"போலந்து படையெடுப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

78 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up, replaced: {{Link FA|hu}} → (3)
சி (தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (clean up, replaced: {{Link FA|hu}} → (3))
== பின்னணி ==
 
[[கிழக்கு ஐரோப்பா]]வில் அமைந்துள்ள போலந்தின் மேற்கில் ஜெர்மனியும் கிழக்கில் சோவியத் ஒன்றியமும் அமைந்திருந்தன. 1933 இல் இட்லரின் [[நாசிசம்|நாசிக் கட்சி]] ஜெர்மனியில் ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் கொள்கைகளான ஜெர்மானியர்களுக்கு வாழிடம் (Lebensraum), பரந்த ஜெர்மனி (Großdeutschland) ஆகியவற்றை நிறைவேற்ற ஜெர்மனியின் எல்லைகளை விரிவாக்கி அதனைச் சுற்றியுள்ள நாடுகளைக் கைப்பாவைகளாக ஆக்க முனைந்தது. இதற்காக ஜெர்மனியின் கிழக்கெல்லையில் இருந்த போலந்துடன் இட்லர் நட்புறவினை வளர்க்க முயன்றார். ஆனால் ஜெர்மனியின் ஆதிக்கத்தைக் கண்டு அஞ்சிய போலியர்கள் பிரிட்டன், பிரான்சு போன்ற [[நேச நாடுகள்|நேச நாடுகள்]] அணியில் இணைந்தனர். மேலும் [[வெர்சாய் ஒப்பந்தம்|வெர்சாய் ஒப்பந்ததின்]] காரணமாக ஜெர்மனியின் ஒரு பகுதியான கிழக்கு பிரசியா ஜெர்மனியிலிருந்து துண்டிக்கப்பட்டது. அதனை அடைய “[[போலந்திய வழி]]” (polish corridor) என்றழைக்கப்பட்ட பகுதியைக் கடந்து செல்ல வேண்டும். இது போலந்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. [[இடாய்ச்சு]] மொழி பேசுவோர் 95% சதவிகிதம் வசிக்கும் [[டான்சிக்]] நகரமும் ஜெர்மனியிடமிருந்து பிடுங்கப்பட்டு போலந்திய கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. தங்கள் நாடு துண்டாக்கப்பட்டதை ஜெர்மானியர்கள் விரும்பவில்லை. மீண்டும் கிழக்குப் பிரசியா ஜெர்மனியின் நிலத்தொடர்ச்சியாக அமைய வேண்டுமெனவும் டான்சிக் ஜெர்மனி வசமாகவும் விரும்பினர். இக்காரணங்களால் ஜெர்மனிக்கும் போலந்துக்குமிடையே பகை மூண்டிருந்தது.
 
பிரிட்டனும் பிரான்சும், ஜெர்மனிக்கு எதிராக போலந்துக்கு உதவுவதாக உறுதியளித்திருந்தன. ஜெர்மனி போலந்தின் மீது படையெடுத்தால் ஜெர்மனியின் மேற்கு எல்லையில் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருந்தன. 1939 இல் போலந்து-ஜெர்மனி பேச்சு வார்த்தைகள் முறிந்து போர் மூளுவது உறுதியானது. ஆகஸ்ட் 23, 1939 இல் நாசி ஜெர்மனி மற்ற நாடுகள் எதிர்பாராத விதமாக சோவியத் ஒன்றியத்துடன் ஒரு கூட்டுறவு உடன்படிக்கை செய்து கொண்டது. [[மோலடோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தம்]] என அழைக்கப்பட்ட இவ்வொப்பந்ததின் படி போலந்தைக் கைப்பற்றி இரு நாடுகளும் அதனை தங்களிடையே பிரித்துக் கொள்ள ஏற்பாடாயிற்று. பிரிட்டனும் பிரான்சும் ஜெர்மனியைத் தாக்கினால் அதன் உதவிக்கு வருவதாகவும் சோவியத் ஒன்றியம் ஒப்புதல் அளித்தது. இதன் பின் போர் மூளக் காரணிகளை உருவாக்க ஜெர்மானிய நாசப் படைகள் போலந்தில் தாக்குதல்களைத் தொடங்கினர். செப்டம்பர் 1, 1939 அன்று ஜெர்மானியப் படைகள் போலந்து எல்லையைக் கடந்து தங்கள் படையெடுப்பைத் துவங்கின.
[[பகுப்பு:போலந்து]]
 
{{Link FA|hu}}
{{Link FA|it}}
{{Link FA|th}}
{{Link GA|no}}
{{Link GA|uk}}
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1828910" இருந்து மீள்விக்கப்பட்டது