வண்ணார்பண்ணை நாவலர் மகா வித்தியாலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வண்ணார்பண்ணை நாவலர் மகாவித்தியாலயம், வண்ணார்பண்ணை நாவலர் மகா வித்தியாலயம் என்ற தலைப்புக்கு �
No edit summary
வரிசை 5:
 
யாழ்ப்பாணத்தில் நாவலர் சந்தி என அழைக்கப்படும், [[காங்கேசந்துறை வீதி]], [[நாவலர் வீதி]]கள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது இப் பாடசாலை. [[யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி]], [[வண்ணார்பண்ணை வைத்தீஸ்வராக் கல்லூரி]] என்பவற்றுக்கு அண்மையில் அவை இரண்டுக்கும் இடையில் இது உள்ளது. மாவட்டத்தின் மிகவும் முக்கியமான அமைவிடத்தைக் கொண்டிருந்தபோதும் இப்பாடசாலை, பெரும்பாலும் அயலிலுள்ள மாணவர்கள் மட்டுமே கல்வி கற்கும் பாடசாலையாக இருக்கிறது.
 
==வரலாற்றுப் பின்னணி==
 
நாவலர் நிறுவிய இப்பாடசாலையின் நோக்கம் பெரு வெற்றி பெற்றது எனச் சொல்லமுடியாது. எனினும், பொதுவாக யாழ்ப்பாணச் சமூக வரலாற்றிலும், குறிப்பாக அதன் கல்வி வரலாற்றிலும், இதன் தோற்றமும், இது தோன்றுவதற்கான காரணங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
 
சைவத்தைப் பரப்புவதற்காகவும், கிறித்தவ மதத்துக்கு இந்துக்களை மதம் மாற்றுவதை எதிர்ப்பதற்காகவும் கிறிஸ்தவ மிஷன் பாடசாலையில் தான் வகித்த பணியைத் துறந்து வெளியேறிய நாவலர், இந்து சமயத்தின் பெருமைகளை எடுத்துச் சொல்வதன் மூலமும், பாடசாலைகளை உருவாக்குவதன் மூலமும், இந்து சமயத்தை மறுமலர்ச்சியுறச் செய்து அதனைப் பரப்புவதற்காக முப்பது ஆண்டுகள் பணி புரிந்தார் என ''இலங்கையில் கல்வி வரலாறு'' பற்றி நூலொன்றை எழுதிய கே. எச். எம் சுமதிபால என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
 
பிற்கால ஆய்வாளர்கள் சிலர், முழு யாழ்ப்பாணச் சமூகத்தினதும் நலன்களைக் கருத்தில் கொள்ளாமல், இந்துப் பண்பாடு என்னும் பெயரில் யாழ்ப்பாணத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வு காட்டும் சமூக அமைப்பைத் தக்கவைத்துக் கொள்ளவே நாவலர் முயன்றார் என்கின்றனர்.
 
==இவற்றையும் பார்க்கவும்==