பிரீட்ரிக் நீட்சே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, removed: {{Link FA|ast}}
No edit summary
வரிசை 23:
}}
 
'''பிரீட்ரிக் நீட்சே''' அல்லது '''பிரட்ரிக் நீட்சே''' எனச் சுருக்கமாக அறியப்படும் '''பிரீட்ரிக் வில்ஹெல்ம் நீட்சே''' (Friedrich Wilhelm Nietzsche - அக்டோபர் 15, 1844 – ஆகஸ்ட் 25, 1900) 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு [[செருமனி|ஜெர்மானிய]] [[மெய்யியலாளர்|மெய்யியலாளரும்]], [[மொழியியலாளர்|மொழியியலாளரும்]] ஆவார். இவர் [[மதம்]], [[ஒழுக்கநெறி]], சமகாலப் [[பண்பாடு]], [[மெய்யியல்]], [[அறிவியல்]] ஆகியவை தொடர்பில் பல முக்கிய ஆக்கங்களை எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் ஒரு தனித்துவமான [[ஜெர்மன் மொழி]]ப் பாணியில் அமைந்திருந்தன. நீட்சேயின் செல்வாக்கு மெய்யியலுக்கு உள்ளேயும் வெளியேயும் குறிப்பிடத்தக்க அளவில் இருந்துவருகிறது. சிறப்பாக [[இருப்பியல்வாதம்]], [[பின்நவீனத்துவம்]] ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவரது பாணியும்; உண்மை தொடர்பான [[விழுமியம்]], [[புறநிலைநோக்கு]] என்பவை குறித்த அவரது கேள்விகளும்; அவற்றை விளக்குவது தொடர்பில் பல சிக்கல்களை ஏற்படுத்தின. இதனால் அக்காலத்து ஐரோப்பிய மெய்யியலிலும், [[பகுப்பாய்வு மெய்யியல்]] துறையிலும் பல துணை நூல்கள் உருவாகின.
 
பேரிடர்களை வாழ்வின் உறுதிப்பாட்டு நிகழ்வுகளாக விளக்குதல்; மீள்நிகழ்வின் நிலைபேறு (eternal recurrence); [[பிளேட்டோனிசம்|பிளேட்டோனிசத்துக்கான]] மறுப்பு; [[கிறிஸ்தவம்]], [[சமநோக்குவாதம்]] (Egalitarianism) என்பவற்றை மறுத்தல் என்பவை இவருடைய முக்கியமான எண்ணக்கருக்கள்.
 
மெய்யியலுக்கு வருவதற்குமுன் இவர் ஒரு மொழியியலாளராகப் பணியைத் தொடங்கினார். இவருக்கு 24 வயதாக இருக்கும்போது, [[பேசல் பல்கலைக்கழகம்|பேசல் பல்கலைக்கழகத்தின்]] மொழியியல் துறைத் தலைமைப் பதவி இவருக்குக் கிடைத்தது. ஆனால், 1879 ஆம் ஆண்டில் உடல்நலக் குறைவினால் இப்பதவியில் இருந்து அவர் விலகினார். 1889 ஆம் ஆண்டில் இவருக்குத் தீவிரமான [[மனநோய்|மனநோயின்]] அறிகுறிகள் தென்பட்டன. இதனால், 1900 ஆவது ஆண்டில் அவர் இறக்கும்வரை, தனது தாயினதும், சகோதரியினதும் பாதுகாப்பில் இருக்கவேண்டி ஏற்பட்டது.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
*[http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87-10/article6501277.ece பிரட்ரிக் நீட்சே]
 
[[பகுப்பு:மெய்யியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பிரீட்ரிக்_நீட்சே" இலிருந்து மீள்விக்கப்பட்டது