கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fixed Typo
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 25:
'''கேப்டன் அமெரிக்கா: உள்நாட்டுப்போர்''' (ஆங்கிலம்: Captain America: Civil War) 2016இல் திரைக்கு வரவிருக்கும் [[அமெரிக்கா|அமெரிக்க]] சூப்பர்ஹீரோத் திரைப்படமாகும். இத்திரைப்படம், மா(ர்)வல் வரைகதைகளில் வரும் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு, மா(ர்)வல் ஸ்ரூடியோவினால் தயாரிக்கப்பட்டு வால்ட் டிஸ்னி ஸ்ரூடியோவின் மோஷன் பிக்சே(ர்)ஸ் கிளையினால் விநியோகிக்கப்படவுள்ளது. இது 2011இல் வெளியான [[கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர்]] மற்றும் 2014இல் வெளிவந்த [[கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர்|கேப்டன் அமெரிக்கா: வின்ரர் சோல்ஜர்]] ஆகிய திரைப்படங்களின் தொடர்ச்சியும், மா(ர்)வல் சினிமரிக் யூனிவர்ஸ்-இன் வரிசையில் பதின்மூன்றாவது திரைப்படமுமாகும்.[[ரூசோ சகோதரர்கள்|அந்தனி றூஸ்ஸோ]] மற்றும் [[ரூசோ சகோதரர்கள்|ஜோ றூஸ்ஸோ]] இயக்கும் இத்திரைப்படத்தின் திரைக்கதையை கிறிஸ்டோஃபர் மா(ர்)கஸ் மற்றும் ஸ்டீஃபன் மெக்ஃபீலி ஆகியோர் எழுதியிருப்பதுடன், [[கிறிஸ் எவன்ஸ்]], [[ராபர்ட் டவுனி ஜூனியர்]], [[ஸ்கார்லெட் ஜோஹான்சன்|ஸ்கார்லெட் ஜொஹான்சன்]], செபஷ்யன் ஸ்ரான், அந்தனி மெக்கீ, போல் பெற்றனி, ஜெரேமி ரென(ர்), டொன் சியடெல், எலிசபெத் ஓல்சன், போல் றட் ஆகியோர் நடித்தள்ளனர்.கேப்டன் அமெரிக்கா: உள்நாட்டுப்போரில், கேப்டன் அமெரிக்காவும் ஏனைய அவெஞ்சர்சு குழுவின் அங்கத்தினரும் உலகைக் காப்பாற்றும் பணியைத் தொடர்கின்றபோதிலும், அவர்களால் விளைவிக்கப்பட்ட அதிகப்படியான சேதங்களால் அரசாங்கம் சூப்பர்ஹியூமன் பதிவுச் சட்டத்தினைக் கொண்டு வந்ததின் காரணமாக அவெஞ்சர்சு குழு பிரிவுபடுகிறது.
 
[[மார்க் மில்லரின்[[ "கேப்டன் அமெரிக்கா: உள்நாட்டுப்போர்" எனும் சித்திரக் கதையின் கதையமைப்பு எண்ணக்கருவை மையமாகக் கொண்டு, மார்கஸ் மற்றும் மெக்பீலியின் திரைக்கதை எழுத்துப் பணிகளுடன் இத்திரைப்படத்தின் ஆக்கப் பணிகள் 2013இல் ஆரம்பமாயின. 2014இன் ஆரம்பத்தில் ரூஸ்ஸோ சகோதரர்களின் முந்தைய திரைப் படத்தினைத் (கேப்டன் அமெரிக்கா தி வின்ரர் சோல்ஜர்) திரையிடும் சோதனை முயற்சிகள் வெற்றியளிக்கவே, இத்திரைப்படத்துக்கான பணிகளிலும் இருவரும் அமர்த்தப்பட்டனர். 2014 அக்டோபரில் இதற்கு "கேப்டன் அமெரிக்கா: உள்நாட்டுப்போர்" என்ற தலைப்பு முடிவானதுடன், ராபர்ட் டவுனி ஜூனியர் மற்றும் ஏனைய நடிகர்களும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஏப்ரல், 2014இல் [[அட்லான்டா|அட்லான்ரா]] பெருநகரப்பகுதியிலும் மேலதிகமாக [[புவேர்ட்டோ ரிக்கோ|போர்டோ ரிகோ]], [[பெர்லின்|பேளின்]] மற்றும் [[ஐசுலாந்து|ஐஸ்லாந்திலும்]] படப்பிடிப்புகள் ஆரம்பமாயின.
 
"கேப்டன் அமெரிக்கா: உள்நாட்டுப் போர்" மே 6, 2016இல் [[முப்பரிமாண படிமம்|3டி]] மற்றும் ஐமேக்சில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/கேப்டன்_அமெரிக்கா:_சிவில்_வார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது