கணிப்பானது கருக்கட்டல் நிகழ்ந்த நாளிலிருந்து, குழந்தையின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு கணிக்கப்படுகின்றது. குழந்தைப் பிறப்பிற்கான மிகச் சரியான நாளைத் தீர்மானிக்க முடியாத போதிலும் 8 - 18 கிழமைகளில் எடுக்கப்படும் அளவீடானது ஓரளவு திருத்தமான கணிப்பீடாக இருக்குமென கூறப்படுகின்றது<ref name="APA"/>.
வரிசை 142:
 
===தொற்றுக்களிலிருந்து பாதுகாப்பு===
கருத்தரிப்பில் உருவாகியிருக்கும் முளையம் அல்லது முதிர்கருவானது தாயின் [[மரபியல்]] கூறுகளிலிருந்து வேறுபட்டிருப்பதனால், இந்த கருத்தரிப்பானது, மரபுக் கூறுகள் வேறுபட்ட இருவரிடையே வெற்றிகரமாகச் செய்யப்படும், [[உயிரணு]], [[இழையம்|இழைய]] அல்லது [[உறுப்பு மாற்று|உறுப்பு மாற்றல்]] (cell, tissue or organ transplantation) போன்று கருதப்படும்<ref name=clark>{{cite journal |author=Clark DA, Chaput A, Tutton D |title=Active suppression of host-vs-graft reaction in pregnant mice. VII. Spontaneous abortion of allogeneic CBA/J x DBA/2 fetuses in the uterus of CBA/J mice correlates with deficient non-T suppressor cell activity |journal=J. Immunol. |volume=136 |issue=5|pages=1668–75 |year=1986 |month=March |pmid=2936806 |url=http://www.jimmunol.org/cgi/pmidlookup?view=long&pmid=2936806}}</ref>. இத்தகைய வெற்றிக்குக் காரணம், கருத்தரிப்பின்போது, [[தாய்வழி நோயெதிர்ப்புத் தாங்குதிறன்]] (Maternal immune tolerance) அதிகரிப்பதாகும். ஆனால் வெளி இழையத்தை ஏற்கும் இந்த இயல்பானது, தாயில் [[நோய்த்தொற்று|நோய்த் தொற்று]]க்களின்போது, நோயை ஏற்கும் தன்மைக்கும், [[நோய்|நோயின்]] தீவிரம் அதிகரிக்கவும் காரணமாகிவிடுகின்றது. இதனால் [[தொற்றுநோய்]]களை ஏற்படத்தக்கூடிய [[நோய்க்காரணி]]களிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகின்றது.<br />
 
''[[சிறுநீர்வழித் தொற்று]]'' (:en:Urinary Tract Infection]]) பெண்களிலேயே அதிகளவில் ஏற்படுவதாகவும், அதில் கர்ப்பிணிப் பெண்கள் மிக அதிகளவில் இத்தொற்றுக்கு உள்ளாகும் வாய்ப்பைக் கொண்டிருப்பவர்களாகவும் அவதானிக்கப்பட்டுள்ளது<ref>{{cite web | url=https://umm.edu/health/medical/altmed/condition/urinary-tract-infection-in-women | title=Urinary tract infection in women | publisher=University of Maryland Medical Center (UMMC) | date=last updated: June 24, 2013 | accessdate=சூன் 13, 2014}}</ref>.<ref name="webmed">{{cite web | url=http://www.webmd.com/women/urinary-tract-infections-7/uti-pregnancy | title=Urinary Tract Infections: From Prevention to Cure, Pregnancy and Urinary Tract Infections | publisher=WebMD | accessdate=சூன் 13, 2014}}</ref> கர்ப்பிணிப் பெண்களில் ஏற்படும் இயக்குநீர் மாற்றமும், [[கருப்பை]] பெரிதாவதனால் [[சிறுநீர்ப்பை]]யில் ஏற்படும் அழுத்தம் காரணமாக் [[சிறுநீர்]] முழுமையாக வெளியேறாமல் உள்ளே தங்குவதும், இவர்களில் இத்தொற்றுக்கான வாய்ப்பைக் கூட்டுகின்றது. சுகாதாரமாக இருத்தல், அதிகளவு நீர் அருந்துதல் என்பன நோயிலிருந்து பாதுகாக்க உதவும். நோய் தீவிரமடைந்தால் அது [[சிறுநீரகம்|சிறுநீரகத்திற்கும்]] பரவி, [[சிறுநீரகத் தொற்று|சிறுநீரகத் தொற்றாக]] ([[:en:Pyelonephritis]]) மாறும் வாய்ப்பிருப்பதனால் அவதானமாக இருத்தல் அவசியம்.<ref name="webmed"/><ref name="Medscape">{{cite web | url=http://emedicine.medscape.com/article/452604-treatment | title=Urinary Tract Infections in Pregnancy Treatment & Management | publisher=WebMD LLC | accessdate=சூன் 14, 2014}}</ref> அவசியமெனில் மருத்துவர், [[நுண்ணுயிர் எதிர்ப்பி]]களைப் பரிந்துரைப்பார்.<ref name="Medscape"/> <br />
 
''[[உணவு]] மூலம் ஏற்படக்கூடிய தொற்றுக்கள்'' பொதுவான [[சனத்தொகை]]யைவிட, கர்ப்பிணிப் [[பெண்]]களில் அதிகரித்துக் காணப்படுகின்றது. [[இன்ஃபுளுவென்சா]]வை ஒத்த நோய் அறிகுறிகளைத் தோற்றுவிக்கும் [[பாக்டீரியா]] ஒன்றினால் ஏற்படும் [[:en:Listerosis]]<ref>{{cite journal | url=http://www.ncbi.nlm.nih.gov/pubmed/8592552 | title=Intracellular pathogenesis of listeriosis | author=Southwick FS , Purich DL. | journal=New England Journal of Medicine | year=1996 | month=March 21 | volume=334 | issue=12 | pages=770–6}}</ref> என்னும் நோய் தீவிரத்தன்மையைக் காட்டினால், [[கருச்சிதைவு]], [[செத்துப் பிறப்பு|செத்துப்பிறப்பு]], அல்லது பிறக்கும் குழந்தை தீவிரமான உடல்நலக் குறைவுடன் இருத்தல் போன்ற நிலைகள் தோன்றும். சரியாக [[பாச்சர்முறை]]க்கு உட்படுத்தப்படாத [[பால் (பானம்)|பால்]], மென்மையான-முதிர்ந்த [[பாலாடைக்கட்டி|பாற்கட்டி]] (soft-ripened cheese), [[விலங்கு]]களின் கழிவுகள் உள்ள [[மண்]] போன்றவற்றில் இந்த பாக்டீரியா காணப்படும். இதேபோல் [[கொல்லைப்படுத்தல்|கொல்லைபடுத்தப்பட்ட]] [[பறவை]] [[இனம் (உயிரியல்)|இனங்கள்]], [[முட்டை]], சரிவரச் சமைக்காத [[இறைச்சி]], பதனிடப்படாத பால் போன்றவற்றில் இருக்கும் சல்மனல்லா ([[:en:Salmonella]]) என்னும் பாக்டீரியாத் தொற்றும் பிரச்சனைகளை உண்டாக்கும். இதனால் குழந்தைக்கு பிரச்சனை ஏற்படுவதாக அறியப்படாவிடினும், தாய்க்கு [[வாந்தி]], [[வயிற்றுப்போக்கு]] போன்ற பிரச்சனைகள் தோன்றும். [[உடல்]], [[சூழல்|சூழலைச்]] சுத்தமாகப் பேணல், பதனிடப்படாத பால் அருந்துவதைத் தவிர்த்தல், பழுதடையாத உணவை உண்ணல், இறைச்சி, முட்டை போன்றவற்றை நன்கு [[சமையல்|சமைத்து]] உண்ணல் போன்றன இந்தப் பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும்.<ref name="nice1"/> அவசியமெனில் மருத்துவரின் உதவியை நாடலாம்.
 
== குழந்தை பிறப்பு ==
வரிசை 216:
[[பகுப்பு:AFTv5Test]]
[[பகுப்பு:பெண் இனப்பெருக்கத் தொகுதி]]
 
{{Link FA|af}}
"https://ta.wikipedia.org/wiki/கருத்தரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது