"ராசிதீன் கலீபாக்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி (→‎மேற்கோள்கள்: clean up, replaced: {{Link FA|ar}} →)
அலி ராசிதீன் கலீபாக்கலில் நான்காவது மற்றும் இறுதி கலிபா ஆவார். இவர் 656 முதல் 661 வரை ஆட்சி செய்தார். உதுமானின் படுகொலைக்குப்பிறகு மதீனா நகரமே ஒருவிதமான பதட்டமான நிலையிலேயே இருந்தது. இதை தொடர்ந்து பலர் அலி அவர்களை அடுத்த கலிபாவாக பொறுப்பேற்குமாறு வற்புறுத்தினர். இதை ஏற்று பொறுப்பேற்ற அலி தனது தலைநகரை மதீனாவிலிருந்து, கூபாவிற்கு மாற்றினார். மேலும் பல ஆளுநர்களை (உதுமானின் உறவினர்கள்) பணியிறக்கம் செய்துவிட்டு புதியவர்களை நியமித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிரியாவின் ஆளுநர் [[முதலாம் முஆவியா|முஆவியா]] என்பவர், அலிக்கு எதிராக படையெடுப்பு நடத்தினார். இந்த உள்நாட்டு போர்களினால் 'காரிச்சியாக்கள்' எனப்படும் கூட்டத்தாரின் பகையை சம்பாதித்துக்கொண்டார். பின்பு இந்த கூட்டத்தாரால் 661-ம் ஆண்டு இவர் படுகொலை செய்யப்பட்டார்.
 
== ராசிதீன் கலிபாக்களின் வீழ்ச்சிமுடிவு ==
 
அலியின் படுகொலைக்குப்பிறகு அவரது மகன் அசன் (ஹசன்) என்பவரை ஒரு பிரிவினர் அடுத்த கலிபாவாக அறிவித்தனர். இதனை ஏற்காத [[முதலாம் முஆவியா|முஆவியா]] அசனை முறியடித்துவிட்டு தன்னயே அடுத்த கலிபாவாக அறிவித்துக்கொண்டார். இவரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த அரசே உமய்யா கலிபாக்கள் ஆட்சி என அழைக்கப்படுகின்றது.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1855437" இருந்து மீள்விக்கப்பட்டது