உரையாடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
=== வரையறை ===
[[படிமம்:Shimer College student and professor in conversation 2010.jpg|thumb|ஆசிரியர் மாணவி உரையாடல், சைமர் கல்லூரி]]
உரையாடல் என்றால் என்ன என்று தெளிவான விளக்கங்கள் எதுவுமில்லை. உரையாடலில் குறைந்தது இரண்டு பேர் பேசிக் கொள்வார்கள் என்று மட்டும் கூறலாம்.{{sfn|Warren|2006|p=8}} ஆனால், எது உரையாடல் இல்லை என்று கூற முடியும். வணக்கம் சொல்லிக் கொள்வது, மேல் நிலையில் உள்ளவர்கள் கீழ் நிலையில் உள்ளவர்களைப் பார்த்து இடும் கட்டளைகள் ஆகியன உரையாடல்கள் ஆகா.{{sfn|Warren|2006|pp=8-9}} மிகக் குறுகிய தலைப்புகளைப் பற்றிப் பேசுவதும் உரையாடல் ஆகாது.{{sfn|Warren|2006|p=9}} தார்ன்பரி என்பவர் உரையாடலைப் பற்றி, "உரையாடல் என்பது மனிதர்கள் செய்கின்ற ஒரு பேச்சுத் தொழில் (வினை). தங்களுக்குள் ஒரு உறவு முறையை ஏற்படுத்திக் கொள்ள இந்த வினையைச் செய்கின்றனர். இது முறை சாரா, செவ்வொழுங்கான வினை.{{sfn|Thornbury|2006|p=25}}. உரையாடலின் போது, உரையாடுபவர்கள் எந்த சட்ட முறைகளையும் பயன் படுத்துவதில்லை. பேசுவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒப்பான வாய்ப்பு கிடைக்கிறது" என்று கூறுகிறார்.
 
உரையாடல் எந்த சட்ட முறைகளையும் பின் பற்றுவதில்லை என்று சொன்ன போதிலும், நடத்தை நெறி கருதி, அங்கங்கே உள்ள பண்பாட்டு முறைகளைப் பின் பற்றியே ஆக வேண்டி இருக்கும். உரையாடல் ஒரு கூட்டு முயற்சியாக இருப்பதால், அது தொடர்பான சட்ட முறைகள் இன்றியமையாதவையாக ஆகின்றன. இந்த சட்ட முறைகளை மீறும் போது, உரையாடல் தொடர முடியாமற் போகும். சட்ட முறைகளை மீறாமல் இருக்கும் வரை, உரையாடல் தொடர்ந்து நடக்க ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைச் செய்து கொண்டிருக்கலாம். ஒரு சில நேரங்களில், கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ள, உரையாடலே உகமமான பரிமாற்றக் கருவியாகும். ஆனால், உரையாடலில் ஒரு சில சிக்கல்கள் இருக்கின்றன. எடுத்துக் காட்டாக, பேசுவது அனைத்தும் நினைவில் இருந்து மறைந்து கொண்டே போய்விடும்; அவற்றை மீண்டும் நினைவில் கொண்டு வந்து பார்ப்பது கடினம். இது போன்ற தேவைகள் ஏதும் இருப்பின், எழுத்து வழி உரையாடல் செய்வது நல்லது. கருத்துப் பரிமாற்றம் விரைவாக நடக்க வேண்டுமாயின், பேச்சு வழி உரையாடல் செய்வது சரியாக இருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/உரையாடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது