ஜாக் மைனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 1:
 
{{Infobox person
| name = ஜாக் மைனர் | image = Jack Miner.jpg
வரி 15 ⟶ 14:
}}
 
'''ஜாக் மைனர்''' (''Jack Miner'' ஏப்ரல் 10, 1865 – நவம்பர் 3, 1944) என்பவர் [[வட அமெரிக்கா]]வைச் சேர்ந்த பறவையியலாளர், சூழலியலாளர். இவர் வட அமெரிக்க பறவைகள் பாதுகாப்பின் தந்தை என்று போற்றப்படுகிறார். பள்ளிச் சென்று படிக்காத இவரது பெயர் பல கல்வி நிறுவனங்களுக்கு சூட்டப்பட்டது.
 
== வாழ்க்கையும், பணிகளும் ==
 
இவர் [[ஐக்கிய அமெரிக்கா]]வின் ஓஹியோ மாநிலத்தில் 1865இல் பிறந்தவர். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ஜான் தாமஸ் மைனர். குடும்பம் 1878-ல் [[கனடா]]வில் குடியேறியது. முறையான கல்வி கற்காத இவர், ஆரம்பத்தில் வேட்டைத் தொழில் செய்தார். பிறகு, அதை கைவிட்டு, பறவைகள் பாதுகாப்பில் ஆர்வம் காட்டினார்.
வரி 25 ⟶ 24:
ஆரம்பத்தில் ஒருசில காட்டு வாத்துகள் வந்தன. 1911 முதல் ஏராளமான வாத்துகள் வரத் தொடங்கின. அதற்கேற்ப குளத்தை பெரிதாக்கினார். 1913-ல் இவரது மொத்த இடமும் பறவைகள் சரணாலயமாக மாறிவிட்டது. ஏறக்குறைய 50 ஆயிரம் பறவைகள் அங்கு இருந்தன. இதைக் கண்ட அரசு இவரது முனைப்பை மேலும் விரி வாக்க நிதியுதவி அளித்தது. அங்கு ஏராளமான மரங்கள், புதர்களை வளர்த்தார். நீர்நிலைகளையும் அமைத்தார்.
 
== பறவை கண்காணிப்பு பட்டை ==
 
வலசை போகும் பறவைகளின் பாதையைக் கண் காணிக்க, அவற்றுக்கு பட்டயம் கட்டும் (Bird Banding) முறையை 1909-ல் மேம்படுத்தினார்.<ref>{{cite journal|last=Hanson|first=Harold C.|author2=Curry Campbell|title=The Kill of Wild Geese by the Natives of the Hudson-James Bay Region|journal=Arctic|date=1 January 1957|volume=4|pages=211–229}}</ref> உலகில் இத்தகைய முறையை முதன்முதலாக மேம்படுத்தியவர்களில் ஜாக் குறிப்பிடத்தக்கவர்.
 
நூற்றுக்கணக்கான பறவைகளுக்கு பட்டயம் கட்டப்பட் டது. பறவைகள் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு இது பயன்பட்டது.
வரி 37 ⟶ 36:
‘ஜாக் மைனர் மைக்ரேட்டரி பேர்ட் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பை இவரது நண்பர்கள் 1931-ல் உருவாக்கினர். பல இடங்களுக்கும் சென்று வனவிலங் குப் பாதுகாப்பு, சரணாலயங்கள், வனவிலங்குப் புகலிடங்கள் அமைப்பதன் அவசியம், தனது ஆய்வுகள் குறித்து உரையாற்றினார்.
 
== எழுதிய நூல் ==
 
தான் கண்டறிந்த பட்டய முறைகள் மற்றும் நீர்ப்பறவைகள் பாதுகாப்பு ஆய்வுகள் அடங்கிய ‘ஜாக் மைனர் அண்ட் தி பேர்ட்ஸ்’ என்ற புத்தகத்தை 1923-ல் வெளியிட்டார். முதல் பதிப்பின் 4 ஆயிரம் பிரதிகளும் 9 மாதங்களில் விற்பனையாகின. அதன் பிறகு, உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தார். அந்த புத்தகத்தின் பதிப்புகள் தற்போதும் வருகின்றன.<ref>Loo, Tina. ''States of Nature: Conserving Canada’s Wildlife in the Twentieth Century''. (Canada: UBC Press, 2006), p.66</ref>
 
== மறைவு ==
 
பறவைகள் பாதுகாப்புக்காகவே வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட ''ஜாக் மைனர்'' தனது 79 வயதில் 1944ஆம் ஆண்டு மறைந்தார்.
 
== மேற்கோள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:பறவையியல்]]
[[பகுப்பு:1865 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜாக்_மைனர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது