சமணர் மலை, மதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
== செட்டிப்புடவு ==
[[File:Jain Sculpture from the Samanar Malai, Madurai..JPG|thumb|[[மகாவீரர்]] சிற்பம், செட்டிப்புடவு]]
 
சமணர் மலையின் தென்மேற்கு பகுதியில் சிற்பங்களுடன் கூடிய குகை ஒன்று காணப்படுகிறது. இந்த குகையின் இடதுபுற பாறை முகப்பில் புடைப்புச்சிற்பமாக செதுக்கப்பட்டுள்ள அழகிய முக்குடை அண்ணலின் (மகாவீரர்) காதுநீண்ட உருவம் ஒரு செட்டியாரைப் போல் தோற்றமளிக்கிற காரணத்தால் செட்டிப்புடவு என அழைக்கப்படுகிறது.இச்சிற்பத்தில் [[மகாவீரர்|மகாவீரர்]], இருபுறமும் சாமரம் வீசுபவர்கள் சூழ, முக்குடைக்கு மேலே வானவர்கள் பறந்துவர, அரசமரத்தின்கீழ், மூன்று சிம்மங்கள் தாங்கும் ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார். அதன் கீழே இச்சிற்பத்தை செய்து கொடுத்தவரைப் பற்றிய [[வட்டெழுத்து|வட்டெழுத்துக்]] கல்வெட்டு காணப்படுகிறது.
வரிசை 14:
 
== பேச்சிப்பள்ளம் ==
[[File:RELICS OF JAINS - Bas-relief sculptures.jpg|thumb|[[தீர்த்தங்கரர்|தீர்த்தங்கரர்களின் சிற்பம்]], பேச்சிப்பள்ளம்]]
இந்த மலையில் இயற்கையாக அமைந்த ஒரு சுனை உள்ளது.இந்த சுனையே பேச்சிப்பள்ளம் என்று அழைக்கப்படுகிறது.பேச்சிப்பள்ளத்தில் எட்டு தீர்த்தங்கரர் சிற்பங்களும், வட்டெழுத்துக் கல்வெட்டுக்களாக செதுக்கியவர் பெயர்களும் உள்ளன. இங்கு பாகுபலி (கோமதேஸ்வரர்), பார்சுவநாதர், முக்குடைநாதர் சிற்பங்கள் உள்ளன.அச்சணந்தி முனிவரின் தாயார், இங்கு செயல்பட்ட பள்ளியின் தலைவர் குணசேனதேவர், குறண்டி திருக்காட்டாம் பள்ளியைச் சேர்ந்தோர் முதலியோர் இச்சிற்பங்களைச் செய்துள்ளதை இங்குள்ள கல்வெட்டுகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
 
வரிசை 37:
==இதனையும் காண்க==
* [[யானைமலை, மதுரை|யானைமலை]]
* [[ஒத்தக்கடை]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சமணர்_மலை,_மதுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது