"புராணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

151 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
===தமிழ் மொழியில்===
 
'''புராணம்''' என்ற சொல் [[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கியத்தில்]] [[மணிமேகலை]]யில் முதன்முதலில் வருகிறது. சமயக் கணக்கர்தம் திறம் கேட்ட காதையில் வைணவவாதியைக் குறிப்பிடும் போது, ''காதல் கொண்டு கடல்வணன் புராணம் ஓதினான்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், புராணம் என்ற சொல், [[தமிழ் மொழி]]யில் மணிமேகலை தோன்றிய காலத்திலேயே வழங்கப் பெற்றுள்ளது என அறிய முடிகிறது. "புராணவித், புராணி போன்ற சொற்கள் ரிக் வேதத்திலும் அதர்வன வேதத்திலும் காணப்படுகின்றன. எனினும் இச் சொற்கள் புராணத்தைக் குறிக்கவில்லை. பழமையானவன், பழமையைப் பரப்புகிறவன் என்ற பொருளிலேயே இச்சொற்கள் வழங்கியிருக்கின்றன. திருவாசகத்திலே [[மாணிக்கவாசகர்]] முதலில் பாடியது [[சிவபுராணம்]]. அங்கே புராணம் என்பதில் இறைவனுடைய பழமையைச் சொல்கிறார்கள். ஆகவே புராணம் என்ற சொல்லுக்குப் பழமை என்பது பொருள். <ref>கிருபானந்த வாரியார் எழுதிய “செஞ்சொல் உரைக்கோவை” நூல் பக்:181 </ref> [[சேக்கிழார்|சேக்கிழாரின்]] [[பெரியபுராணம்]] புகழ்பெற்றது.
 
== புராண ஆசிரியர் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1864329" இருந்து மீள்விக்கப்பட்டது