க. நா. கணபதிப்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 33:
சின்னமணி [[பருத்தித்துறை]] மாதனை என்ற ஊரில் நாகலிங்கம், ராசம்மா ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர். தனது ஆரம்பக்கல்வியை மாதனை மெதடிஸ்த மிசன் பாடசாலையிலும் உயர்தரக் கல்வியை ஏழாலை உயர்தரப் பாடசாலையிலும் கற்றுக் கொண்டார். 9 வயதிலேயே குறவன் குறத்தி என்ற நாடகத்தில் நடித்து பாராட்டுப் பெற்றார். யாழ் கலாசேத்திராவில் வி.கே.செல்லையாவிடம் கலை நுணுக்கங்களைக் கற்றுக் கொண்ட சின்னமணி, அவரின் வழிகாட்டலுடன் [[1949]] ஆம் ஆண்டு [[கொழும்பு றோயல் கல்லூரி]]யில் இடம்பெற்ற கப்பற்பாட்டு நாடகத்தில் நடித்தார். 1951 ஆம் ஆண்டு முதல் கலையுலகில் நுழைந்த சின்னமணி பல மூத்த பெரும் கலைஞர்களோடு இணைந்து நடித்தார். வீரமைந்தன், சரியா தப்பா, தில்பு சுல்தான் ஆகிய சமூக நாடகங்களிலும், காத்தவராயன், அரிச்சந்திரா, ஸ்ரீவள்ளி, சத்தியவான் சாவித்திரி போன்ற சரித்திர நாடங்களிலும் நடித்துப் புகழ் பெற்றார். ஒல்லியான உடலமைப்பைக் கொண்ட இவர் சிறுவயது தொடக்கம் எல்லோராலும் சின்னமணி என்றே அழைக்கப்பட்டார். துப்பதாகே துக்க என்ற சிங்களத் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. யாழ்ப்பாணத்தில் கோவில் திருவிழாக்களிலும், பொதுக் கலை நிகழ்வுகளிலும் இடம்பெறும் சின்னமணி குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சிகளைக் காண பெரும் திரளாக மக்கள் கூடுவர்.
 
1954 ஆம் ஆண்டு இரத்மலானை, கொத்தலாவை போன்ற இடங்களிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 1957 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கூட்டுறவுப் பண்ணைப் பால் சபையில் கணக்காளராகவும் கடமையாற்றியுள்ளார். 1960 ஆம் ஆண்டு ஆசிரியையான அன்னமுத்து என்பவரைத் திருமணம் புரிந்த சின்னமணிக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். [[அச்சுவேலி]]யில் வாழ்ந்து வந்தார்.
 
 
நாகலிங்கம் கணபத்ப்பிள்ளை (சின்னமணி)
இலங்கையில் வில்லிசைக்கு வித்திட்டார்
 
பருத்தித்துறையிலே மாதனை எனும் கிராமத்தில் கலை அறிவும் ஆற்றல்களும் மிக்க நாகலிங்கம் இராசம்மா தம்பதிகளுக்கு இரண்டாவது மகனாக 30.03.1936ல் அவதரித்தார் இவருடைய இயற்பெயர் கணபதிப்பிள்ளை. இவர் தனது ஆரம்பக் கல்வியை மாதனை மெதடிஸ் மிஷன் பாடசாலையில் கற்றுக்கொண்டார். ஆதன்பின்னர் ஆறாம்வகுப்பில் இருந்து எட்டாம் வமுப்புவரை புலோலி ஆண்கள் ஆங்கிலப் பாடசாலையில் கல்விபயின்றார் தனது எட்டுவயதிலே குழந்தைக் காத்தானாக நடித்தார். ஆத்தோடு குறவன் குறத்தி நாடகத்திலும் நடித்துக் கொண்டார். ஓன்பதாம் வகுப்பில் இருந்து ஏழாலை அரசினர் உயர்தரப் பாடசாலையில் படித்து சிரேஷ;ட கல்வி தராதர பரீட்சையில் தோற்றினார்.
 
இத்தகைய கல்விக் காலத்தில் கீதாஞ்சலி நல்லையா அவர்களினால் தயாரிக்கப்பட்ட காவடி நடனத்தில் பங்கு கொண்டு கொழும்பில் விக்டோறியா பூங்காவில் நடைபெற்ற போட்டியில் பரிசையும் பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் 1949ல் அதேபாடசாலை மாணவர்களுடன் கொழும்பு றோயல் கல்லூரி மண்டபத்தில் நடாத்தப்பட்ட கப்பல் பாட்டு கலை நிகழ்வில் அகில இலங்கை ரீதியில் பரிசிலையும் பாராட்டையும் பெற்றுக்கொண்டார்.
 
கீதாஞசலி ஏ.மு. நல்லையா நாட்டியக் கலைஞரிடம் நடனம் சார்ந்த நுட்பங்களைக் கற்றறிந்து தன்னை வளர்த்துக் கொண்டார். அதன்பின்னர் நடனம், காவடி, கரகம், போன்ற கலை நிகழ்வை தனது சகோதரனான க. நா. நவரத்தினம் உடன் இணைந்து செயற்பட்டு பல பரிசில்களையும் பெற்றுக் கொண்டார்.1957ம் ஆண்டில் ஆசிரியராக நியமனம் பெற்று இரத்மலானை கொத்தலாவலபுரம் தமிழ் பாடசாலையில் தமிழ், ஆங்கிலப் பாட ஆசிரியராக கடமையாற்றினார் அதே நேரம் கொழும்பில் தங்கியிருந்த இசைநாடக கலைஞர்களுடன் தொடர்புபட்டு கலைவாணரிடம் நாடகம், வில்லிசை, சார்ந்த நுட்பங்களை கற்றுக் கொண்டார் 1960ல் அசு;சுவேலியை சேர்ந்த விஸ்வலிங்கம் அன்னமுத்துவை மணம் முடித்து இல்லறத்தை நல்லறமாக நடாத்தி வந்ததுடன் நான்கு பிள்ளைகளைப் பெற்றெடுத்தார். அக்காலப்பகுதியில் யாழ்ப்பாணம் கூட்டுறவுப் பண்ணை பாற்சபையில் கணக்காளராகவும் கடமையாற்றினார்.
 
நாடகத்துறையில் ளு.வு. அரசுடன் இணைந்து கலைவாணர் நாடக மன்றத்தின் ஸ்தாபகரில் ஒருவராக செயற்பட்டார். மேலும் வண்ணை கலைவாணர் மன்றத்தால் நிகழ்த்தப்பட்ட நாடகங்களான இன்பக்கனவு, தில்புசுல்த்தான், வீரமைந்தன், சாம்ராஜ்அசோகன், சரியாதப்பா, போன்ற நாடகங்களில் பங்கெடுத்தார். 1962ல் அரிச்சந்திரா மயானகாண்டத்தில் நான்கு வேறுபட்ட குணஇயல்புகள் கொண்டபாத்திரங்களாக நடித்தார். நாரதராகவும், நட்சத்திரராகவும், அயலாத்துப் பிள்ளையில் ஒருவராகவும், சுடலையில் மேளம் அடிப்பவராகவும் நடித்தார். 1970ல் லாலா சோப் நடாத்திய நாடகப் போட்டியில் சத்திய கீர்த்தியாகவும் அதனைவிட சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் யமன் பாத்திரமாகவும் காத்தவராயன் கூத்தில் முந்காத்தான், கிருஷ;ணர், ஆரியமாலாவாக, வண்ணார நல்லியாக, மந்தரையாக என பல பாத்திரங்களை ஏற்று நடித்து நாடக உலகில் புகழை ஈட்டிக் கொண்டவர். பாடும் திறன் பாத்திரப் பொருத்தம் நடிக்கும் முறை தன்னை பயிற்றுவித்துக் கொள்ளும் தரம், கற்பனாசக்தி, என பன்முகச் சிறப்புக் கொண்டவர்.
 
வில்லிசைத் துறையை தனதாக்கிகொண்டார். 'தோன்றிற் புகழொடு தோன்றுக...' என்ற வள்ளுவரின் குறளக்கு ஏற்புடைய கலைஞனாக வில்லிசைத் துறையில் பிரவேசித்தார். ஆக்காலத்தில் இலங்கையில் வில்லிசை நிகழ்த்தி வந்த திருப்புங்குடி ஆறுமுகம் அவர்களின் வில்லிசை நிகழ்வில் க. நா. கணபதிப்பிள்ளை அவர்கள் நகைச்சுவைக் கலைஞனாக, பக்கப்பாட்டுகாரராக, உடுக்கு வாசிப்பவராக இணைந்து பலமேடைகளில் மக்களைச் சிரிக்கழவத்தார். ஆதன் பின்னர் 02.02.1968ல் தொண்டமானாறு செல்வச் சந்நிதியில் திருப்புங்குடி ஆறுமுகத்தின் ஆசீர்வாதத்துடன் வில்லிசை அரங்கேற்றத்தை நிகழ்த்தினார். ஆன்றில் இருந்து கலைவாணர் வில்லிசைக் குழு என்ற பெயரில் அனைத்து இடங்களிலும் இவரது ஆற்றுகை நிகழத்தொடங்கியது.
 
இத்தகைய க. நா. கணபதிப்பிள்ளை அவர்களை உலகப்புகழ் கொண்ட வில்லிசைக் கலைவிளக்கு என்றால் அது மிகையாகாது ஈழத்தில் தவில்மேதை தட்சனாமூர்த்தி எப்வாறு பேசப்படுகின்றாறோ, அதேபோல் இசைநாடகத்தில் வைரமுத்து அவர்கள் எவ்வாறு பேசப்படுகின்றாரோ, இந்தியத்திரைப்பட உலகில் சிவாஜிகனேசன் புகழப்படுகின்றாரோ அவற்றையும் கடந்து ஈழம்தந்த வில்லிசைக் கலைஞர் வில்லிசைப்புலவர் என்றால் க.நா. கணபதிப்பிள்ளை (சின்னமணி)தான் மக்கள் எங்கு பரந்து வாழ்கின்றார்களோ அந்த இடம் எங்கும் வில்லிசையால் கொடிகட்டிப் பறந்தவர். இவருடைய வில்லிசை இல்லாத ஆலயத்திருவிழாவே கிடையாது. சிறியவர் முதல் பெரியவர் வரை, பாமரர் முதல் படித்தவர் வரை வறியவர் முதல் செல்வந்தர் வரை அனைவராலும் பேசப்படுபவர், விரும்பப்படுபவர், புகளப்படுபவர் க.நா. கணபதிப்பிள்ளை ஆவார்.
 
வில்லிசைக்குரிய கருப்பொருள், கதைப்பொருள் பல்வேறுபட்டனவாக அமையும். துனிக்கதைகளாக, தொடர்கதைகளாக, கிளைக்கதைகளாக எனக் கூறலாம். ஆவற்றுள்ளே மகாபாரதம், இராமாயணம், இதிகாசம் புராணம், வரலாற்றுக் கதைகள் விசேடநாட்கள், சரித்திரக்கதைகள், கிறீஸ்தவக்கதைகள், திருக்குறள், நாளடியார் நீதி நூல், பெரியார்கள் எனப் பலநூற்றுக் கணக்கான கதைகளை ஆற்றுகைப் படுத்திக் கொண்டார்.
தானே வில்லிசைக்குரிய கட்டமைக்பை அமைத்துக் கொள்வதனால் கதைசொல்லும் முறை, கதைவிளக்கம், நகைச்சுவை, பாடல் ஏற்ற இறக்கங்கள், சுருதி, லயம், தாளம், பக்கவாத்தியம் என்பவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு ஆற்றுகைக்குரிய நேரகாலம் அறிந்து. பார்வையாளர் தரம் அறிந்து இரசிகர்களை எப்படித் தன்பக்கம் கொண்டு வரவேண்டும் என்ற புத்திசாதுரியத்துடன் ஆரம்பத்தில் இருந்து வில்லிசை முடியும் வரை அனைத்து பார்வையாளர்களையும் ஒருங்கிணைத்து வைத்திருக்கும் திறமை கொண்டவர். யாராவது எழுந்தால் அவர்களை எப்படியோ சுவாரிசமாக இருத்த்தும் கெட்டித்தனம் கொண்டவர்
 
வில்லிசைக் கலையை சீர்குலைக்காது பண்பாட்டுடன் எடுத்துச் சென்ற பெருமை க.நா. கணபதிப்பிள்ளையைச் சார்ந்தது. தனக்கென தனித்துவமான உடையுடன் 'ஆள்பாதி ஆடைபாதி' என்பார்கள் அதுபோல பண்பாட்டான உடை இரசிகர்களைக் கவரவேண்டும் என்பதற்காக தேவையற்ற பகிடிகள் இன்றி இரண்டு பட்ட அர்த்தமில்லாது கேலித்தனமில்லாது பார்வையாளர்களுக்கு சரியான சேதியைச் சொல்லி நேர்த்தியான முறையில் வில்லிசை நிகழ்த்துவார் கதைக்கு ஏற்ப இரச பாவங்களைத் தோற்றுவித்து தேவையான இடத்தில் பாத்திரங்களாகவும் மாறி வில்லிசையை நிகழ்த்தி வில்லிசைக்கு என இலக்கணம் வகுத்துக் கொண்டார்.
 
இலங்கையில் மட்டுமல்லாது பல நாடுகளுக்கும் சென்று புலம்பெயர் தமிழர்களை சிரிக்க வைத்தது மட்டுமல்லாது உலகத்தையும் வியக்கவைத்தார் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், கனடா, சுவிஸ்லாந்து என பலநாடுகளிலும் வில்லிசைக் கலையை விஸ்தரித்தார் அதனூடாகப் பல பட்டங்களையும் பெற்றுக் கொண்டார். வில்லிசைவேந்தன், வில்லிசைப்புலவர், வில்லிசைப் பேரொளி, பல்கலை வேந்தன், வில்லிசைச் சக்கரவர்த்தி, வில்லிசை திலகம், முத்தமிழ் மாமணி, கலாவினோதன், முத்தமில் வித்தகன், நவரசக்கலைஞன், ஜனரஞ்ச நாயகன் என இன்னும் பல பட்டங்கள்.
 
கலைக்காக வாழ்ந்தார்கள் கலையை வளர்த்தார்கள், கலையைப் புனிதப்படுத்தினார்கள். ஏனப் பலகலைஞர்கள் உண்டு அத்தகைய கலைஞர்களுள் சிலர் தங்கள் வாழ்வை ஏழ்மையிலும், மதுபோதையிலும், ஆணவத்திலும் அழித்தவர்களும் உண்டு. ஆனால் க.நா. கணபதிப்பிள்ளை சின்னமணியவர்கள் தனக்கொன உலகத்தில் வில்லிசைக்கொர் இடத்தைப் பிடித்தது மட்டுமன்றி தன்வாழ்வில் சிறந்த ஒரு பெருங்கலைஞன் என வாழ்ந்தும் காட்டி உள்ளார்.
 
அத்துடன் தான்உயிருடன் இருக்கும் போதே தனக்கு என வில்லிசையில் சிஷ;ஷpயனை உருவாக்கி நாகராசா மதியழகன் 12.07.2013ல் உழவிக்குளப்பிள்ளையார் ஆலயம் அச்சுவேலியான தனது கோவிலில் அரங்கேற்றத்தை நிகழ்த்தவைத்து ஆசீர்வாதத்தினையும் தந்துள்ளார் அந்தவகையில் தற்பொது பலஇடங்களிளும் நாகராசா மதியழகன் ஆகியநான் வில்லிசையை நிகழ்த்தி வருகின்றேன் அவருடன் பதினேழு வருடங்கள் வில்லிசைநிகழ்த்தியவன், அது மட்டுமல்ல எனது இரண்டாவது சகோதரன் நாகராசா சிவபாதசுந்தரம் அவர்கள் பத்து வருடத்திற்கு மேல் க.நா. கணபதிப்பிள்ளை சின்னமணியுடன் வில்லிசை நிகழ்தியவர் இவர் தற்பொழுது பிரானஸ் நாட்டில் வில்லிசை நிகழ்த்தி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய வில்லிசைக்கலையை என்னிடம் தந்ததைஇட்டு மிகவும் பெருமைப்படுவதுடன் இதனை அழியவிடாது தொடர்ந்து மக்கள்மத்தியில் எடுத்துச்செல்வேன், எடுத்துச் செல்கின்றேன் அத்துடன் இதற்கு ஒத்தாசையாக அம்பிகாவதி விஜயநாதன், தவநாதன் றொபேட், முருகேசு சடாச்சரம், சிவசுப்பிறமணியம், பேன்றவர்கள் பக்கபலமாக உள்ளார்கள்.
 
எனவே இந்தவேளையில் அவருடைய ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன் அவருடைய குடும்பத்தவர்க்கும், பிள்ளைகளுக்கும் இந்த நேரத்தில் ஆறுதல் கூறுவதுடன் நன்றியையும் தெரிவித்து நிற்கின்றேன்
 
இப்படிக்கு
அன்புள்ள சிஸ்யன்
A.N. மதியழகன்
'கலைவாணர் வில்லிசைக்குழு'
 
==மறைவு==
"https://ta.wikipedia.org/wiki/க._நா._கணபதிப்பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது