பச்மரி உயிர்க்கோளக் காப்பகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,956 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
 
இக்காப்பகத்தில் 50 வகையான பாலூட்டிகள், 254 வகையான பறவைகள் மற்றும் 30 வகையான ஊர்வன போன்றவை இங்கு கண்டறியப்பட்டுள்ளன. பாம்புதிண்ணிக் கழுகு, கருங்கழுகு, சிகப்பு காட்டுக்கோழி, மலபார் மலை மொங்கான், பறக்கும் அணில், கடமான், புள்ளிமான், காட்டெருமை, நரி, லங்கூர் குரங்கு, முள்ளம்பன்றி, காட்டுநாய், இந்திய ஓநாய், கழுதைப்புலி, சிறுத்தை மற்றும் புலி போன்ற விலங்கினங்கள் காணப்படுகின்றன.<ref name="Tigers of central India.">{{cite web | url=https://indianwildlife.wordpress.com/ | title=Wild life of India. | date=நவம்பர் 13, 2014 | accessdate=ஏப்ரல் 8, 2015}}</ref>
 
== தொல்லியல் ==
 
இக்காப்பகத்திலுள்ள அனேக குகைகளில் காணப்படும் சுமார் 250 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்களிலிருந்து இங்கு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் வாழ்ந்திருப்பதை அறிய முடிகிறது. இப்பாறை ஓவியங்கள் தற்போது கேட்பாரற்று அழிந்து வரும் தருவாயில் உள்ளது. பச்மரியைச் சுறறியுள்ள மலைகள் புனித சிவதலமாகக் கருதப்படுகின்றன.நாகபஞ்சமி மற்றும் மகாசிவராத்திரியின் பொழுது சுமார் 12,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிவனை தரிசிக்க வருகிறார்கள். <ref name="பச்மரி">{{cite web | url=http://www.cpreec.org/pubbook-biosphere.htm | title=பச்மரி உயிர்க்கோளக் காப்பகம் | publisher=CPREEC | accessdate=ஏப்ரல் 14, 2015}}</ref>
 
== அச்சுறுத்தல்கள் ==
 
அரிதான மூலிகை செடிகள் அகற்றுதல், உண்ணு போன்ற களைச்செடிகள் அதிகரிப்பு, மண்அரிப்பு, நீர்நிலைகள் தூர்ந்து போதல் மற்றும் வேட்டையாடுதல் போன்றவை பெரும் அச்சுறுத்தல்களாகும்.
 
== மேற்கோள்கள் ==
15,239

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1838391" இருந்து மீள்விக்கப்பட்டது