வீரமுனைப் படுகொலைகள், 1990: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tamil23 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''வீரமுனைப் படுகொலைகள்''' (''Veeramunai massacre'') என்பது [[1990]] ஆம் ஆண்டு [[ஆகத்து 12]]ம் நாளில் [[கிழக்கிலங்கை]] [[அம்பாறை]] மாவட்டத்தில் [[வீரமுனை]] என்னும் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் முஸ்லீம் காடையர்களால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும்.
 
[[சம்மாந்துறை]] பிரதேசத்தில் நிகழ்ந்த இனவன்செயல் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான [[வீரச்சோலை]], [[மல்லிகைத்தீவு]], [[மல்வத்தை]], [[வளத்தாப்பிட்டி]], [[சொறிக்கல்முனை]], அம்பாறை பகுதிகளைச்சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தை குட்டிகளுடன் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும் வீரமுனை இராமகிருட்டிண மிசன் பாடசாலை வளவினுள்ளும் 1990 சூன் மாதம் முதல் சூலை மாதம் வரை தஞ்சம் புகுந்திருந்தனர்.
 
இக்காலகட்டத்தில், ஆகத்து 12 ம் நாளன்று இவற்றினுள் புகுந்த ஊர்காவல்படைக் கும்பல் ஒன்று 400க்கும் அதிகமான பொதுமக்களை சுட்டும் வெட்டியும் தாக்கினர். இவர்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 55 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அதிகமானோர் படுகாயமுற்றனர். அவ்வேளையில் கடத்தப்பட்டோர் பற்றி எவ்விதத் தகவலும் இல்லை. அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/வீரமுனைப்_படுகொலைகள்,_1990" இலிருந்து மீள்விக்கப்பட்டது