பகாவுல்லா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 59 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 17:
இவரின் புகழ் வெகுவேகமாக எங்கெங்கும் பரவியது. இதன் காரணமாக அங்கு பாரசீகத்தின் தூதராக பணியாற்றியவரின் பொறாமைக்கும் ஆளானார். அத்தூதரின் தூண்டுகோலின் காரணமாக [[துருக்கி]]ய மன்னரின் ஆணைப்படி [[இஸ்தான்புல்]] நகருக்கு வரும்படி பஹாவுல்லா ஆணையிடப்பட்டார். இந்த ஆணையின் முதல் படியாக, [[ஏப்ரல் 21]]ம் நாள் அவர் [[டைகிரிஸ் நதி]]க் கரையிலுள்ள ரித்வான் தோட்டம் எனும் பூங்காவிற்கு முதலில் சென்று 12 நாட்கள் தங்கினார். அவரின் குடும்பத்தினர் அவர் சென்ற ஒன்பதாம் நாள் அவரோடு சென்று சேர்ந்தனர். பிறகு 12வது நாள் அவரும் அவர்தம் குடும்பத்தினரும் சில நண்பர்களும் ரித்வான் தோட்டத்தை விட்டு கொன்ஸ்டான்டினோப்பல் (இஸ்தான்புல்) நகரை நோக்கிப் பிரயாணத்தைத் துவங்கினர்.
 
ரித்வான் தோட்டத்தில் பஹாவுல்லா சென்றடைந்த முதல் நாளன்று ‘பா’ப் அவர்களால் முன்னறிவிக்கப்பட்ட கடவுளின் தூதர் தாமே என அங்கிருந்தோருக்கு பஹாவுல்லா பகிரங்கமாக அறிவித்தார். முகமது முன்னறிவித்த மஹ்தி மற்றும் தூதரும் தாமே என அறிவித்தார். ரித்வான் தோட்டத்தில் செய்த இந்த அறிவிப்பு தினம் ([[ஏப்ரல் 21]]) உலகம் முழுவதும் உள்ள பஹாய்களால் ‘ரித்வான் முதல்’ நாள் என ஒரு மாபெரும் விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றது. இந்த ரித்வான் தோட்டத்தை விட்டு பஹாவுல்லா தமது குடும்பத்தினருடனும் வேறு பல நம்பிக்கையாளர்களுடனும் இஸ்தான்புல் நகரை நோக்கி பயணத்தைத் தொடங்கினார்.
 
சில மாதங்களே இஸ்தான்புல் நகரில் இருந்தார். ஆனால் அவரை அங்கும் இருக்கவிடாமல் துருக்கி அரசாங்கம் அவரை அந்நாளில் ஏட்ரியாநோப்பல் என வழங்கப்பட்ட எடிர்னே நகருக்குப் போகும்படி ஆணையிட்டது. அங்கும் அவரது எதிரிகளால் பஹாவுல்லா மறுபடியும் பல இன்னல்களுக்கு உட்படுத்தப்பட்டார். இதன் பின்னணியில் செயல்பட்ட அவருடைய எதிரிகளின் செயல்களினால் அரசாங்கம் மீண்டும் பஹாவுல்லாவை நாடுகடத்த முடிவு செய்தனர். இம்முறை அவரை பாலஸ்தீனத்தின் ஆக்கா நகருக்கு நாடுகடத்த முடிவு செய்யப்பட்டது. ஏட்ரியாநோப்பல் நகரில் வசித்த காலத்தில் பஹாவுல்லா செய்த மகத்தான காரியம், தமது தூதுப்பணியை, தாம்தான் இறைவனின் அவதாரம் என்பதை நிருபங்கள் மூலம் உலக அரசர்களுக்கும், அதிபர்களுக்கும், சமயத்தலைவர்களுக்கும் தெரிவித்ததே ஆகும். ஆக்கா நகரம் ஒட்டமான் சாம்ராஜ்யத்திற்கு உட்பட்ட ஓர் ஊராகும். இந்த இடம் ஒட்டமான் சாம்ராஜ்யத்தின் குற்றவாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடமாகும். பஹாவுல்லா அவர்களும் அவருடன் இருந்தவர்களும் குற்றவாளிகளாகவே இங்கு அனுப்பப்பட்டனர். ஆக்கா நகர சிறைவாசத்தைப் பற்றி கூறுகையில் தமது வாழ்க்கையில் அனுபவித்த துன்பங்கள் அனைத்தும் இந்த ஆக்கா நகரத்தின் சிறையில் அனுபவித்த துன்பத்திற்கு ஈடாகாது என பஹாவுல்லா கூறுகின்றார். ஆக்கா நகரத்தின் மீது பறக்கும் எந்தப் பறவையும் அந்த நகரின் கொடிய துர்நாற்றக் காற்று பட்டவுடன் அப்படியே செத்து விழும் என்பது அக்காலத்து வழக்கு. இங்கு பஹாவுல்லா படிப்படியாக ஆக்கா நகரத்தின் ஆட்சியாளர்கள் மற்றும் மக்களின் நன்மதிப்பை பெற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/பகாவுல்லா" இலிருந்து மீள்விக்கப்பட்டது