376
தொகுப்புகள்
[[படிமம்:Milarepa statue.jpg|thumb|நேபாளத்தின் ஹெலம்பு பள்ளாதாக்கில் உள்ள மிலரெபா கொம்பா என்னுமிடத்தில் அமைந்துள்ள மிலரெபாவின் சிலை]]
'''ஜெத்சன் மிலரெபா''' (
==ஆரம்ப கால வாழ்க்கை==
மேற்கு திபத்தின் குங்தாங் மாநிலத்தில் அமைந்த க்யா கட்ஸா என்ற சிற்றூரில் ஒரு வளமான குடும்பத்தில் மிலரெபா பிறந்தார். இவரது பெற்றோர் இவருக்கு '''மிலா தோபகா''' என்று பெயரிட்டனர்.
==செய்வினை==
மிலரெபாவின் தந்தையின் மறைவிற்கு பிறகு அவரது உறவினர்கள் இவரது சொத்துகளை அபகரித்துக் கொண்டனர். தாயின் கட்டளைப்படி வீட்டிலிருந்து வெளியேறி செய்வினை பற்றி கற்க சென்றார். தனது உறவினர்களை பழி தீர்க்க, அவர்கள் மகனின் திருமணத்தின் போது மிக பெரிய பனிமழையை பொழிய வைத்தார். அதில் 35 பேர் உயிரிழந்தனர். ஆனால் அவரது உறவினர்கள் உயிர் தப்பியதாக கருதப்படுகிறது. இவரது மீது ஆத்திரமடைந்த கிராமத்து மக்கள் இவரை தேடுவது குறித்து தனது தாய் மூலம் தெரிந்து கொண்ட மிலரெபா, கிராமவாசிகளின் பயிர்களை அழிக்க மற்றொரு பனிமழையை பொழியவைத்தார்.
இவரது பல செயல்கள் சோ கி த்ரோன்மா என்னுமிடத்தை சுற்றியே நிகழ்ந்தது. இவரது வாழ்க்கையும் பாடல்களும் குங்தாங் மன்னரான த்ரி நம்கியால் தே-ன் உதவியோடு சங்க்யோன் ஹெருகா என்பவரால் தொகுக்கப்பட்டது.
மிலரெபா தனது முதிர் பிராயத்தில் தான் இளமையில் செய்த தீஞ்செயல்களை குறித்து மிகவும் வேதனை பட்டார் என்பது ரேசுங்பா என்பவரோடு நிகழ்ந்த அவரது உரையாடல்கள் மூலம் அறியப்படுகிறது.
|
தொகுப்புகள்