"நேர்மின்னி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

19 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up, removed: {{Link FA|lmo}}
(*உரை திருத்தம்*)
சி (clean up, removed: {{Link FA|lmo}})
'''நேர்மின்னி''' (proton, புரோத்தன்) என்பது [[அணுக்கரு]]வின் உள்ளே இருக்கும் [[மின்மம்|நேர்மின்மம்]] கொண்ட ஓர் [[அணுவடித்துகள்|அணுக்கூறான துகள்]] ஆகும். நேர்மின்னியின் [[மின்மம்|மின்ம]] அளவானது 1.602 × 10<sup>−19</sup> C [[கூலாம்]] ஆகும். இதுவே ஓர் அடிப்படை மின்ம அலகும் ஆகும். இதன் [[திணிவு]] (பொருண்மை) 1.672 621 71(29) × 10<sup>−27</sup> கிலோ கிராம் (kg) ஆகும். இது ஓர் [[எதிர்மின்னி]]யின் திணிவைக் காட்டிலும் 1836 மடங்கு அதிகம் ஆகும். நேர்மின்னி ஒரு உறுதியான அணுத்துகள் (துணிக்கை) எனக் செயல்முறை ஆய்வுகள் காட்டுகின்றன. இதன் [[அரைவாழ்வுக் காலம்|அரைவாழ்வுக் காலத்தின்]] மிகக் குறைந்த எல்லை ஏறத்தாழ 10<sup>35</sup> ஆண்டுகள் எனக் கணித்துள்ளனர்<ref>சில கோட்பாடுகள் நேர்மின்னிகள் சிதைவடையக் கூடியன எனக் கூறுகின்றன</ref>
 
எல்லா [[அணு]]க்களிலும் இந்த நேர்மின்னியானது பல்வேறு எண்ணிக்கைகளில் அணுக் கருவினுள் இருக்கும். [[ஹைட்ரஜன்]] அணுவில் ஒரே ஒரு நேர்மின்னிதான் அணுக்கருவில் இருக்கும். ஓர் அணுவின் கருவினுள் எத்தனை நேர்மின்னிகள் இருக்கின்றன என்பதே அவ் அணுவின் [[அணுவெண்]] எனப்படுவது. இருவேறு அணுக்கள் ஒரே எண்ணிக்கையில் நேர்மின்னிகள் கொண்டு இருக்கலாகாது. எனவே ஒரு பொருளானது மற்றொரு பொருளில் இருந்து வேறுபடுவது என்பது அடிப்படையில் இந்த நேர்மின்னி எண்ணிக்கையில்தான் அடங்கும். ஒரு அணுவானது [[தங்கம்|தங்க]] அணுவா, [[வெள்ளி (உலோகம்)|வெள்ளி]] அணுவா, [[கரிமம்|கரிம]] அணுவா என்பதெல்லாம், அவ்வணுவில் எத்தனை நேர்மின்னிகள் இருக்கின்றன என்பதைப் பொருத்தே அமையும்.
 
எந்த ஓர் அணுவிலும், அதிலிருக்கும் ஒவ்வொரு நேர்மின்னிக்கும் எதிராக ஒரு [[எதிர்மின்னி]] இருப்பது அடிப்படையான தேவை ஆகும். ஏனெனில் அணுக்கள் தன் இயல்பான நிலையில் [[மின்மம்]] அற்ற ஒன்றாகும். நேர்மின்னியின் நேர்மின்மமானது எதிர்மின்னியின் எதிர்மின்மத்தால் முழு ஈடாக்கி மின்மம் அற்று இருக்கும். [[உராய்வு]] அல்லது [[வேதியியல் வினை]] முதலிய எக் காரணத்தினாலும் எதிர்மின்னிகள் ஓர் அணுவில் இருந்து பிரிய நேர்ந்தால், அவ் அணுவானது [[மின்மமாக்கல்|மின்மமாக்கப்படும்]].
 
நேர்மின்னி அல்லது எதிர்மின்னியின் எண்ணிக்கையைக் கொண்டு இயற்கையில் 94 வகையான வெவ்வேறு அணுக்கள் உள்ளனவென்று கண்டுள்ளனர். இவை தவிர, இன்று செயற்கையாகவும் மிகக் குறுகிய காலமே சேர்ந்திருக்கும் [[செயற்கை அணு]]க்களையும் அறிவியல் அறிஞர்கள் ஆக்கியுள்ளனர்.
[[பகுப்பு:மின்னியல்]]
[[பகுப்பு:அணுக்கருவியல்]]
 
{{Link FA|lmo}}
 
[[ml:പ്രോട്ടോണ്‍]]
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1830295" இருந்து மீள்விக்கப்பட்டது