"அங்கேரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,553 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
பல நூற்றாண்டுகளாக [[கெல்ட்டியர்]], [[பண்டைய ரோம்|ரோமர்கள்]], குன்கள், [[சிலாவிக் மக்கள்|சிலாவியர்கள்]], கெப்பிதுகள், ஆவார்கள் ஆகியோரின் வாழ்விடங்களாக இருந்த பகுதிகள் இறுதியில், 9ம் நூற்றாண்டின் இறுதியில் அங்கேரி நாடு அங்கேரிய இளவரசன் ஆர்ப்பாதுவினால் உருவாக்கப்பட்டது. ஆர்ப்பாதுவின் கொள்ளுப்பேரன் முதலாம் ஸ்டீவன் 1000 ஆம் ஆண்டில் அங்கேரியை [[அங்கேரிய இராச்சியம்|கிறித்தவ இராச்சியமாக]] மாற்றி அதன் அரசனானான். 12ம் நூற்றாண்டில் அங்கேரி மேற்குலக நாடுகளில் ஒரு மத்திய ஆதிக்க நாடாக வளர்ந்து, 15ம் நூற்றாண்டிற்குள் அதன் உச்சத்தை அடைந்தது.<ref>Kristó Gyula – Barta János – Gergely Jenő: Magyarország története előidőktől 2000-ig (History of Hungary from the prehistory to 2000), Pannonica Kiadó, Budapest, 2002, ISBN 963-9252-56-5, p. 687, pp. 37, pp. 113 ("Magyarország a 12. század második felére jelentős európai tényezővé, középhatalommá vált."/"By the 12th century Hungary became an important European constituent, became a middle power.", "A Nyugat részévé vált Magyarország.../Hungary became part of the West"), pp. 616–644</ref> 1526 இல் இடம்பெற்ற மோகாக் சண்டையை அடுத்து அங்கேரியின் ஒரு பகுதி 150 ஆண்டுகளுக்கு [[உதுமானியப் பேரரசு|உதுமானியரின்]] ஆதிக்கத்தில் (1541–1699) இருந்தது. அதன் பின்னர் ஆப்சுபூர்க் பேரரசின் ஆட்சிக்குள் வந்த அங்கேரி, 1867-1918 காலப்பகுதியில் ஆத்திரிய-அங்கேரிய இராச்சியத்தின் அதிகாரத்தில் இருந்தது.
 
[[முதல் உலகப் போர்|முதலாம் உலகப் போரை]] அடுத்து, அங்கேரி தனது 71% நிலப்பகுதியையும், 58% மக்கள்தொகையையும், 32% அங்கேரிய இனக்குடிகளையும் இழந்ததை அடுத்து 1920 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட திரயானன் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அங்க்கேரியின் தற்போதைய எல்லைகள் வகுக்கப்பட்டன. [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது அங்கேரி [[அச்சு நாடுகள்|அச்சு நாடுகளுடன்]] இணைந்து போரிட்டது. இதனால் அது மேலும் தனது பலத்தையும், மக்களையும் இழந்தது. போரின் முடிவில், அங்கேரி [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] செல்வாக்கிற்குள் வந்தது. இதனால் அங்கு 1947 முதல் 1989 வரை நாற்பதாண்டு-கால கம்யூனிச ஆட்சி நிலவியது. [[ஹங்கேரியப் புரட்சி, 1956|1956 அங்கேரியப் புரட்சி]]யின் போது இந்நாடு பல உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. 1989 இல் [[ஆசுதிரியா]]வுடனான எல்லைப் பகுதியை அது திறந்து விட்டதை அடுத்து அங்கு கம்யூனிசம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது.
 
1989 அக்டோபர் 23 இல் அங்கேரி சனநாயக நாடாளுமன்றக் குடியரசாக அறிவிக்கப்பட்டது. இன்று மிக அதிகமான [[மனித வளர்ச்சி சுட்டெண்ணின் படி நாடுகளின் பட்டியல்|மனித வளர்ச்சிச் சுட்டெண்]]ணைக் கொண்டுள்ள இந்நாடு ஒரு உயர்-நடுத்தர-வருவாயைக் கொண்ட நாடாக உள்ளது.<ref name=HighOECD>[http://data.worldbank.org/about/country-classifications/country-and-lending-groups#OECD_members Country and Lending Groups | Data]. Data.worldbank.org. Retrieved on 2014-08-11.</ref><ref name=qq>[http://hdr.undp.org/sites/default/files/hdr14_statisticaltables.xls United Nations Development Programme: Human Development Report, 2014]</ref> அங்கேரி ஒரு பிரபலமான [[சுற்றுலா ஈர்ப்பு]] நாடாகும். இங்கு ஆண்டுக்கு 10.675 மில்லியன் (2013) சுற்றுலாப் பயணிகள் வருகின்றன.<ref>{{cite web|url=http://www.e-unwto.org/content/r13521/fulltext.pdf|title=UNWTO World Tourism Barometer |publisher=World Tourism Organization |accessdate=20 August 2014}}</ref> இங்கு உலகின் மிகப் பெரிய [[வெந்நீரூற்று|வெப்ப நீர்க்]] குகை,<ref>{{cite web|url=http://www.iht.com/articles/reuters/2008/11/18/europe/OUKWD-UK-HUNGARY-CAVE.php |title=Search – Global Edition – The New York Times |work=International Herald Tribune |date=29 மார்ச் 2009 |accessdate=20 செப். 2009}}</ref> உலகின் இரண்டாவது பெரிய [[வெந்நீரூற்று]] (ஏவீசு ஏரி), நடு ஐரோப்பாவின் மிகப் பெரிய ஏரி (பலத்தான் ஏரி), ஐரோப்பாவின் மிகப் பெரிய இயற்கை [[புல்வெளி|புன்னிலம்]] (ஓர்த்தோபாகி தேசிய வனம்) ஆகியன இங்குள்ளன.
 
== மேற்கோள்கள் ==
1,14,101

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1856302" இருந்து மீள்விக்கப்பட்டது