ஐவன் ஈலிச்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஸ்ரீகர்சனின் தானியங்கித் துப்புரவு
*உரை திருத்தம்*
வரிசை 1:
{{சான்றில்லை}}
{{Infobox philosopher
| region = மேற்கத்தைய மெய்யியல்
வரி 26 ⟶ 25:
 
ஐவன் ஈலிச் தான் பெற்ற அனுபவம், ஆற்றல் என்பனவற்றுடன் உலகினை புதிய கண்ணோட்டத்துடன் உற்று நோக்கலானார். இதனால், மதம் தொடர்பாகவும் மாறுபட்ட சிந்தனைகள் அவரிடங் காணப்பட்டது. 1951 இல் நியோக்கில் ஒருமத போதகராக பணியைத் தொடர்ந்த ஈலிச் அறியாமைக்கு எதிரான பலகருத்தாடல்களை முன்மொழிந்தார். அவரது திறமை, ஆற்றல், மற்றும் புலமை காரணமாக திருச்சபையிலே முதன்மை பெற்றார். எனினும், திருச்சபையின் செயற்பாடுகளை திறனாய்வுக்கு உட்படுத்தியமை அவருக்குப் பெரும் சங்கடத்தை உண்டு பண்ணியது. இவரது கல்வி சமநிலைப் போக்குடையதாகக் காணப்பட்டது. மேலாதிக்க சிந்தனையினை பாரதூரமாக வெறுத்தார். ஒடுக்கப்பட்ட அமெரிக்கக் குடியேற்றவாசிகளின் மீது தனது கவனத்தை திசைதிருப்பி அவர்களுக்குள் புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்த முனைந்தார்.
 
 
ஈலிச் 1956 ஆம் ஆண்டு பொன்சியிலுள்ள போட்டரிக்கோ கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் துணை முதல்வராகப் பணியாற்றினார். அக்காலத்தில் Everett reamer என்பவருடன் சேர்ந்து 'கல்வித் தலைமைத்துவம்' சம்பந்தமான ஆய்விலும் ஈடுபட்டார். தான் மேற்கொண்ட புரட்சிகரமானதும் மாறுபட்டதுமான அணுகுமுறைகள் காரணமாக பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறவேண்டி ஏற்பட்டது.
 
 
அமெரிக்க மிசனரிமாரை இலத்தின் அமெரிக்காவில் பணிபுரிய பயிற்சியளிக்கும் பல்கலாசார அமைப்புக்கான நிலையத்தை போடொம் (Pordham) பல்கலைக்கழத்தில் ஈலிச் ஸ்தாபித்தார். போப் 13ஆம் ஜோன் அவர்களுடன் இவருக்கு முரண்பாடு ஏற்பட்டது. இதன் விளைவாக வத்திக்கானை விட்டு வெளியேறுமாறு கட்டளையிடப்பட்டது. தேவாலயப் பொறுப்புக்களிலிருந்தும் போதகர் பதவியிலிருந்தும் ஈலிச் 1969ல் நீங்கிவிட்டார்.
 
 
1976ஆம் ஆண்டு முறையான கல்வியியலாளகளின் நிறுவனமயப்படுத்தலிலுள்ள வாய்ப்புக்கள் பற்றிக் கவனஞ் செலுத்தினார். 1977இல் பிரான்சிலுள்ள இடதுசாரிகளிடையே அவர் பிரபலம் பெற்றார். ஈலிச்சின் நவீன சிந்தனைகளும் கருத்தாடல்களும் இடதுசாரிகளைப் பெரிதும் கவர்ந்தன.
 
 
ஈலிச் 20ஆம் நூற்றாண்டின்; சிறந்த சிந்தனையாளர் ஆவார். அவர் வரலாற்றாசிரியராக, சமூகத் திறனாய்வாளராக, திருச்சபையின் பங்குத்தந்தையாக, பல்கலைக்கழக நிருவாகியாக, விரிவுரையாளராக, பேராசிரியர், நூலாசிரியர் எனப் பல வகிபாகங்களுக்குரியவர்.
 
== எழுதப்பட்டநூல்கள் ==
 
* பள்ளிக்கலைப்பு சமூகம்
* வலுவும் சமநிலையும்
வரி 49 ⟶ 42:
* மகிழ்ச்சிக்குரிய சாதனங்கள்
* நோவின் வரலாறு
 
 
== கல்விச் சிந்தனைகள் ==
 
கல்வியின் எதிர்மறைத் தாக்கங்கள் தொடர்பான ஈலிச்சின் கருத்தாடல்கள் சமூகத்தால் மிகவும் உன்னிப்பாக உற்று நோக்கப்பட்டன. 1977ஆம் ஆண்டு வெளியான "பள்ளிக் கலைப்பு சமூகம்" (Deschooling Society) எனும் அவரது நூல், கல்வி தொடர்பான மீள்சிந்தனைக்கு அடிப்படையானது. இதில் கல்வியை நவீன பொருண்மியத்துடன் தொடர்புபடுத்தி திறனாய்வு அடிப்படையில்; நோக்குகின்றார். அத்துடன் கல்வியிலுள்ள வினைத்திறனின்மை பற்றியும் சுயதேடலுடன் உள்ள கல்வியின் மேன்மை பற்றியும் அவர் ஆராய்கின்றார். பாடசாலைகளின் எதிர்மறைத் தாக்கங்கள் பற்றிய அவரது கருத்துக்கள் கற்றோர் மற்றும் எதிர்க்கருத்துக்கள் கொண்டோர் மத்தியில் வெகுவாகப் பரவியது; பள்ளிக் கல்வியைப் பெறாதோரின் கரிசனைக்கும் அது உள்ளானது.
 
வரி 60 ⟶ 51:
 
ஐவன் ஈலிச் பள்ளிக் கூடங்களை மட்டுமன்றி வேறு நிறுவனங்களையும் மிகக்கடுமையாக விமர்சனஞ் செய்தார். நிறுவனங்களும் தொழில் வாண்மையாளர்களும் எவ்வாறு மனிதப்பண்புகளுக்கு முரணாக நடந்துகொள்கின்றார்கள் என்பதன் மீது தனது கவனக்குவிப்பை செலுத்தினார். நிறுவனங்கள் மனிதர்களின் தன்னம்பிக்கையினைக் குறைத்து, அவர்களைக் கீழ்மைப்படுத்தி, பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆற்றலை அழித்துவிடுகின்றதென்பது அவரது கருத்தாகும். வைத்திய நிறுவனங்கள் உடல் நலத்திற்குரிய பாரிய அச்சுறுத்தலாகும். நவீன மருத்துவம் மக்களுக்கு நன்மையைவிட தீமையையே செய்கின்றது என்பதும் இவரது அவதானிப்பாகும். நிறுவனங்கள் மகிழ்ச்சிகரமான செயற்பாட்டுத்தன்மை கொண்டதாக விளங்க வேண்டும். தன்னிச்சையான, உருவாக்கும் தன்மையான, சூழலுடன் இணைந்த தன்மையான பண்புகள் நிறுவனங்களிடம் காணப்பட வேண்டும். இவை நிறுவனம் ஒன்றின் இன்றியமையாத பண்புகளாக அவரால் அடையாளங் காணப்பட்டன.
 
== வெளி இணைப்புகள் ==
 
*[http://ivan-illich.org Ivan-illich.org: The International Journal of Illich Studies] — ''an open access, interdisciplinary, bi-annual publication engaging the thought/writing of Ivan Illich and his circle.''
*[http://ivan-illich.org/wp-content/uploads/2013/02/4-Thirteen-Ways-of-Looking-at-Ivan-Illich.pdf Ivan-illich.org: Thirteen Ways of Looking at Ivan Illich]
*[http://ournature.org/~novembre/illich/ Ournature.org: Ivan Illich Archives]
*[http://www.preservenet.com/theory/Illich.html The Preservation Institute: Illich's writings on the web]
*[http://altruists.org/ivan_illich Altruists.org; Collection of Illich Resources, including MP3s]
*[http://www.davidtinapple.com/illich/ Davidtinapple.com: An extensive set of Illich's writings and recordings]
*[http://www.amconmag.com/article/2010/feb/01/00024/ Amconmag.com: The People's Priest]
*[http://www.pudel.uni-bremen.de/420en_beteiligte.html uni-bremen.de: Thinking After Illich]
*[http://www.opencollector.org/history/homebrew/tools.html Opencollector.org: Full text of ''Tools for Conviviality'']
 
[[பகுப்பு:1926 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஐவன்_ஈலிச்" இலிருந்து மீள்விக்கப்பட்டது