பரதநாட்டியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *எழுத்துப்பிழை திருத்தம்*
சி *திருத்தம்*
வரிசை 10:
பரத நாட்டியத்திற்கு பாடல், [[நட்டுவாங்கம்]], மற்றும் இசைக்கருவிகளின் துணை தேவை. [[வீணை]], [[புல்லாங்குழல்]], [[வயலின்]], [[மிருதங்கம்]] ஆகிய இசைக்கருவிகள் இவற்றில் சில. இசைக்கலைஞர்கள் மேடையின் ஒருபுறமாக அமர்ந்து இசைக்க, நடனம் ஆடுபவர் மேடையின் மையப்பகுதியில் ஆடுவார். நடனம் ஆடுபவர், நாட்டியத்திற்காக பிரத்யேகமாக தைக்கப்பட்ட வண்ணப் பட்டாடைகள் அணிந்து இருப்பார். மேலும் பரத நாட்டியத்திற்கான நகைகளையும், காலில் [[சலங்கை]]யும் அணிந்திருப்பார்.
 
பரத நாட்டியம் பயிற்றுவிப்பதில் பல்வேறு பாணிகள் உள்ளன. அவற்றில் சில, 'பந்தநல்லூர் பாணி', 'வழுவூர் பாணி', 'தஞ்சாவூர் பாணி', 'மைசூர் பாணி', 'காஞ்சிபுரம் பாணி' ஆகியவை ஆகும். இக்கலையின் ஆசிரியர்களில், '[[வழுவூர் ராமையாபி. இராமையா பிள்ளை]]', '[[திருவாளப்புத்தூர் சுவாமிநாதபிள்ளை]]', '[[தனஞ்சயன்]]', '[[அடையார் லக்ஷ்மணன்]]', '[[கலாநிதி நாராயணன்]]' ஆகியோர் குறிப்பிடத்தக்கவர் ஆவர்.
 
== வரலாறு ==
வரிசை 18:
 
== மாதவியின் பதினொரு வகை ஆடல்கள் ==
ஆடல், பாடல், அழகு ஆகிய மூன்றிலும் சிறந்த மகளிர் மன்னர் சபையில் ஆடினர். சான்றாகக் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "[[சிலப்பதிகாரம்]]"காப்பியம். இந் நூலில் ஆடல் நங்கையாக மாதவி சித்தரிக்கப்படுகிறாள். சோழ மன்னன் திருமாவளவன் முன்னிலையில் மாதவி அரங்கேறினாள். இவள் நாட்டிய நன்னூல் கூறும் விதிகளுக்கு அமைய ஆடலை நன்கு பயின்றவள். ஆடலிலும், அழகிலும் சிறந்தவள். வலது கால் முன் வைத்து ஆடல் அரங்கு ஏறினாள். பாட்டிசை, குழல் இசை, யாழ் இசை, தண்ணுமை என்னும் மத்தள இசை, கைத்தாள இசை ஆகிய ஐந்து வகை இசையும் சேர்ந்த இசைக்கு ஏற்ப மாதவி பதினொரு வகை ஆடல்களை ஆடினாள். அவள் ஆடிய ஆடல் வகைகளாக அல்லியம், குடக்கூத்து, மல்லாடல், கொடுகொட்டி, பாண்டரங்கம், குடக்கூத்து, துடிக்கூத்து, பேடிக்கூத்து , கடையக்கூத்து, மரக்கால் கூத்து, பாவைக் கூத்து என்பனவற்றை சிலப்பதிகாரம் கூறுகிறது.
 
== கோயிலும் நாட்டியமும் ==
 
கோயில்களில் ஆடலும் பாடலும் இடம் பெறுவது தமிழர் சமய மரபு. கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் முதலாம் இராஜராஜசோழன் தஞ்சையில் "ஸ்ரீராஜராஜேஸ்வரம்" என்னும் பெரிய கோயிலைக் கட்டினான். இக்கோயிலில் ஆடலும் பாடலும் சிறப்பாக நிகழ ஏற்பாடு செய்தான்.
 
வரி 27 ⟶ 26:
 
== தஞ்சை நால்வர் ==
 
சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேலு ஆகியோர் "தஞ்சை நால்வர்" என்று அழைக்கப்படுகின்றனர். இந்த நால்வரும் சகோதரர்கள். கி.பி.19 ஆம் நூற்றாண்டில் தஞ்சையில் பிறந்து வாழ்ந்தவர்கள். நாட்டியக் கலையிலும் இசைக் கலையிலும் வல்லவர்கள். கோயில்களிலும் அரண்மனைகளிலும் ஆடியநிகழ்ச்சிகளைப் பொது மேடைக்குரிய நிகழ்ச்சிகளாக ஆக்கியவர்கள்.<ref name="ஞானாம்பிகை குலேந்திரன்"/> தஞ்சை மராத்திய மன்னர், திருவனந்தபுரம் மகாராஜா, மைசூர் மகாராஜா ஆகியோர் இவர்களை ஆதரித்து வளர்த்தனர். அதனால் மேடை நாட்டிய முறை இந்தியாவின் தென்மாநிலங்களில் எளிதாகப் பரவியது. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகியவை தென் மாநிலங்களில் பயன்படுத்தப்படும் மொழிகள். இம்மொழிப் பாடல்களும் மேடை நாட்டிய நிகழ்ச்சிகளில் இடம்பெற்றன. இது இக்கலைவடிவத்தின் ஒரு சிறப்பு அம்சமாகும். தஞ்சை நால்வர் நெறிப்படுத்திய ஆடல் முறைகளும், நிகழ்ச்சிகளும் இன்றளவும் கடைப்பிடிக்கப்படுகின்றன.<ref name="ஞானாம்பிகை குலேந்திரன்"/>
 
"https://ta.wikipedia.org/wiki/பரதநாட்டியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது