வீளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: de:Pfeifen is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சி clean up, replaced: {{Link FA|de}} →
வரிசை 1:
{{listen | help = no | pos = right| filename = Human_whistling.ogg | title = Whistling | description = மாந்தரின் வீளை ஒலி | format = [[Ogg]]}}
[[படிமம்:Duveneck Whistling Boy.jpg|thumb|''வீளையடிக்கும் சிறுவன்'', ஃவிராங்கு துவெனெக்கு (1872)]]'''வீளை''' என்பது வாயால் எழுப்பப்படும் ஒருவகை இசை. உல்லாசமாக உலவும் காலத்தில் சிறுவர் வீளை ஒலியை இசையுடன் எழுப்பி மகிழ்வர். வாயைக் குவித்து எழுப்பும்போது அது இன்னிசையாக வரும். வாயில் கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் சேர்த்து வைத்தோ, ஆள்காட்டி விரலை மட்டும் மடித்து வைத்தோ எழுப்பப்படும் வீளை ஒலி பேரொலியாக இருக்கும். விரல் வைத்து ஒலிக்கும் வீளையைச் சங்கப்பாடல்கள் '''மடிவிடு வீளை''' எனக் குறிப்பிடுகின்றன.

காதலன் காதலியின் கவனத்தை ஈர்க்க வீளையிசையைப் பயன்படுத்துவதும் உண்டு. தொழிலுக்குப் பயன்படும் வீளையிசை பற்றிச் சங்கப்பாடல்கள் சுவையான செய்திகளைத் தருகின்றன.
வரிசை 12:

===== வீளை பயன்பாடு =====
* உமணர் உப்புவண்டி ஓட்டும்போது வீளை ஒலி எழுப்புவர். அது வண்டி இழுக்கும் எருது கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் மணியின் ஒலியோடு சேர்ந்து ஒலிக்கும். பாலை நில வழியில் பொருள்தேடச் செல்வோருக்கு இந்த ஒலிகள் ஆள் துணை இருக்கிறது என்னும் ஆறுதலைத் தரும். <ref>
உமணர்

ஊர் கண்டன்ன ஆரம் வாங்கி,

வரிசை 20:
ஓமை அம் பெருங் காட்டு வரூஉம் வம்பலர்க்கு

ஏமம் செப்பும் (அகநானூறு 191)</ref>
* இடையனின் வீளை ஒலியைக் கேட்டதும் ஆட்டுக்குட்டியைக் கவர வந்த நரி பயந்து ஓடிவிடும். <ref>
தண்டு கால் ஊன்றிய தனி நிலை இடையன்,

மடி விடு வீளை கடிது சென்று இசைப்ப,

தெறி மறி பார்க்கும் குறு நரி வெரீஇ,

முள்ளுடைக் குறுந் தூறு இரியப் போகும் (அகநானூறு 274)</ref>
* காட்டில் ஆடு மேய்க்கும் இடையன் மேயும் ஆடுகளை அழைத்துத் திருப்புவதற்காக எழுப்பும் வீளை ஒலி கேட்டு முயல் பயந்து ஓடி புதரில் ஒளிந்துகொள்ளும். <ref>
காடு உறை இடையன் யாடு தலைப்பெயர்க்கும்

மடி விடு வீளை வெரீஇ, குறு முயல்

மன்ற இரும் புதல் ஒளிக்கும் (அகநானூறு 394)</ref>
* எயினர் காட்டு மாடுகளைப் பயந்தோடச் செய்ய வீளையொலி எழுப்புவர். <ref>
கடுகி அதர்அலைக்கும் கல்சூழ் பதுக்கை

விடுவில் எயினர்தம் வீளைஓர்த் தோடும்

நெடுவிடை அத்தம் (கைந்நிலை 13)</ref>
* யானையை ஓட்ட வீளை ஒலியைப் பயன்படுத்துவர். <ref>
மடிவிடு வீளையர் வெடிபடுத் தெதிரக்

கார்ப்பெய லுருமிற் பிளிறிச் சீர்த்தக

வரிசை 39:
சினந்திகழ் கடாஅஞ் செருக்கி மரங்கொல்பு

மையல் வேழம் (குறிஞ்சிப்பாட்டு 161)</ref>
* மான் வேட்டை ஆடுவோர் பெண்மானைக் கண்டதும் அதனை வேட்டையாடாமல், அதன் ஆண்மானைக் கண்டு வேட்டையாடுவதற்காக வீளை ஒலி எழுப்புவர். <ref>
வில்லுடை வீளையர் கல்லிடு பெடுத்த

நனந்தலைக் கானத் தினந்தலைப் பிரிந்த

வரிசை 58:
[[பகுப்பு:இசை]]
[[பகுப்பு:சங்ககால விளையாட்டுகள்]]

{{Link FA|de}}
"https://ta.wikipedia.org/wiki/வீளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது