எடுவார்ட் மனே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up, replaced: {{Link FA|nl}} →
வரிசை 24:
 
==இளமைப் பருவம்==
எடுவார்ட் மனே 21.1.1832ஆம் நாள் [[பாரிஸ்|பாரீசில்]] சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து பெற்ற ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தார். அவரது தாயார் யுஜேனி-டெஸிரே ஃபுர்னியர் ஸ்வீடன் நாட்டு அரச குடும்பத்தைச் சேர்ந்த ஷார்லஸ் பெர்னாதோத் என்பவரின் மகள் ஆவார். அவரது தந்தையார் அகஸ்த் மனே ஒரு பிரஞ்சு நீதிபதி. ஆகவே, அவர் தம் மகன் எடுவார்ட் மனே [[சட்டம்|சட்டத்]] துறையில் பணிபுரிய வேண்டும் என்று எதிர்பார்த்தார். அவரது மாமன் ஷார்லஸ் ஃபுர்னியர் அவர் ஓவியம் பயிலுவதற்கு ஊக்கம் அளித்தார். அவர் அவரை லூவ்ருக்கு (Louvre) அழைத்துச் செல்வார். 1841ஆம் ஆண்டு அவரை காலேஸ் ரோலின் இடைநிலைப் பள்ளியில் சேர்த்தனர். 1845ஆம் ஆண்டு அவரது மாமனின் யோசனையின்படி ஒரு ஓவிய சிறப்பு வகுப்பில் சேர்ந்தார். அவ்விடத்தில்தான், தமது நீண்டகால வாழ்நாள் நண்பரும், பிற்காலத்தில் நுண்கலை அமைச்சராகவும் இருந்த அந்தோனின் புரூஸ்த்தை சந்தித்தார்.
 
1848ஆம் ஆண்டு அவர்தம் தந்தையின் யோசனைப்படி, அவர் பயிற்சிக் கப்பலில் ரியோ டி ஜெனய்ரோ சென்றார். அவர் கடற்படையில் சேருவதற்கான தேர்வில் இரண்டு முறை தோல்வியுற்றார். எனவே, அவரது தந்தையார் எடுவார்ட் மனேவின் விருப்பப்படி ஓவியக் கல்வி கற்க விட்டுவிட்டார். 1850-56 வரை தாமஸ் கூதூய்ர் என்ற ஓவிய ஆசிரியரிடம் ஓவியம் கற்றார். ஓய்வுநேரத்தில் லூவ்ருவில் உள்ள முன்னாள் ஓவிய ஆசிரியர்களின் ஓவியத்தைப் பார்த்து வரைந்தார்.
வரிசை 34:
== மியூசிக் இன் தி டுய்லெரிஸ் ==
 
மனேவின் தொடக்ககால ஓவிய பாணிக்கு ''மியூசிக் இன் தி டுய்லெரிஸ்'' ஓர் உதாரணமாகத் திகழ்கிறது. ஹால்ஸ், வேலேஸ்குய்ஸ் ஆகியோரின் தாக்கத்தை இதில் காணலாம். வாழ்நாள் பூராவும் அவருக்கு ஓய்வு என்ற தலைப்பில் ஆர்வம் இருந்தது என்பதற்கு இந்த ஓவியம் ஓர் எடுத்துக்காட்டு.
 
இந்த ஓவியம் முற்றிலுமாக முடிக்கப்படவில்லை என்று சிலர் கருதுகிறார்கள். என்றபோதிலும், அந்த காலத்தில் டுய்லெரிஸ் தோட்டம் எவ்வாறு இருந்தது என்பதையும், இசையும் உரையாடலும் எவ்வாறு இருந்தன என்பதையும் எவர் ஒருவரும் கற்பனை செய்து பார்க்கவியலும்.
வரிசை 51:
== சமூக நிகழ்வுகளின் ஓவியங்கள் ==
[[File:Edouard Manet 053.jpg|thumb|left|ரேஸ் ஆப் லாங்க்கேம்ப், 1864.]]
மனெட் மேல்தட்டு மக்களின் பொழுதுபோக்கு ந்டவடிக்கைகளை காட்டும் ஓவியங்களையும் வரைந்திருந்தார்.
 
'''''மாஸ்க்டு பால் அட் ஓபரா மனெட்''''' என்ற ஓவியத்தில் ஒரு விருந்தை மக்கள் உற்சாக கொண்டடுவதை காட்டுகிறது.முகமூடிகள் அணிந்த பெண்களயும் அவ்ர்களுடன் பேசும் ஆண்கள் நீண்ட தொப்பிகள் மற்றும் கருப்பு அங்கியை அணிந்த வண்ணம் வரைந்திருந்தார்.
வரிசை 97:
*''The Painting of Modern Life: Paris in the Art of Manet and His Followers'' by [[T. J. Clark (art historian)|T.J. Clark]] (1985), ISBN 0-500-28179-3 (2000 paperback edition)
*''Manet: Painter of Modern Life'' by Françoise Cachin (1995), ISBN 0-500-30050-X
 
{{Link FA|nl}}
 
[[பகுப்பு:பிரெஞ்சு ஓவியர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/எடுவார்ட்_மனே" இலிருந்து மீள்விக்கப்பட்டது