அருட்சகோதரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
'''அருட்சகோதரி''' அல்லது '''அருட்கன்னியர்''' என்போர் கிறித்தவத்தில் பெண் துறவியரை குறிக்கப்பயன்படும் சொல்லாகும். இவ்வகை துறவியர் பொதுவாக ஒரு சமூகமாக மடத்தில் கூடிவாழ்வர். இவர்கள் கற்பு, ஏழ்மை மற்றும் கீழ்ப்படிதல் வாக்களிப்பர். இப்பதம் [[கத்தோலிக்க திருச்சபை]], [[கிழக்கு மரபுவழி திருச்சபை|மரபுவழி திருச்சபை]], [[ஆங்கிலிக்கம்]], [[லூதரனியம்]] முதலிய கிறித்தவப்பிரிவுகளில் அதிகம் பயன்பட்டுகின்றது. ஆயினும் [[ஜைனம்]], [[பௌத்தம்]], [[தாவோயியம்]], [[இந்து]] முதலிய பிற சமயங்களிலும் இவ்வகையில் வாழ்வோர் உள்ளனர் என்றாலும் அவர்கள் பிற பெயர்களால் அழைக்கப்படுகின்றனர் என்பது குறிக்கத்தக்கது.
 
இவர்கள் தவம், செபம், ஒறுத்தல் போன்ற கடவுளன்பு பணிகளையும், கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்கள் போன்றவை நடத்துதல் போன்ற பிறரன்புப்பணிகளையும் செய்கின்றனர். அருட்சகோதரிகளுக்கென்று பல துறவற சபைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான பணிகளை செய்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/அருட்சகோதரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது