பல்லவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 109:
 
=== மன்னர் ===
நாடாளும் பொறுப்பு முழுவதும் மன்னன் கைகளில் இருந்தது. அரசனாகும் உரிமை பரம்பரை வழி உரிமையாக வந்தது. சில சமயங்களில் மக்களே மன்னனைத் தேர்ந்தெடுத்தனர் என்பதை இரண்டாம் பரமேசுவரன் மகன் சித்திரமாயன் அரசனாக ஆவதற்குத் தகுதியற்றவனெனக் கருதப்பட்டு, பல்லவ மன்னன் இர்ண்டாம் நந்தி வர்மன் என்ற பட்டப் பெயருடன் மன்னனாக ஆனதைக் குறிப்பிடலாம். ப்[அல்லவபல்லவ மன்னர்கள் கல்வி, அறிவு, கலையறிவு, பண்பாடு, ஆட்சித்திறன், வீரம் ஆகியவற்றில் சிறப்புற்று விளங்கினர். சமயத்திலும் இறைவழிபாட்டிலும் பல்லவ மன்னர் அளவிலாத ஈடுபாடு கொண்டனர்.
 
[[File:பல்லவர் கோயில் சிலை.JPG|thumb|பல்லவர் கோயில் சிலை]]
 
=== அரசு அலுவலர்கள் ===
பல்லவ மன்னர்களுக்கு ஆமாத்தியர்கள் என்ற அமைச்சர்கள் இருந்தனர் என்பதற்கும், அமைச்சர் குழு இருந்தது என்பதற்கும் சான்றுகள் கிடைக்கின்றன. இரண்டாம் நந்திவர்மனது தலைமை அமைச்சர் பிரம்மஸ்ரீ ராஜன், மூன்றாம் நந்திவர்மனது அமைச்சன் நண்பன் இறையூர் உடையன், தமிழ்ப்பேரரையன் என்ற அமைச்சர் பெயர்களால் தகுதியுடைய பிராமிணர்களும் வேறு பெருமக்களும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர் என்று அறிகிறோம்.பல்லவ வேந்தர்களிடம் உள்படு கருமத்தலைவர், வாயில் கேட்பார், கீழ்வாயில் கேட்பார் போன்ற அதிகாரிகள் ஆட்சி நடத்த உதவி புரிந்தனர். பொற்கொல்லர், பட்டய எழுத்தாளர், காரணீகர் போன்றோர் அரண்மனை அலுவலராக விளங்கினர்.
"https://ta.wikipedia.org/wiki/பல்லவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது