இயற்கைத் தேர்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 14:
[[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] இடம்பெற்ற ஒரு நிகழ்வு இயற்கைத் தேர்வினை உறுதிப்படுத்தியது. Peppered moth (''Biston betularia'') எனப்படும் அந்துப்பூச்சி இனத்தில் typica அல்லது betularia எனப்படும் வெளிர் நிற வகையும், carbonaria எனப்படும் கருமை நிற வகையும் காணப்படுகின்றன. ஆரம்பத்தில் மரங்களிலுள்ள பாசிக்காளான்களின் (Lichen) வெளிர் நிறத்தையொத்த அந்துப்பூச்சியின் வகை அதிகளவில் காணப்பட்டது. இதற்குக் காரணம் மரத்தண்டிலுள்ள பாசிக்காளான்களின் நிறத்தோடு ஒத்திருந்ததால், வெளிர் நிறமானவை பறவைகளால் இலகுவில் அடையாளம் காணப்படவில்லை. 19 ஆம் [[நூற்றாண்டு|நூற்றாண்டில்]] ஐக்கிய இராச்சியத்தில் நிகழ்ந்த கைத்தொழில் புரட்சியின் பின், திடீரென ஏற்பட்ட [[தொழிற்சாலை]]களின் மாசினால், [[மரம்|மரத்தின்]] தண்டுகள் கறுப்பு நிறமாக மாறி, பாசிக்காளான்களும் இறந்தன. 1848 ஆம் ஆண்டில், இந்த இனத்தின் கருமை நிறம் கொண்ட தனியன்கள் [[மான்செஸ்டர்]] பிரதேசத்தில் கண்டறியப்பட்டது. அந்த இடத்தில், 1895 ஆம் ஆண்டளவில், இந்த அந்துப்பூச்சியில், 98 % கருமை நிறமாகவே இருந்தது அவதானிக்கப்பட்டது. ஒரு வருடத்தில் ஒரு சந்ததியை மட்டும் உருவாக்கும் இந்த இனத்தைப் பொறுத்தளவில், இந்த மாற்றம் மிகவும் விரைவான மாற்றமாகும்.
 
சூழலினால் ஏற்பட்ட இந்த மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது, ஒரே [[மரபணு இருக்கை]]யில் அமைந்துள்ள ஒரு [[மரபணு]]வின் இரு [[எதிருருமாற்றுரு]] வடிவங்களாகும். இவற்றில் கருமை நிறத்துக்கான எதிருருமாற்றுரு [[ஆட்சியுடையது (மரபியல்)|ஆட்சியுடையதாக]] மாற்றம் பெற்று விட்டது. [[ஐரோப்பா]]வில் உள்ள இந்த உயிரி, இவ்விரு தோற்றங்களுடன், இரண்டுக்கும் இடைப்பட்ட நிறத்தில் பகுதிக்கருமை கொண்ட ஒரு வடிவமாக (''insularia'') உருவாகியுள்ளதாகவும், அது வேறு எதிருருக்களால்மாற்றுருக்களால் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் அறியப்பட்டது<ref name="Majerus 1998">Majerus, Michael. 1998. ''Melanism: Evolution in Action''. Oxford: Blackwell.</ref><ref>Clarke, Cyril A.; Sheppard, Philip M. 1964. Genetic Control of the Melanic Form ''insularia'' of the Moth ''Biston betularia'' (L.)". ''Nature'' '''202''': 215</ref>.
 
கருமை நிறத்திற்குரிய எதிருருமாற்றுரு [[சூழல் மாசடைதல்|சூழல் மாசு]] நிலைமைக்கு முன்னர் குறிப்பிட்ட இனத்தின் எண்தொகையில் குறைந்த மட்டத்தில் இருந்தது. பின்னர் சூழல் மாசினால் மரங்களில் கருமை படர, பாசிக்காளான்களும் அழிவடைய, வெளிர்நிற வடிவம் இலகுவாக பறவைகளுக்கு இரையாகின. இதனால் வெளிர்நிற எதிருருவுக்குரியமாற்றுருவுக்குரிய மட்டம் குறைய ஆரம்பித்தது. எனவே கருமைநிறம் ஆட்சியுடையதாகியது.
 
இதில் வேறொரு விடயமும் கவனத்தைக் கவர்ந்தது. ஒரு நூற்றாண்டின் பின்னர் குறிப்பிட்ட கருமை நிற வடிவத்தில் கருமையின் அளவும் கூடியிருந்தது. இதனால், கருமை நிறமானது மிகவும் உறுதியான தேர்வுக்கு உட்பட்டிருந்தது அறிய முடிந்தது.
வரிசை 22:
மரத்தின் பின்புலத்தை ஒத்திருக்கும் தன்மைகொண்டு, மரங்களில் ஓய்வான நிலையில் இருந்து, அதன்மூலம் [[பூச்சியுண்ணி|பூச்சியுண்ணும்]] [[பறவை]]களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளக்கூடிய இயல்புடைய இது போன்ற இனங்களில் மட்டுமே இந்த தொழிற்சாலை மாசினால் ஏற்பட்ட தாக்கம் வெளித் தெரிந்தது. ஏனைய இறந்த இலைகளில் வாழும் [[பூச்சி]]களிலோ, அல்லது [[பட்டாம்பூச்சி]]களிலோ இந்தத் தாக்கம் வெளிப்படவில்லை<ref name="Majerus 1998"/><ref name="Ford 1965">Ford, E. B. 1965. "Heterozygous Advantage". In ''Genetic Polymorphism''. Boston/London.: MIT Pr./Faber & Faber</ref><ref>Kettlewell H.B.D. 1973. ''The Evolution of Melanism''. Oxford: Oxford U. Pr.</ref>.
 
மேற்கூறிய நிகழ்விலிருந்து '''தக்கன பிழைத்தல்''' என்ற இயற்கைத் தேர்வின் முக்கிய நியமம் புலனாகின்றது. 'பிழைத்தல்' எனப்படுவது ஒரு குறிப்பிட்ட உயிரினம் எவ்வளவு காலம் உயிர்வாழ்கின்றது என்பதல்ல, அது இனப்பெருக்கத்தில் எந்தளவுக்கு வெற்றியடைகின்றது என்பதேயாகும். உதாரணமாக ஒரு உயிரினம் ஏனையவற்றைவிடக் குறுகிய காலம் வாழ்ந்தாலும் அதிக குட்டிகளை உருவாக்கினால் அதன் மரபணுப் பரம்பலின் அளவு அதிகமாகும். இதனால் குறிப்பிட்ட அந்த உயிரினம், தனது பிரத்தியேகமான இயல்பின் காரணமாக மிக அதிகளவில் உருவாக்கப்படும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இயற்கைத்_தேர்வு" இலிருந்து மீள்விக்கப்பட்டது