விக்கிப்பீடியா:தற்காவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
No edit summary
வரிசை 1:
{{nutshell|''தற்காவல்'' அணுக்கம் உள்ள ஒருவர் உருவாக்கும் புதிய பக்கங்கள் சுற்றுக்காவலுக்குட்பட்டதாக தாமாகவே குறிக்கப்படும். இதன் மூலம் சுற்றுக்காவலர்களின் பணிச்சுமை குறையும். இவ்வணுக்கம் பல புதிய கட்டுரை உருவாக்கங்கள் மூலம் [[விக்கிப்பீடியா:வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு|வாழும் மாந்தர்களின் வரலாற்றுக் கட்டுரைகள்]], காப்புரிமம், [[விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை|மெய்யறிதன்மை]], [[விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை|குறிப்பிடத்தக்கமை]] தொடர்பாக நல்ல புரிதலைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தி இருக்கும் அனுபவம் வாய்ந்த பயனர்களுக்கு வழங்கப்படும்.|shortcut=WP:AUTOPAT}}
[[File:Wikipedia Autopatrolled.svg|thumb|தற்காவல் சின்னம்]]
 
இவ்வணுக்கத்தைத் தொடர்ந்து சிறப்பாக பங்களித்து வரும் பயனர்களுக்கு அவர்கள் கோராமலேயே எந்த ஒரு நிருவாகியும் தாமாகவே வழங்கலாம் என்று பரிந்துரைக்கிறேன். ஒரு பயனருக்கு இவ்வணுக்கத்தை வழங்கிய பின் அது குறித்த மாற்றுக் கருத்து இருந்தால், அணுக்கம் வழங்கிய நிருவாகியுடன் இந்தப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உரையாடலாம். குறிப்பிட்ட பயனர் தற்காவல் அணுக்கம் பெறுவதற்குக் கடைபிடிக்க வேண்டிய, மேம்படுத்திக் கொள்ள வேண்டிய விசயங்களைப் பட்டியலிட்டு அவருடைய பேச்சுப் பக்கத்தில் பொதுவாக வேண்டுகோள் விடுக்கலாம். இருப்பினும், தொடர்ந்து மேம்பாடுகள் இல்லை என்றால், அணுக்கத்தை மீளப் பெற்றுக் கொள்ளலாம். இவ்வணுக்கம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு பயனர் வழமை போலவே பங்களிக்கப் போகிறார் என்பதாலும், ஒரு நிருவாகி தாமாக வழங்கும் அணுக்கம் தொடர்பாக பயனருக்குத் தேவையில்லாத உளைச்சல் வரக்கூடாது என்பதாலும் பொதுவாக அவருடைய பங்களிப்பைப் படிப்படியாக மேம்படுத்தும் வண்ணம் கனிவுடன் சுட்டிக் காட்டுதல் வேண்டும்.
 
இவ்வணுக்கத்தைப் பெறவோ வழங்கவோ ஒருவர் குறைந்தது 50 கட்டுரைகளாவது உருவாக்கி [[விக்கிப்பீடியா:வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு|வாழும் மாந்தர்களின் வரலாற்றுக் கட்டுரைகள்]], காப்புரிமம், [[விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை|மெய்யறிதன்மை]], [[விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை|குறிப்பிடத்தக்கமை]] தொடர்பாக நல்ல புரிதலைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தியிருப்பது அவசியம். தாமாகவே இவ்வணுக்கம் வேண்டுவோரும் மேற்கண்ட 50 கட்டுரைகள் எண்ணிக்கையைக் கடந்திருக்க வேண்டும்.
 
== தற்காவல் அணுக்கம் வழங்கப் பெற்றோர் ==
 
{| class='wikitable sortable'
|-
! எண் !! பயனர் !! அணுக்கம் வழங்கியவர் !! நாள் !! குறிப்பு
|-
|1|| [[பயனர்:Booradleyp1|Booradleyp1]] || [[பயனர்:Ravidreams|Ravidreams]] || 23 ஏப்ரல் 2015 || ||
|}
 
== தற்காவல் அணுக்கம் பெறுவதற்கான கோரிக்கைகள் ==
 
[[பகுப்பு:பயனர் அணுக்கங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:தற்காவல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது