ஈலாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 55 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up, replaced: {{Link FA|fr}} →
வரிசை 2:
'''ஈலாம்''' (Elam) இன்றைய தென் மேற்கு [[ஈரான்|ஈரானில்]] செழித்திருந்த பண்டைக்கால நாகரிகம் ஒன்றைக் குறிக்கும். இன்றைய ஈரானின் தூர மேற்கு, தென்மேற்கு ஈரான் ஆகியவற்றை மையப்படுத்தி அமைந்திருந்த இது, [[குசெசுத்தான்]], [[ஈலம் மாகாணம்]] ஆகியவற்றின் தாழ்நிலப் பகுதிகளிலிருந்து [[கெர்மான் மாகாணம்|கெர்மான் மாகாணத்தில்]] உள்ள சிரோஃப்ட் (Jiroft), எரிந்த நகரமான [[சபோல்]] (Zabol) என்னும் இடங்கள் வரை பரந்திருந்ததுடன், தென் [[ஈராக்]]கின் சிறிய பகுதியொன்றையும் உள்ளடக்கி இருந்தது. பண்டைய அண்மைக் கிழக்குப் பகுதியின் முதன்மையான் அரசியல் சக்திகளில் ஒன்றாக ஈல அரசுகள் விளங்கின.<ref>Elam: surveys of political history and archaeology, Elizabeth Carter and Matthew W. Stolper, University of California Press, 1984, p. 3</ref>
 
பண்டைய [[மெசொப்பொத்தேமியா]]வுக்குச் சற்றுக் கிழக்கே அமைந்திருந்த இந்தப் பகுதி அக்கால நகராக்கத்தின் ஒரு பகுதியாகவும் அமைந்தது. கிமு 3000 ஆண்டளவில் தொடங்கிய எழுத்துப் பதிவுகளும் மெசொப்பொத்தேமிய வரலாற்றுக்கு இணையாகவே அமைந்தன. [[நடு வெண்கலக் காலம்|நடு வெண்கலக் கால]] ஈலம் [[அன்சான்|அன்சானை]] (Anshan) மையமாகக் கொண்டு [[ஈரானியச் சமவெளி]]யிலும், பின்னர் கிமு இரண்டாவது ஆயிரவாண்டில் இருந்து குசெசுத்தான் தாழ்நிலப் பகுதியில் இருந்த [[சூசா (ஈரான்)|சூசா]]வை மையமாகக் கொண்டும் அமைந்திருந்தது.<ref>Elam: surveys of political history and archaeology, Elizabeth Carter and Matthew W. Stolper, University of California Press, 1984, p. 4</ref> இதன் பண்பாடு, [[குட்டியப் பேரரசு|குட்டியப் பேரரசில்]], சிறப்பாக [[ஆக்கிமெனிட் வம்சம்|ஆக்கிமெனிட் வம்சக்]] காலத்தில், முக்கிய பங்காற்றியது. அக்காலத்தில் [[ஈல மொழி]] பேரரசின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இருந்தது.
 
[[ஈல மொழி]]க்கு வேறு எந்த மொழியுடனும் உறவு உள்ளதாக நிறுவப்படவில்லை. [[சுமேரிய மொழி]]யைப் போல் இதுவும் ஒரு தனி மொழியாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. எனினும் சில ஆய்வாளர்கள், [[ஈல-திராவிட மொழிக் குடும்பம்|ஈல-திராவிடம்]] என்னும் ஒரு பெரும் மொழிக் குடும்பம் ஒன்று பற்றி கருத்துத் தெரிவித்து உள்ளனர்.
வரிசை 8:
== சொற்பிறப்பு ==
ஈல மக்கள் தமது நாட்டை ''ஹல்தம்தி'' ''(Haltamti)'' என அழைத்தனர்.<ref name="Kent 1953 53">{{cite book|last=Kent|first=Roland|title=Old Persian: Grammar, Texts & Lexicon|series=American Oriental Series|volume=33)|publisher=American Oriental Society|year=1953|isbn=0-940490-33-1|pages=53}}</ref> சுமேரியர்களும், அக்காடியர்களும் இந்நாட்டைக் குறிப்பிட முறையே ''ஈலம்'', ''ஈலமு'' ஆகிய பெயர்களைப் பயன்படுத்தினர்.<ref>{{cite book|editor=Jeremy Black, Andrew George & Nicholas Postgate (eds.)|title=A Concise Dictionary of Akkadian|publisher=Harrassowitz Verlag|year=1999|isbn=3-447-04225-7|page=68}}</ref> ஈப்ரூக்களின் பைபிளிலும் இது ''ஈலம்'' என்றே குறிப்பிடப்படுகிறது.
 
 
உயர்நிலம் சார்ந்த நாடான ஈலம், பின்னாளில், தாழ்நிலப் பகுதியில் அமைந்திருந்த அதன் தலைநகரான ''[[சூசா]]''வின் பெயரினால் அடையாளம் காணப்படும் நிலைமை உருவானது. [[தொலமி]]க்குப் பிற்பட்ட புவியியலாளர்கள் இதனை ''சூசியானா'' என்று அழைத்தனர். ஈல நாகரிகம் முதலில், இன்று [[குசெசுத்தான்]] என்று அழைக்கப்படும் மாகாணத்தை மையமாகக் கொண்டு அமைந்திருந்தது. இது வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே ''ஃபார்சு'' என்னும் மாகாணத்தையும் உள்ளடக்கி விரிவடைந்தது. குசெசுத்தான் என்னும் தற்காலப் பெயர் பாரசீக மொழியிலிருந்து பெறப்பட்டது. பழைய [[பாரசீக மொழி]]யில், ''ஹூஜியா'' எனப்பட்ட இவ்விடம், நடுப் பாரசீக மொழியில் ''ஹூஸ்'' எனப்பட்டது. இது ''சுசியானா'' என்பதோடு தொடர்புடையது. இதுவே புதிய பாரசீக மொழியில் ''க்சுஸ்'' ''(Xuz)'' ஆனது. இது பின்னர் புதிய பாரசீக மொழியில் இடப்பெயர்களுக்கு அமையும் ''ஸ்தான்'' என்னும் பின்னொட்டுடன் சேர்ந்து ''குசெசுத்தான்'' என்ற பெயரைப் பெற்றது.
வரி 41 ⟶ 40:
[[பகுப்பு:ஈரானின் வரலாறு]]
 
{{Link FA|fr}}
{{Link GA|no}}
"https://ta.wikipedia.org/wiki/ஈலாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது