"பயனர்:Chenkodan Sabalingam/மணல்தொட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,200 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| Live Attractions = கீழே பார்க்கவும்
}}
 
இதன்பிறகு "மியூற்றன்று" எனும் பெயர்கொண்டு இயங்கும் காடையர் கும்பலின் மோதல் நடவடிக்கைகளிலிருந்து காரீ கெல்லி எனும் பதின்மூன்று வயதுச் சிறுமியை பேட்மேன் காக்கிறார். பேட்மேனின் காலஞ்சென்ற உதவியாளன் "உறொபின்" போல உடையணிந்து நகரெங்கும் அவரைத் தேடிச் செல்கிறாள் அச்சிறுமி. நகரத்தின் குப்பை கொட்டும் பகுதியில் "மியூற்றன்று" அமைப்புடன் மோதுகையில் அவரைக் காண்கிறாள். தனது போர்க்கருவிகள் மூலம் மியூற்றற்றுகளைத் தோற்கடிக்கின்றபோதிலும், அவர்களின் தலைவி வீழ்த்தும் முயற்சியில் தோல்வியடைகிறார் பேட்மேன். மியூற்றன்று தலைவனின் கவனத்தை சிதறடித்து பேட்மேன் தப்பிக்கக் கெல்லி உதவுகின்றாள். பிற்பாடு பேட்மேன், ஓய்வுபெறும் காவற்றுறை அதிகாரியான சேம்சு கோடன் மற்றும் கெல்லியின் உதவியுடன் மியூற்றன்று தலைவனை வெல்கிறார். சிதறடிக்கப்பட்ட மியூற்றன்று அமைப்பின் அங்கத்தவர்கள் சிலர் "சன்சு ஒப் பேட்மேன்" (பேட்மேனின் மகன்கள்" என்ற புது அமைப்பை உருவாக்குவதுடன், குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டிக்கிறனர்.
 
மனநலம் பாதிக்கப்பட்டு ஆக்கம் புகலிடத்தில் அனுமதிக்கப்படும் குற்றவாளியான சோக்கர், பேட்மேனின் மீள்வருகையால் கண்திறக்கின்றார். தான் குணமடைந்து விட்டதாகப் பிறரை நம்பவைக்கும் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நச்சுப்புகையின் பிரயோகத்தினால் அங்குள்ள அனைவரையுள் கொல்கிறார். மீண்டும் களியாட்ட நிகழ்வொன்றில் மக்களைக் கொலை செய்யும் இவரைத் தேடி பேட்மேன் வருவதற்குள் காலம் கடந்துவிடுகிறது. கடுங்கோபமுற்ற பேட்மேன் சோக்கரைக் முரட்டுத் தனமாகத் தாக்குகிறார். பெத்மேனைக் குற்றவாளி என்று மற்றோரை நம்பவைப்பதற்காக சோக்கர் தனது கழுத்தைத் திருகித் தற்கொலை செய்கிறார். இதிலிருந்து தப்பிச் செல்லும் பேட்மேனைப் பிடிக்கக் காவற்றுறையினர் நகரமெங்கும் வலைவீசுகின்றனர்.
135

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1864155" இருந்து மீள்விக்கப்பட்டது