வண்ணார்பண்ணை நாவலர் மகா வித்தியாலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Navalar School1.jpg|thumb|300px|வண்ணார்பண்ணை நாவலர் மகாவித்தியாலயத்தின் முகப்புத் தோற்றம் (2004).]]
'''வண்ணார்பண்ணை நாவலர் மகாவித்தியாலயம்''' [[ஆறுமுக நாவலர்|ஆறுமுக நாவலரால்]] யாழ்ப்பாண நகரத்திலுள்ள [[வண்ணார்பண்ணை (யாழ்ப்பாணம்)|வண்ணார்பண்ணை]] என்னுமிடத்தில் நிறுவப்பட்டது. அக்காலத்தில் கிறிஸ்தவ மிஷனரிமார்களால் தொடங்கப்பட்ட மேல்நாட்டு முறைப்படி [[கல்வி]] கற்பிப்பதற்கான [[பாடசாலை|பாடசாலைகளில்]], இந்துப் பிள்ளைகள் மேல் [[கிறிஸ்தவ சமயம்|கிறிஸ்தவ மதம்]] வலிந்து திணிக்கப்படுவதையும், உள்ளூர்ப் [[பண்பாடு|பண்பாடுகள்]] சிதைக்கப் படுவதையும் எதிர்த்து, [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணப்]] பிள்ளைகளுக்கு அவர்களது பண்பாட்டுச் சூழலில், நவீன பாடங்களைக் கற்பிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதே இப் பாடசாலை. இதனால் இது யாழ்ப்பாண மக்களின் தேசிய எழுச்சியின் சின்னமாகவும் திகழ்கிறது எனலாம். இது ஆண், பெண் இருபால் மாணவர்களும் பயிலும் ஒரு கலவன் பாடசாலையாகும்.
 
==அமைவிடம்==
 
யாழ்ப்பாணத்தில் நாவலர் சந்தி என அழைக்கப்படும், [[காங்கேசந்துறை வீதி]], [[நாவலர் வீதி]]கள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது இப் பாடசாலை. [[யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி]], [[வண்ணார்பண்ணை வைத்தீஸ்வராக் கல்லூரி]] என்பவற்றுக்கு அண்மையில் அவை இரண்டுக்கும் இடையில் இது உள்ளது. மாவட்டத்தின் மிகவும் முக்கியமான அமைவிடத்தைக் கொண்டிருந்தபோதும் இப்பாடசாலை, பெரும்பாலும் அயலிலுள்ள மாணவர்கள் மட்டுமே கல்வி கற்கும் பாடசாலையாக இருக்கிறது.
 
==இவற்றையும் பார்க்கவும்==