தஞ்சாவூர் ஓவியப் பாணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 16:
 
== உத்தி ==
[[File:Thanjavur Painting.jpg|right|thumb|250px|[[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணர்]] - [[உருக்குமணி]], தஞ்சாவூர் ஓவியப் பாணி ஓவியம்]]
 
பொதுவாகப் பெரிய அளவில் இருக்கும் இந்த வகை ஓவியங்கள் வெகு நேர்த்தியான, செதுக்கல் வேலைப்பாடுகள் கொண்ட மரச் சட்டத்தின் நடுவில் அமைந்திருக்கும். சட்டமும் ஓவியத்தின் ஒரு பகுதியாகவே கருதப்படும். வரையப்படும் உருவங்கள் உருவ அளவில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருக்கும். கடவுளின் உருவம் பெரிய அளவில் கித்தானின் (கேன்வாஸ்) பெரும்பகுதியை நிறைத்திருக்கும். மற்ற உருவங்கள் ஓவியத்தின் கீழ்ப்பகுதியில் வரிசையிலோ, அல்லது ஒழுங்குடன் கூடிய குழுவாகவோ அமைந்திருக்கும். உருவங்களும் உருண்டு திரண்ட பருமனான உடல் கொண்டபடியாகவே படைக்கப்படும். அவற்றில் பெண்மை சாயல் மேலோங்கியிருக்கும். முரட்டுத்தனம் தவிர்க்கப்பட்டு நளினம் கூடியதாக அவை காணப்படும்.
 
இப்பாணி ஓவியங்களின் பின்புல வண்ணம் கரும்பச்சை, அடர் நீலம், ஒளிர் சிவப்பு ஆகிய வண்ணங்களில் இருக்கும். நீலம், மஞ்சள், பச்சை அல்லது வெள்ளை வண்ணங்களில் மைய உருவங்கள் அமையும். வண்ணங்கள் திடமான கலவையாகத் தீட்டப்படும். உருவக்கோடுகள் வண்ணங்களுக்கான எல்லையை முடிவு செய்யும். உருவம் எப்போதும் ஒரு மாளிகையின் உட்புறத்தையோ, அல்லது கோயிலின் உள்சுற்றையோ பின்புலனாகக் கொண்டிருக்கும். பின்புலன் எவ்விதக் கட்டிட அமைப்பும் இல்லாது இருப்பினும் மேற்கவிகை, திரைசீலைகள் போன்றவை அதை உணர்த்தும் விதத்தில் இடம் பெற்றிருக்கும். திடமானதும் அழுத்தமானதுமான கோடுகள் ஓவியத்தை அமைக்கும்.இந்த ஓவியங்கள் இருண்ட அறையில் ஒளியை வீசும்.<ref name="ஜவுளித்துறை அமைச்சகம்"/>
 
 
== வடிவம் ==
"https://ta.wikipedia.org/wiki/தஞ்சாவூர்_ஓவியப்_பாணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது