==எதிருருக்களின்மாற்றுருக்களின் வேறுபாடுகளும், மரபணு கோளாறும்==
பல மரபணு கோளாறு நோய்கள், ஒரு தனி மரபணுவில் இருக்கும் இரு பின்னடைவான எதிருருக்களால்மாற்றுருக்களால், அதாவது சமநுக பின்னடைவான எதிருருக்களால்மாற்றுருக்களால் ஏற்படுகின்றது. இவை பின்னடைவான மரபணு கோளாறு எனக் குறிப்பிடப்படும். [[அல்பினிசம்]], Cystic fibrosis, Galactosemia, Phenylketonuria (PKU), Tay-Sachs Disease என்பன இவ்வகையான நோய்களாகும். <br />
சில நோய்களை உருவாக்கும் எதிருருக்கள்மாற்றுருக்கள் பின்னடைவானதாக இருந்தாலும், அந்த மரபணுவுக்குரிய, மரபணு இருக்கை இலிங்க நிறப்புரிகளில் ஒன்றான X நிறப்புரியில் அமைந்திருப்பதனால், [[ஆண்]]களில் இவை ஒரு பிரதியை (அரைநுகம்) மட்டுமே கொண்டிருக்கும். [[பெண்]]களில் இரு X நிறப்புரிகள் இருப்பதனால், இரு பின்னடைவான எதிருருக்களைக்மாற்றுருக்களைக் கொண்ட சமநுகமே நோயைத் தோற்றுவிக்க முடியும். ஆண்களில் ஒரு பின்னடைவான எதிருருமாற்றுரு மட்டுமே நோயைத் தோற்றுவிக்கப் போதுமானது. இதனால், இவ்வகை நோய்கள் ஆண்களில் அதிகமாகக் காணப்படும். [[குருதி உறையாமை]], [[நிறக்குருடு]] போன்றவை இவ்வகையான நோய்களாகும்.