யுனெஸ்கோ கூரியர் தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
==இதழ் துவக்கம்==
1966இல் [[பாரிஸ்]] நகரில் மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற யுனெஸ்கோ உதவியது. அப்போது யுனெஸ்கோவின் தலைமை இயக்குநராக இருந்தவர் [[மால்கம் ஆதிசேசையா]]. அந்த மாநாட்டைக் கண்டு, 53 நாடுகளில் வாழும் தமிழர்களுக்குக் கூரியரின் சேவை தேவை என்பதை மால்கம் உணர்ந்தார். கூரியர் தமிழிதழ் துவக்கப்பட வேண்டும் என்று உறுதி கொண்டார். அதே ஆண்டில் மால்கம் இந்தியா வந்தார். அவருக்கு நடைமுறை சிக்கல் ஒன்று ஏற்பட்டது. யுனெஸ்கோவில் உறுப்பினராக இருப்பது இந்தியாதான். இந்தியாவில் ஒரு மாநிலம்தான் தமிழகம். எனவே நடுவணரசிடம் பேச்சு நடத்தவேண்டி இருந்தது. தமிழில் இதழ் ஆரம்பிக்க மறுப்பில்லை. ஆனால் இந்தியிலும் கூரியர் வெளியாக வேண்டும் என இந்திய அரசு நிபந்தனை விதித்தது. இந்தி மொழி கூரியருக்கான ஏற்பாடுகளைச் செய்தபின்பு மால்கம் சென்னை திரும்பினார்.
அன்றைய தமிழக முதல்வரான [[அண்ணாத்துரை|அண்ணா]], கல்வியமைச்சரான [[இரா. நெடுஞ்செழியன்|நெடுஞ்செழியன்]] ஆகியோரிடம் பேச்சு நடத்தினார். தமிழ் மொழியில் கூரியர் வெளியிடும் திட்டத்தைத் தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. 1967ஆம் ஆண்டு தமிழில் கூரியர் துவக்கப்பட்டடு உலக நாட்டு தமிழர்களுக்குக் கிடைத்தது.''<ref>தினமணிக் கதிர் கட்டுரை, அரசியலை ஒதுக்கும் மாத இதழ்,26 ஆகஸ்ட் 1993, பக்கம் 13</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/யுனெஸ்கோ_கூரியர்_தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது