இன்குலாப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
'''இன்குலாப்''' (Inkulab) என்பவர் தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர், பத்தி எழுத்தாளர், [[பொதுவுடைமை]]ச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாளர் ஆவார். சமூகச் சிக்கல்கள், ஒடுக்குமுறைகள் போராட்டங்கள் ஆகியவற்றை மையப்படுத்தியே இவருடைய படைப்புகள் அமைந்திருந்தன. இன்குலாப் என்பதற்குப் புரட்சி என்று பொருள்படும்.
 
==பிறப்பும் படிப்பும்==
 
இன்குலாப்பின் இயற்பெயர் எஸ். கே. எஸ். சாகுல் அமீது. [[கீழக்கரை]] என்னும் ஊரில் பிறந்தார். இசுலாமியக் குமுகத்தில் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த நாவிதக் குடியில் பிறந்தார். இவருடைய தந்தை [[சித்த மருத்துவம்|சித்த மருத்துவர்]]. பள்ளிப் படிப்பைக் கீழக்கரையில் முடித்துவிட்டு [[சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவுக் கல்லூரி]]யில் புகுமுக வகுப்பில் சேர்ந்து படித்தார். அக்காலத்தில் [[மீரா]] என்னும் கவிஞர் அக்கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிந்தார். எனவே அவருடன் இன்குலாப்புக்கு நட்பு ஏற்பட்டது.
 
[[மதுரைத் தியாகராசர் கல்லூரி]]யில் இளங்கலை(தமிழ்) வகுப்பில் சேர்ந்து பயின்றார். படிப்பை முடித்து சென்னையில்[[சென்னை]]யில் உள்ள புதுக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். [[ஈரோடு தமிழன்பன்]], நா.பாண்டுரங்கன் போன்றோருடன் இன்குலாப் புதுக்கல்லூரியில் பணி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
==இந்தி எதிர்ப்புப் போர்==
வரிசை 18:
 
இளவேனில் என்பவர் நடத்திய [[கார்க்கி]] இதழில் கவிஞர் இன்குலாப்பின் தொடக்கக் கால கவிதைகள் வெளிவந்தன. தராசு, நக்கீரன், இனி, நாற்காலி, உண்மை, உங்கள் விசிட்டர் எனப் பல இதழ்களில் ஏராளமான கட்டுரைகளையும் கவிதைகளையும் அவ்வப்போது எழுதினார்.
சூரியனைச் சுமப்பவர்கள் என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். 'மார்க்சு முதல் மாசேதுங் வரை' என்னும் மொழியாக்க நூலை எஸ். வி. ராஜதுரையும் இன்குலாப்பும் இணைந்து எழுதினார்கள்.
நூலை எஸ். வி. ராஜதுரையும் இன்குலாப்பும் இணைந்து எழுதினார்கள்.
'''மனுசங்கடா, நாங்க மனுசங்கடா''' என்னும் இவர் எழுதிய பாட்டு எண்ணற்ற மேடைகளில் தலித்து மக்களால் பாடப் படுகிறது.
கல்லூரிக் காலத்தில் குரல்கள், துடி, மீட்சி என் மூன்று நாடகங்கள் எழுதினார். பிற்காலத்தில் அவ்வை, மணிமேகலை ஆகியன நாடகங்கள் இவரால் எழுதப்பட்டன. 2007 ஆம் ஆண்டு வரை இன்குலாப் எழுதிய கவிதைகள் அனைத்தும் ஒவ்வொரு புல்லையும் என்னும் பெயரில் ஒரு பெரிய நூலாக வெளிவந்தது.
"https://ta.wikipedia.org/wiki/இன்குலாப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது