எட்வின் ஹபிள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|he}} →
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Edwin-hubble.jpg|thumb|200px|எட்வின் ஹபிள்]]
 
'''எட்வின் பாவெல் ஹபிள்''' எனும் முழுப்பெயர் கொண்ட '''எட்வின் ஹபிள்''' (நவம்பர் 29, 1889 – செப்டெம்பர் 28, 1953) ஒரு புகழ் பெற்ற [[வானியலாளர்]] ஆவார். இவரது தந்தையார் [[மிசூரி]]யில் உள்ள மாஷ்ஃபீல்ட் என்னுமிடத்தில் ஒரு [[காப்புறுதி]]த் துறை அலுவலராக இருந்தார். 1898 ஆம் ஆண்டில் இவரது [[குடும்பம்]] இல்லினோய்சில் உள்ள வீட்டனுக்கு இடம் பெயர்ந்தது. எட்வின் ஹபிள் இளமைக் காலத்தில் சிறந்த [[விளையாட்டு]] வீரராகத் திகழ்ந்தார். அக்காலத்தில் இவர் கல்வித் திறமையிலும் பார்க்க விளையாட்டுத் திறமைக்காகவே பெயர் பெற்றிருந்தார்.
 
இவர் சிக்காகோ பல்கலைக் கழகத்தில், [[கணிதம்]], [[வானியல்]] என்பவற்றைக் கற்று 1910 இல் இளநிலைப் பட்டம் பெற்றார். ஒக்ஸ்ஃபோட்டில் முதுநிலைப் பட்டம் பெற்றபின்னர் [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்கா]]வுக்குத் திரும்பினார். ஆரம்பத்தில் இவர் இந்தியானாவின் [[நியூ அல்பனி]]யில் உள்ள [[பாடசாலை]] ஒன்றில் ஆசிரியராகவும், [[கூடைப்பந்து]]ப் பயிற்சியாளராகவும் பணிபுரிந்தார். அத்துடன் [[கெண்ட்டகி]]யில் சட்டத் தொழிலும் செய்து வந்தார். முதலாம் உலகப் போரில் [[இராணுவ சேவை]]யில் சேர்ந்த இவர் விரைவில் மேஜர் தரத்துக்கு உயர்ந்தார். இப்பணியின் பின்னர் வானியல் துறைக்குத் திரும்பிய இவர், சிக்காகோ பல்கலைக் கழகத்தின் யேர்க்ஸ் வானாய்வு நிலையத்தில் சேர்ந்தார். அங்கே 1917 ஆம் ஆண்டில், இவர் முனைவர் பட்டமும் பெற்றுக்கொண்டார்.
 
[[தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)|நாசா]] மற்றும் [[ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்]] இணைந்து எட்வின் ஹபிள் நினைவாக [[ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி|ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியை]] ஏப்ரல் 24, 1990இல் அனுப்பியது.<ref>[http://www.bbc.co.uk/tamil/science/2015/04/150424_hubbletamil ஹபிள் விண் தொலைநோக்கி இயங்கி 25 ஆண்டுகள் – படத்தொகுப்பு]</ref>
 
==மேற்கோள்கள்==
<references/>
 
{{வானியல்-குறுங்கட்டுரை}}
 
"https://ta.wikipedia.org/wiki/எட்வின்_ஹபிள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது