ரெனே டேக்கார்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி clean up, replaced: {{Link FA|el}} →
வரிசை 15:
}}
 
'''ரெனே டேக்கார்ட்''' (அ) '''இரெனே தேக்கார்ட்டு''' (''René Descartes'' [[பிரெஞ்சு மொழி]]: {{IPA2|ʁə'ne de'kaʁt}}) ([[மார்ச் 31]], [[1596]] – [[பெப்ரவரி 11]], [[1650]]), ஒரு [[பிரான்ஸ்|பிரான்சு]] நாட்டு மெய்யியல் அறிஞர். இவர் வழக்கறிஞராகவும், அரசியல்வாதியாகவும்கூடஇருந்தார். இவரைத் தற்கால [[மேற்குலக மெய்யியல்|மேற்குலக மெய்யியலின்]] தந்தை எனப் பலரும் கருதுவர். இவர் [[கணிதம்|கணிதத்துறையின்]] மேதைகளில் ஒருவர். இவர் [[இலத்தீன்]] மொழியில் ''ரெனேட்டசு கார்ட்டேசியசு'' (''Renatus Cartesius'') என அறியப்படுகின்றார்.
 
இவர் 1596 இல் பிரான்சு நாட்டில் பிறந்தவர். இவர் சிறு வயதிலேயே தன் தாயை இழந்தவர். இவரின் தந்தை ஒரு அரசியல்வாதி. இவர் கல்லூரியில் கணிதம் பயின்றார். அதன்பாற் கொண்ட அன்பினால் இயற்பியலையும் பயின்றார். இவர் ஓரு சிறந்த எழுத்தாளர். தனது இளமையை பெரும்பாலும் டச்சுக் குடியரசில் கழித்த இவர் நவீன தத்துவவியலின் தந்தை எனப்புகழப்படுகிறார். இவருடைய எழுத்துகளில் தற்காலத்தில் மிக அதிகமாக வாசிக்கப்படும் மேற்கத்திய தத்துவங்களின் சாயல்கள் காணப்படும்.<ref name="Britannica">{{cite journal|first1=Richard A. |last1=Watson |authorlink1=Richard Watson (philosopher) |title=René Descartes |work=Encyclopædia Britannica |publisher=Encyclopædia Britannica Online. Encyclopædia Britannica Inc |date=31 March 2012 |url=http://www.britannica.com/EBchecked/topic/158787/Rene-Descartes |accessdate=31 March 2012}}</ref> இவருடைய 'மெடிடேசன்ஸ் ஆப் பர்ஸ்ட் பிலாசபி'(Meditations on First Philosophy) என்ற நூல் பல பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
 
இவரின் கண்டுபிடிப்பான கார்டீசிய ஆய முறைமை (Cartesian coordinate system) கணிதத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. மேலும் பகுப்பாய்வு வடிவியலில் (analytical geometry) பெரிதும் பணியாற்றினார். இவரின் கண்டுபிடிப்புகள் பொறியியல், கணிதம், இயற்பியல் என பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.
வரிசை 25:
மேலும் மதங்களில் காணப்படும் தூய ஆவி, மற்றும் சாத்தான்களை பற்றி ஆராய்ந்து அவைகள் மனிதர்களால் மனிதர்களுக்கு திணிக்கப்பட்ட மூடநம்பிக்கைகள் மட்டுமே என்று கூறினார். இதனால் இவர் பல வழக்குகளை சந்தித்தார். ஆவிகளை ஆராயும் பணியில் இவர் தன்னை ஒரு ஆவி போல கற்பனை செய்து கொண்டார். பின்னர் அதன் உருவம், செயல் அனைத்தையும் கற்பனை செய்ய அவருக்கு மனம் தேவைப்பட்டது. அப்போது தான் அவருக்கு மனம் தொடர்பான சந்தேகம் எழுந்தது. மனம் என்றால் என்ன? அதுவும் கூட ஒரு வகையான சிந்தனையின் வெளிப்பாடுதான் என சிந்தித்தார். ஆகவே மனம் என்பது மூளை கொடுத்த சிந்தனையின் அதீத வெளிபாடு மட்டுமே என்று கூறினார். இந்த ஆராய்ச்சிக்காக இவர் தனது வீட்டை 17ம் நூற்றாண்டில் மாற்றியமைத்தார். இவரின் அறை ஒரு அடுப்பை போன்றது. அந்த அறையின் உட்புறத்தில் வெப்பம் வெளியிடுமாறு பலவகை முன் ஏற்பாடுகளுடன் கட்டப்பட்டது. ஆகையால் அக்காலத்தில் இவரை பலர் மனநோயாளி என்று நினைத்தனர்.
 
இவரின் வித்தியாசமான தேடுதலினால் இவரின் நண்பர் வட்டம் மிக குறைவாக காணப்பட்டது. இவர் ஒரு நாளின் பெரும் பகுதியை தனியே தன் அறையிலேயே கழிப்பார். தற்போது அவர் இருந்த அறை பிரான்சு அரசால் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இவரின் இந்த தத்துவம் மத சடங்குகளில் பல முரண்பாடுகளை ஏற்படுத்தியதால், பல வழக்குகளை சந்தித்தார். பின் அனைவரின் முன்பு பொது மன்னிப்பு கேட்டதால் இவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது.
 
ரேனே இயற்கையின் உண்மையான தத்துவங்களை ஆராய்கையில் பல மத ரீதியான கருத்துகள் உடைக்கப்பட்டன. அவரின் தத்துவார்த்தங்களின் வழி இவ்வாறே காணப்பட்டது<ref>Thus, all Philosophy is like a tree, of which Metaphysics is the root, Physics the trunk, and all the other sciences the branches that grow out of this trunk, which are reduced to three principals, namely, Medicine, Mechanics, and Ethics. By the science of Morals, I understand the highest and most perfect which, presupposing an entire knowledge of the other sciences, is the last degree of wisdom</ref>.
வரிசை 80:
[[பகுப்பு:1650 இறப்புகள்]]
 
{{People-stub}}
 
{{Link FA|elPeople-stub}}
"https://ta.wikipedia.org/wiki/ரெனே_டேக்கார்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது