சனமேசயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
மகாபாரதத்தில், ஜனமேசயனுக்கு ஆறு தம்பியர்கள் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள், காக்சசேனன், உக்கிரசேனன், சித்திரசேனன், இந்திரசேனன், சுசேனன், நாக்கியசேனன் என்போராவர் என்று ஆங்கில விக்கியில் மேற்கோளுடன்<ref>''Journal of the Department of Letters'' by University of Calcutta (Dept. of Letters),Publ.Calcutta University Press, 1923, p2</ref>இருக்கிறது. மகாபாரதத்தின் ஆதிபர்வம் 3ம் பகுதியில் சுரூதசேனா, உக்ரசேனா, பீமசேனா ஆகியோர் அவனுடன் பிறந்த மூன்று தம்பிகளாவர் என்ற குறிப்பே இருக்கிறது.<ref>[http://mahabharatham.arasan.info/2013/01/Mahabharatha-Adiparva-Section3a.html "தமிழ் மஹாபாரதம்"]</ref>, <ref>[http://www.sacred-texts.com/hin/m01/m01004.htm "Mahabharata Adiparva section 3 of Kisari Mohan Ganguli in english"]</ref> மகாபாரதத்தின் தொடக்கப் பகுதிகளில் சனமேசயனின் வாழ்க்கை தொடர்பான பல விடயங்கள் கூறப்பட்டுள்ளன. இவற்றுள் தக்சசீலத்தைக் கைப்பற்றியதும், தக்சகன் என்னும் நாகத்துடனான சண்டையும் அடங்குகின்றன. இவனது தந்தையான பரீட்சித்துவின் இறப்புக்குத் தக்சகன் காரணமாக இருந்ததால், அவன் நாக இனத்தையே அழிப்பதில் குறியாக இருந்தான்.
 
அதற்காகமேலும் [[உத்தங்கர்]] தூண்டுதல் காரணமாகவும் ''சர்ப்ப சத்ரா வேள்வி'' யை நடத்த ஏற்பாடுகள் செய்கிறான். நாக அரசன் [[தட்சகன்]] நாக வேள்வியில் விழுந்து இறக்கும் தருவாயில், நாககன்னி [[ஜரத்காரு|ஜரத்காருவுக்குப்]] பிறந்த [[ஆஸ்திகர்]] அவனது வெறித்தனமான பாம்புகள் அழிப்பை தடுக்கிறார். அப்போது அங்கு வரும் [[வேதவியாசர்]], , ஒரு சாபத்தினை நிறைவேற்றவேண்டி ஒருவர் இயற்றிய செயலுக்காக, அந்த இனத்தவரையே அழிப்பது அறமாகாது என்றும் [[பாண்டவர்]] வழித்தோன்றலுக்கு இது அழகல்ல எனவும் எடுத்துச் சொல்ல, நாக வேள்வியை கைவிடுகிறான். தனது முன்தாதையர்கள் பற்றி அறிய விரும்பிய சனமேசயனுக்கு, வியாசர் தனது சீடர் [[வைசம்பாயனர்|வைசம்பாயனரிடம்]] மகாபாரதக்கதையை அதே வேள்வி நடந்த இடத்தில் சொல்லப்பணிக்கிறார்.
 
==மேற்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/சனமேசயன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது