பழைய கற்காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
பொதுவாகப் பழையகற்காலத் தொடக்கத்தில் மக்கள், வேட்டையாடுபவர்களாயும், [[உணவு]] சேகரிப்போராயும் இருந்தனர். விடயங்களை விளக்குவதற்கு, முறைசாராத பழங்கதைகளைப் பயன்படுத்தியது, இக்காலத்தில் குறிப்பிடத் தகுந்த சிறப்பியல்புகளுள் ஒன்றாகும். இயல்பான தலைவர்களின் கீழ், தற்காலிகமாக ஒழுங்கமைப்பை உருவாக்குவதேயன்றி நிரந்தரமான தலைமையோ, ஆட்சியோ இருக்கவில்லை.
 
ஆண், பெண்களுக்கு இடையே ஏறத்தாளஏறத்தாழ சமநிலை நிலவியது. ஆண் வேட்டையில் ஈடுபடப் பெண் உணவு சேகரிப்பதிலும், குழந்தைகளைக் கவனிப்பதிலும் ஈடுபட்டாள். இதற்கு மேலுள்ள வேலைகளை இரு பகுதியினரும் பகிர்ந்து செய்ததாகவே தெரிகிறது. அவர்கள் [[தாவரம்|தாவரங்கள்]], [[மூலிகை]]கள் என்பன பற்றிக் குறிப்பிடத்தக்க அறிவைப் பெற்றிருந்தனர். இதனால் அவர்களுடைய உணவு சுகாதாரமானதாக இருக்க முடிந்தது.
 
அவர்களுடைய தொழில்நுட்பத் திறனை, அவர்கள் உருவாக்கிய, உடைக்கப்பட்ட கற்களினாலும், தீக்கல்லினாலும் ஆன பயன்பாட்டுப் பொருட்கள் (''artifacts''), [[மரம்]], களிமண், [[விலங்கு]]ப் பகுதிகளின் பயன்பாடு, ஆகியவற்றின் மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது. அவர்களுடைய கருவிகள் பல்வேறுபட்டவை. [[கத்தி]]கள், [[கோடரி]]கள், சுரண்டிகள், [[சுத்தியல்]]கள், [[ஊசி]]கள், [[ஈட்டி]]கள், [[தூண்டில்]]கள், [[கேடயம்|கேடயங்கள்]], கவசங்கள், [[அம்பு வில்|அம்பு விற்கள்]] ஆகியவை இவற்றுள் அடங்கும்.
"https://ta.wikipedia.org/wiki/பழைய_கற்காலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது