தோமசு சவுந்தரநாயகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

08:19, 12 மே 2015 இல் நிலவும் திருத்தம்

அருட்திரு இம்மானுவேல் தோமசு சௌந்தரநாயகம் (Emmanuel Thomas Savundaranayagam, பிறப்பு: 13 சூலை 1938) இலங்கைத் தமிழ் போதகரும், தற்போதைய ரோமன் கத்தோலிக்க யாழ்ப்பாண ஆயரும் ஆவார்.[1]

அருட்திரு
தோமசு சௌந்தரநாயகம்
Thomas Savundaranayagam
யாழ்ப்பாண ஆயர்
சபைகத்தோலிக்க திருச்சபை
மறைமாநிலம்கொழும்பு
மறைமாவட்டம்யாழ்ப்பாணம்
ஆட்சி துவக்கம்6 சூலை 1992
முன்னிருந்தவர்பஸ்தியாம்பிள்ளை தியோகுப்பிள்ளை
பிற பதவிகள்மன்னார் கத்தோலிக்க மறைமாவட்டம் (1981-92)
பிற தகவல்கள்
பிறப்பு13 சூலை 1938 (1938-07-13) (அகவை 85)
ஊர்காவற்துறை, இலங்கை
படித்த இடம்பரப்புரைப் பல்கலைக்கழகம், உரோம்

ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்

சவுந்தரநாயகம் 1938 சூலை 13 இல் இலங்கை, ஊர்காவற்துறையில் பிறந்தார்[2][3] ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியிலும், பின்னர் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியிலும் கல்வி கற்றார்.[4][5] பின்னர் அவர் யாழ்ப்பாணம் புனித மார்ட்டின் மடப்பள்ளியிலும், அம்பிட்டி தேசிய மடப்பள்ளியிலும் (1957-64) கல்வி கற்றார்.[3] ரோம் நகரில் பரப்புரைக் கல்லூரியில் புனித இறையியலில் முனைவர் பட்டமும் பெற்றார்[3]

பணி

சவுந்தரநாயகம் 1963 டிசம்பரில் போதகராக நிலைப்படுத்தப்பட்டார்.[2][3] 1981 சனவரியில் மன்னார் மறைமாவட்டத்தில் பணியில் அமர்ந்தார். 1981 சூலையில் மடு மரியாள் ஆலயத்தில் மன்னார் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார்.[2][3] 1992 சூலை முதல் யாழ்ப்பாண ஆயராக இருந்து வருகிறார்.[2][3]

இலங்கையில் தமிழர் உரிமைகளுக்காக சவுந்தரநாயகம் குரல் கொடுத்து வந்துள்ளார்.[6][7] ஈழப்போரை முடிவுக்குக் கொண்டு வர வெளிநாடுகள் தலையிட வேண்டும் எனக் குரல் கொடுத்தார்.[8]

மேற்கோள்கள்

  1. "Jaffna". Pontifical Mission Societies - Sri Lanka.
  2. 2.0 2.1 2.2 2.3 "Bishop Thomas Savundaranayagam". Catholic Hierarchy.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 "Bishop Savundranayagam". Union of Catholic Asian News. http://directory.ucanews.com/bishops/bishop-savundranayagam/559. 
  4. "Past Bishops". St Patrick's College, Jaffna Old Boys' Association, Colombo Branch. Archived from the original on 23 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  5. Rasaiya, Christy (16 சூலை 2000). "St. Patrick's 150 years old". சண்டே டைம்சு. http://www.sundaytimes.lk/000716/plus12.html. 
  6. "Jaffna bishop hails gesture". தி இந்து. 1 சனவரி 2009. http://www.thehindu.com/todays-paper/tp-national/article365573.ece. 
  7. Kremmer, Janaki (14 சனவரி 2005). "Distrust between Sri Lanka, rebels hampers tsunami aid". The Christian Science Monitor. http://www.csmonitor.com/2005/0114/p07s02-wosc.html. 
  8. "Sri Lankan Bishop calls for international intervention to stop war". Alertnet. Caritas Internationalis. 11 மே 2007 இம் மூலத்தில் இருந்து 6 சூலை 2008 அன்று. பரணிடப்பட்டது.. http://web.archive.org/web/20080706011903/http://www.alertnet.org/thenews/fromthefield/carintern/e0f12ed4a4bda6b45f1525737b31edff.htm. 

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோமசு_சவுந்தரநாயகம்&oldid=1855451" இலிருந்து மீள்விக்கப்பட்டது