கணபதி காங்கேசர் பொன்னம்பலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 16:
==செல்வாக்குச் சரிவு==
 
தமிழ்க் காங்கிரசில் இருந்து பிரிந்த [[எஸ். ஜே. வி. செல்வநாயகம்|செல்வநாயகம்]], [[கு. வன்னியசிங்கம்|வன்னியசிங்கம்]], [[ஈ. எம். வி. நாகநாதன்|நாகநாதன்]] முதலிய தலைவர்கள் [[இலங்கைத் தமிழரசுக் கட்சி|தமிழரசுக் கட்சி]] என அழைக்கப்பட்ட கூட்டாசிக் கட்சியை (Federal Party) உருவாக்கினர். தமிழ்க் காங்கிரசைவிடக் கூடிய தமிழ்த் தேசியவாதக் கட்சியாக அடையாளம் காணப்பட்ட இக் கட்சியின் செல்வாக்கு வளர்ந்தபோது, காங்கிரசின் செல்வாக்குக் குறையத் தொடங்கியது.
 
1952 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழரசுக் கட்சியின் ஈ. எம். வி. நாகநாதன், பொன்னம்பலத்தை எதிர்த்து யாழ்ப்பாணத் தொகுதியில் போட்டியிட்டார். இத் தேர்தலில் பொன்னம்பலம் வெற்றி பெற்றார் ஆயினும், வாக்கு வித்தியாசம் குறைவடைந்ததுடன், நாடாளுமன்றத்தில் கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையும் குறைந்தது. 1956 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் காங்கிரசுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது. இத் தேர்தலில் இக் கட்சியின் சார்பில் பொன்னம்பலம் மட்டுமே மிகவும் குறைந்த பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/கணபதி_காங்கேசர்_பொன்னம்பலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது