வெண்கலக்கால வீழ்ச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
'''வெண்கலக்கால வீழ்ச்சி''' அல்லது '''பிந்திய வெண்கலக்கால வீழ்ச்சி''' எனப்படுவது, ஏஜியப் பகுதி, தென்மேற்கு ஆசியா, கிழக்கு நடுநிலக்கடற் பகுதி ஆகிய பகுதிகளில் [[வெண்கலக்காலம்]], தொடக்க [[இரும்புக்காலம்|இரும்புக்காலத்துக்கு]] மாறியதைக் குறிக்கிறது. கடுமையானதாகவும், சடுதியானதாகவும், பண்பாட்டு அடிப்படையில் தகர்ப்புத்தன்மை கொண்டதாகவும் அமைந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வெண்கலக்காலத்தைச் சேர்ந்த ஏஜியப் பகுதி, [[அனத்தோலியா]] ஆகியவற்றில் காணப்பட்ட [[அரண்மனைப் பொருளாதாரம்]], கிரேக்க இருண்ட காலங்களின் தனித்தனி ஊர்ப் பண்பாடுகளாக மாறியது.
 
கிமு 1206க்கும் 1150க்கும் இடைப்பட்ட காலத்தில், அனத்தோலியாவிலும், சிரியாவிலும் இருந்த மைசீனிய இராச்சியம், இட்டைட்டுப் பேரரசு என்பவற்றிலும், சிரியாவிலும் கனானிலும் இருந்த புதிய எகிப்து இராச்சியத்திலும் ஏற்பட்ட பண்பாட்டு வீழ்ச்சி வணிகப் பாதைகளைத் தடைப்படுத்தி கல்வியறிவும் குறையக் காரணமாயிற்று.
 
[[பகுப்பு:கால வரிசைப்படி வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/வெண்கலக்கால_வீழ்ச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது