"பாரதிய ஜனதா கட்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

45 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
கட்சியின் தலைவரே கட்சியில் உயர்ந்த அதிகாரம் உடையவராவார். அவரது பதவிக்காலம் மூன்றாண்டுகளாகும். ஒருவர் தலைவர் பதவியில் ஒருமுறை மட்டுமே மூன்றாண்டுகள் செயல்பட முடியும். ஆனால் 2012 ஆம் ஆண்டு இந்த விதி தளர்த்தப்பட்டு, ஒருவரே இரண்டு முறை தொடர்ந்து தலைவராக செயல்படும் வகையில் மாற்றப்பட்டது.<ref>Compare Article XXI of the [http://eci.nic.in/eci_main/mis-Political_Parties/Constitution_of_Political_Parties/Constitution_of_Bharatiya%20Janata%20Party.pdf 6 February 2004 version] of the BJP constitution with that in the [http://www.bjp.org/images/pdf_2012_h/constitution_eng_jan_10_2013.pdf September 2012 version]. Retrieved on 4 April 2014.</ref><ref>"[http://timesofindia.indiatimes.com/india/BJP-amends-constitution-allowing-Nitin-Gadkari-to-get-a-second-term/articleshow/16587211.cms BJP amends constitution allowing Nitin Gadkari to get a second term]". ''The Times of India''. Sep 28, 2012. Retrieved on 4 April 2014.</ref> அண்மையில் [[வெங்கையா நாயுடு]] மற்றும் அத்வானி ஆகியோர் இப்பதவியில் இருந்து சில சர்ச்சைகள் காரணமாக விலகினர். [[ராஜ்நாத் சிங்]] இப்பதவியில் 2006 முதல் 2009 வரை நீடித்தார். தலைவருக்கு அடுத்து துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், பொருளாளர்கள் மற்றும் செயலாளர்கள் என பலர் உள்ளனர். கட்சியின் உயர்ந்த அதிகாரமுடைய அமைப்பான தேசிய செயற்குழு, நாடு முழுவதும் உள்ள பல தலைவர்களை உள்ளடக்கியது. மாநில அளவிலும் இதைப் போன்றே அமைப்புகளை பா.ஜ.க கொண்டுள்ளது.<ref>{{cite web|url=http://www.bjp.org/content/view/764/426/ |title=Bharatiya Janata Party – The Party with a Difference |publisher=Bjp.org |accessdate=16 September 2011}}</ref>
 
பா.ஜ.க வின் பல தலைவர்கள் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கில் இருந்தவர்கள். விஷ்வ இந்து பரிஷத், சுவதேசி ஜகரன் மஞ்ச் போன்ற இன்ன பிற [[சங்கப் பரிவார்|சங் பரிவார்]] அமைப்புகளோடு பா.ஜ.க நட்புறவு கொண்டுள்ளது.
 
''பா.ஜ.க மகிலா மோர்ச்சா'' என்ற பெண்கள் அமைப்பையும், ''பாரதிய ஜனதா யுவா மோர்ச்சா'' என்ற இளைஞர் அமைப்பையும், ''பா.ஜ.க மைனாரிட்டி மோர்ச்சா'' என்ற சிறுபான்மையினர் அமைப்பையும் பா.ஜ.க உள்ளடக்கியுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1857053" இருந்து மீள்விக்கப்பட்டது