இலங்கைத் தமிழர் இனப்படுகொலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{துப்புரவு}}
'''இலங்கையின் தமிழருக்கு எதிரான இனப்படுகொலை தீர்மானம்''' என்பது இலங்கை [[பிரித்தானியா|பிரித்தானியாவில்]] இருந்து சுதந்திரம் அடைந்தது முதல் [[இலங்கைத் தமிழர் இனப்படுகொலை|இலங்கை அரசு தமிழருக்கு எதிராக இனப்படுகொலை]] நடத்தி வருகிறது என்பதை நிலைநிறுத்தியும், சுதந்திரமான அனைத்துலக விசாரணையையும் நீதியையும் வேண்டியும் பெப்ரவரி 10, 2015 அன்று [[வட மாகாண சபை]]யில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட ஒர் அதிகாரப்பூர்வ தீர்மானம் ஆகும். இந்தத் தீர்மானம் சட்டத்துறை வல்லுனர்கள், பேராசிரியர்கள், அரசியல் வல்லுனர்களின் உள்ளீடு பெறப்பட்டு, போதிய தரவுகள் திரப்பட்டு நிறைவேற்றியதாக இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்து வட மாகாண சபை முதல்வர் [[க. வி. விக்னேஸ்வரன்]] நிறைவேற்றிய உரையில் குறிப்பிட்டார்.<ref name="விக்னேஸ்வரன்_உரை"/> இந்தத் தீர்மானம் தொடர்பாக தமிழர் அமைப்புகள், இலங்கையின் அரசு, கட்சிகள், வெளிநாடுகள் பலதரப்பட்ட கருத்துக்களை வெளியிடுள்ளன.
{{ஈழப் போர் காரணங்கள்}}
{{கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் இலங்கை}}
'''இலங்கைத் தமிழர் இனப்படுகொலை''' என்பது பெரும்பான்மை பேரினவாத சிங்கள அரசு கலவரங்களை ஏற்படுத்தியும், [[போர் வானூரிதி|வானூர்திகளில்]] இருந்து கண்மூடித்தனமாக [[குண்டு]] வீசியும், [[எறிகணை|எறிகணைகளை]] வீசியும், நேரடியாகச் சுட்டும், [[சித்திரவதை]] செய்தும் [[ஈழத்தமிழர்|ஈழத்தமிழர்களை]] [[படுகொலை]] செய்யும் [[இனவழிப்பு|இனவழிப்பைக்]] குறிக்கும். குறிப்பாக தமிழர்களின் நியாயமான பிரச்சினைகளுக்கு எவ்வித நடைமுறைத் தீர்வுகளையும் முன்வைக்காது, பொது மக்களைப் பொருட்படுத்தாது மேற்கொண்டுவரும் போரில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கொல்லப்படுதலைக் குறிக்கிறது. 2009 போரில் மட்டும் சுமார் '''20,000 மக்கள் கொல்லப்பட்டனர்''' என்று ஐக்கிய இராச்சிய ரைம்சு பத்திரிகை கூறுகிறது.<ref>[http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6383449.ece The hidden massacre: Sri Lanka’s final offensive against Tamil Tigers]</ref> மே தொடக்கத்தில் வெளியிடப்பட்ட ஐநா அறிக்கை சுமார் குறைந்தது 7000 மக்கள் வரையில் கொல்லப்பட்டதாக கூறுகிறது. எனினும் இந்த அறிக்கை முழுமையானது இல்லை என Amnesty Inernational சுட்டிக்காட்டி, முழுமையான தகவலை ஐநா வெளியிட வேண்டும் என்று கோரி உள்ளது.<ref>[http://web.archive.org/web/20090531011531/http://www.voanews.com/english/2009-05-30-voa1.cfm Rights Group Asks UN to Speak Out on Sri Lanka 'Bloodbath']</ref> கடந்த பல ஆண்டுகளாக 100 000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக பொது ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மானிட வரலாற்றில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மிக நீண்ட மிகப் பெரிய இனப்படுகொலை இதுவென கருதப்படுகிறது.
 
== பின்புலம் ==
1948 ஆம் ஆண்டில் இலங்கைச் சிங்களப் பெரும்பான்மை அரசு பிரித்தானியா அரசிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தைப் பெற்றது. அந்த நாள்முதல் தமிழர்களின் மனித உரிமைகளை மீறி திட்டமிட்ட இனவழிப்பை நடத்திவருகிறது. சிங்கள மொழிக்கு, சிங்களவர்கள் பின்பற்றும் பெளத்த சமயத்துக்கு சிறப்புரிமைகள் தந்து, தமிழர்களின் கல்வி வேலைவாய்ப்புக்களை அபகரித்து, திட்டமிட்ட குடியேற்றங்களை நிகழ்த்தி, நியாமற்ற முறையில் கைதுசெய்து சிறையில் அடைத்து தமிழர்களின் மனித உரிமைகளை இலங்கைச் பெரும்பான்மைச் சிங்கள அரசுகள் மீறின. இதன் உச்ச கட்டமாக தமிழர்கள் தொகை தொகையாக கொல்லப்பட்டனர்.
 
=== படுகொலைகள் ===
1958, 1977, 1983 ஆண்டுகளில் நடந்த இனக்கலவரங்கள் இவற்றில் குறிப்பிடத்தக்கவை. ஈழப் போராட்டம் வெடித்த பின்பு வானூர்திகளில் இருந்து கண்மூடித்தனமாக குண்டுவீசுதல், எறிகணை வீச்சு, நேரடித் தாக்குதல் போன்றவற்றின் மூலம் இதுவரை 100 000 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.அமெரிக்காவின் இரட்டை கோபுர தகர்ப்புக்குப்பின் தீவிரவாதத்தை முறியடிப்பதாக கூறிக்கொண்டு தமிழர்களின் நியாயமான உரிமைகளை பறிக்கும் சிங்கள அரசின் தமிழ் இன அழிப்புக்கு இந்தியா உள்பட, பல நாடுகள் பணம், பயிற்சி மற்றும் தளவாட உதவிகளை செய்துள்ளது மனிதாபிமானமற்ற செயல். ஐ.நா.மன்றமும், தமிழ் இன அழிப்பு நடந்து 6-ஆண்டுகள் கடந்த பின்னும் எந்த நடவடிக்கையும் எடுக்காமலிருப்பது எதிர்காலத்தில் உலக அமைதியின் மீது நம்பிக்கையை இழக்கச்செய்யும்.
 
=== தமிழரை வெளியேற்றல் ===
இலங்கை சிங்களவர்களுக்கு உரியது, ஆகவே தமிழர் வெளியேற வேண்டும் என்பது ஒரு நெடுங்கால திட்டமாக சிங்கள தீவரவாத செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்படுகிறது. இந்திய வம்சாவழித் தமிழர்கள் பெரும்பான்மையானோர் 1950 களில் இந்தியாவுக்கு மீண்டும் அனுப்பப்பட்டனர். இலங்கைத் தமிழர்களின் தாயகம் தமிழ்நாடே எனவே அங்கு செல்லுங்கள் என்று கூறப்படுகிறது. இலங்கை அரசு மேற்கொண்ட போர் உட்பட பல நடவடிக்கைகள் 1.3 மில்லியன் தமிழர்களை வெளியேற்றி விட்டது. தமிழ் முஸ்லீம்களுக்கும் தமிழருக்கும் இடையேயும், கிழக்கிலங்கைத் தமிழர் வடக்கிலங்கைத் தமிழருக்கு இடையேயும் விரிசல்களை ஏற்படுத்தி விட்டுள்ளது.<ref>Drive them out of the country. Although 1.3 million have already been driven out, there are still 2 million left. [https://archive.is/20120804000401/www.greenleft.org.au/2009/780/40219]</ref>
 
=== அடிமையாக்குதல் ===
 
== எதிர்ப்புப் போராட்டங்கள் ==
 
== தமிழர் படுகொலைகளை நியாயப்படுத்தல் ==
குறிப்பிட்ட தமிழர்களின் புலிகளுக்கான ஆதரவு பயங்கரவாதத்தை விளைவிக்கின்றது என்றும், போரில் புலிகளை அழிக்கையில் தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்படுவது தவிர்க்க முடியாது என்றும் இலங்கை அரசத் தரப்பால் கூறப்பட்டது. மேலும், புலிகள் பொது மக்களை கட்டாயமாகப் பயன்படுத்துகின்றனர் என்றும், அதனாலேயே பெருமளவு மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்றும் கூறப்பட்டது.
 
இலங்கை அரசை விட விடுதலைப் புலிகள் பெரும் தொகையான தமிழர்களையும் சிங்களவர்களையும் கொன்று குவித்துள்ளார்கள். அதனால் அவர்களை எந்த முறையினாலும் அழிப்பது தவிர்க்கமுடியாது எனப்பட்டது.
 
== தந்திரோபாய வழிகளின் தமிழினவழிப்புச் செய்தல் ==
=== இலங்கை தமிழ் பெண்களின் கட்டாயக் கருக்கலைப்பு ===
[[இலங்கைத் தீவு|இலங்கைத் தீவில்]] தமிழர்களை முற்றிலுமாக அழுத்தொழிக்கும் [[இலங்கைத் தமிழர் இனவழிப்பு |இனவழிப்பு]] நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் [[இலங்கை]] சிங்கள அரசு போரினால் மட்டுமன்றி பல்வேறு வழிகளில் [[தமிழர்]] இனத்தையும் வளர்ச்சியையும் முடக்கி வருகின்றது. இதற்கான பல்வேறு உத்திகளைத் திட்டமிட்டு மிகத் தந்திரோபாயமாக கையாண்டு வருகின்றது.
 
இலங்கையில் [[போர்]] நடைப்பெற்று வரும் [[வன்னி|வன்னிப்]] பகுதிகளில் இருந்து வெளியேறி [[வவுனியா|வவுனியாவுக்கு]] வரும் [[தமிழர்|தமிழர்களில்]] கருவுற்றிருக்கும் தாய்மார்களின் [[கரு|கருக்களைக்]] கலைக்குமாறு [[வவுனியா]] மருத்துவமனை அதிகாரிகளுக்கு சிறிலங்கா படை உயரதிகாரிகளால் உத்தரவிடப்பட்டது.<ref>[http://www.puthinam.com/full.php?2b1VoKe0decYe0ecAA4U3b4M6DL4d2f1e3cc2AmS2d434OO3a030Mt3e கோர வடிவம் எடுக்கின்றது தமிழின அழிப்பு ]</ref><ref>[http://tamilwin.com/view.php?2aIWnTe0dlj0W0ecGG7r3b4P9EM4d2g2h3cc2DpY3d436QV2b02ZLu3e பயங்கரவாத அரசின் தமிழ் இன அழிப்பின் கொடூரம் ]</ref> போரினால் அவலப்பட்டு [[வவுனியா]] வரும் [[தமிழ்]] கர்ப்பிணிப் பெண்களை கருக்கலைப்பு செய்து கொண்டால் நல்ல பராமரிப்பு கிடைக்கும் என ஏமாற்றியும், [[சிங்களம்]] மொழி தெரியாதத் தமிழர்களிடம் [[சிங்களம்|சிங்கள]] மொழியில் அச்சிடப்பட்ட அனுமதிப் படிவங்களில் வற்புறுத்தி கையொப்பமிட வைத்தும் கருக்கலைப்பு செய்யப்பட்டது.
 
இது [[தமிழர்|தமிழர்களின்]] வருங்காலச் சந்ததியினர்களும் [[இலங்கை]] இலங்கை தீவில் இருக்கக் கூடாது என்பதற்கான திட்டம்மிட்ட நடவடிக்கையாகும். ஒரு [[இனம்|இனத்தைக்]] கருவிலேயே அழித்தொழிக்கும் செயலுமாகும்.
 
== இவற்றையும் பாக்க ==
 
== மேற்கோள்கள் ==
<references />
{{Reflist|refs=
 
<ref name="விக்னேஸ்வரன்_உரை">{{cite web |title=இனப்படுகொலை சம்பந்தமான பிரேரணையை முன்வைத்து விக்கினேஸ்வரன் ஆற்றிய உரை |url=http://www.pathivu.com/news/37658/57/d,article_full.aspx |publisher=pathivu.com |date=10 February 2015}}</ref>
}}
== வெளி இணைப்புகள் ==
* [http://tamilnanbargal.com/Thamizh-Eezham/Genocide ஈழ இனப்படுகொலை படங்கள்]
* [http://www.tamilguardian.com/files/File/NorthernProvincialCouncil/NPC%20resolution%20genocide%20of%20Tamils%20by%20GOSL%2010%20Feb%202015.pdf Resolution: Sri Lanka’s Genocide Against Tamils] - {{ஆ}}
* [http://www.muthukamalam.com/muthukamalam_katturai60.htm முத்துக்கமலம் இணைய இதழில் "சுயநலத்திற்காக ஒரு இன அழிப்பு" நோர்வே நக்கீரா கட்டுரை]
* [https://archive.is/20120804000401/www.greenleft.org.au/2009/780/40219 Sri Lanka: Genocide of the Tamil minority]
* [http://www.hrw.org/en/news/2009/02/03/sri-lanka-disregard-civilian-safety-appalling Sri Lanka: Disregard for Civilian Safety Appalling] - HRW
* http://www.haltgenocide.org/
* http://www.tamilidpcrisis.org/
* http://www.tamilsagainstgenocide.org/
* http://www.pearlaction.org/
* http://www.genocideintervention.net/educate/crisis/sri_lanka
* [http://tamilwin.com/view.php?2aIWnTe0dlj0W0ecGG7r3b4P9EM4d2g2h3cc2DpY3d436QV2b02ZLu3e தமிழ் பெண்களை கட்டாய கருக்கலைக்க மருத்துவமனைக்கு சிங்கள படை உத்தரவு]
* [http://www.paristamil.com/tamilnews/?p=28047 கோர வடிவம் எடுக்கின்றது தமிழின அழிப்பு: தமிழ் பெண்கள் கருக்கலைப்பு]
 
=== செய்திகள் ===
* [http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2009/05/29/AR2009052903409.html http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2009/05/29/AR2009052903409.html]
* [http://in.reuters.com/article/domesticNews/idINLQ20048120090526 Rights Group Asks UN to Speak Out on Sri Lanka 'Bloodbath' ]
* [http://www.thestar.com/news/world/article/642820 Over 20,000 Sri Lankan refugees killed as war ended: report]
* [http://in.reuters.com/article/domesticNews/idINLQ20048120090526 U.N. rights chief calls for Sri Lanka investigation]
 
[[பகுப்பு:இலங்கைத் தமிழர்]]
[[பகுப்பு:இனவாதம்]]
[[பகுப்பு:இனப்படுகொலைகள்]]
[[பகுப்பு:ஈழப் போராட்டக் காரணங்கள்]]
[[பகுப்பு:இலங்கையில் மனித உரிமைகள்]]
[[பகுப்பு:இலங்கை தமிழர் இனவழிப்பு]]
"https://ta.wikipedia.org/wiki/இலங்கைத்_தமிழர்_இனப்படுகொலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது