பெருமாள் திருமொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழ் வைணவ இலக்கிய படைப்பு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"பெருமாள் திருமொழி என்னு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

05:36, 15 மே 2015 இல் நிலவும் திருத்தம்

பெருமாள் திருமொழி என்னும் நூல் வைணவ ஆழ்வார்களுள் ஒருவராகிய குலசேகர ஆழ்வாரால் பாடப்பட்டது. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் ஒரு பகுதியாகிய இந்நூல், அத்தொகுப்பில் 647 தொடக்கம் 750 வரையான 105 பாடல்களைக் கொண்டது.

1. முதல் பதினோரு பாடல்களில் அரங்கப்பெருமானை என்று கண்டு மகிழும் நாள் எந்நாளென வேட்டல்.
2. இரண்டாம் பத்து பாடல்களில், அரங்கநாதனது அடியார்க்கு அடியேன் என்கிறார்.
3. முன்றாம் பத்து பாடல்களில், அரங்கனை கண்டு அவன்பால் கொண்ட பற்றின் மிகுதியால் உலக இன்பங்கள் வேண்டாம் என்றும், தான் அழகிய மணவாளனுக்கே பித்தன் எனல்.

எம் பரத்தர் அல்லாரொடும் கூடலன்
உம்பர் வாழ்வை ஒன்றாகக் கருதலன்
தம்பிரான் அமரர்க்கு அரங்க நகர்
எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே

4. நான்காம் பதினோரு பாடல்களில், திருவேங்கடமுடையன் மீது கொண்ட பக்தியின் மிகுதியால், வானுலக இன்பத்தினை கட்டிலும் திருவேங்கட மலையில் வாழும் குருககோவோ, மீனாகவோ, திருவேங்கடத்தான் உமிழ்கின்ற பொன் வட்டாகவோ, செண்பக மலராகவோ, தன்பக மரமாகவோ, அழகிய மலையாகவோ, மலை மீது பாயும் ஆறாகவோ, கோயிலின் நிலைக்கதவகவோ, வாசற்படியாகவோ அல்லது எம்பெருமான் மலை மீது வேறு ஏதேனும் பொருளாகவோ இருந்து திருவேங்கடமுடையான் அடிகளை காண்பேன் என்கிறார்.

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்
படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே
இதனால் இன்றும் திருவேங்கடமுடைய பெருமாளின் வாசற்படிக்கு குலசேகரப்படி என்ற பெயர் வழங்குகிறது.

5. ஐந்தாம் பத்து பாடல்களில் வித்துவக்கோட்டு அம்மானையே வேண்டுதல். இவ்வுலகில் எத்துணை துயரம் நேர்ந்தாலும், இறைவனே உயிர்களுக்கு துணை என்பதை வலிவுருத்தும், இப்பத்துப்பாடல்களின் உவமானங்கள் மிகவும் கருத்து செறிவானவை.

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டு அம்மா நீ
ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருமாள்_திருமொழி&oldid=1856247" இலிருந்து மீள்விக்கப்பட்டது