"பயனர்:Chenkodan Sabalingam/மணல்தொட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9,142 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை

{{unreferenced}}
இதன்பிறகு "மியூற்றன்று" எனும் பெயர்கொண்டு இயங்கும் காடையர் கும்பலின் மோதல் நடவடிக்கைகளிலிருந்து காரீ கெல்லி எனும் பதின்மூன்று வயதுச் சிறுமியை பேட்மேன் காக்கிறார். பேட்மேனின் காலஞ்சென்ற உதவியாளன் "உறொபின்" போல உடையணிந்து நகரெங்கும் அவரைத் தேடிச் செல்கிறாள் அச்சிறுமி. நகரத்தின் குப்பை கொட்டும் பகுதியில் "மியூற்றன்று" அமைப்புடன் மோதுகையில் அவரைக் காண்கிறாள். தனது போர்க்கருவிகள் மூலம் மியூற்றற்றுகளைத் தோற்கடிக்கின்றபோதிலும், அவர்களின் தலைவனை வீழ்த்தும் முயற்சியில் தோல்வியடைகிறார் பேட்மேன். மியூற்றன்று தலைவனின் கவனத்தை சிதறடித்து பேட்மேன் தப்பிக்கக் கெல்லி உதவுகின்றாள். பிற்பாடு பேட்மேன், ஓய்வுபெறும் காவற்றுறை அதிகாரியான சேம்சு கோடன் மற்றும் கெல்லியின் உதவியுடன் மியூற்றன்று தலைவனை வெல்கிறார். சிதறடிக்கப்பட்ட மியூற்றன்று அமைப்பின் அங்கத்தவர்கள் சிலர் "சன்சு ஒப் பேட்மேன்" (பேட்மேனின் மகன்கள்" என்ற புது அமைப்பை உருவாக்குவதுடன், குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டிக்கிறனர்.<ref name="DC Comics">[http://www.dccomics.com/blog/2015/04/24/superstar-writerartist-frank-miller-returns-to-batman]</ref>
{{Infobox comic book title
| title = த இடாக்கு நைற்று இறிற்றேண்சு
| image = த இடாக் நைற்று இறிற்றேண்சு.jpg
| caption = முதலாவது இதழின் அட்டைப் படம் (பெப்ரவரி 1986). பிராங்கு மில்லரால் வரையப்பட்ட இப்படத்திற்கு இலின் வாளீ வண்ணமூட்டியுள்ளார்.
| schedule = மாதந்தோறும்
| format = சிறுதொடர்
| limited =
| publisher = [[டீசி காமிக்ஸ்|இடீசீ வரைகதைகள்]]
| date = பெப்ரவரி - சூன் 1986
| issues = 4
| main_char_team = [[பேட்மேன்]]
சேம்சு கோடன்
காரீ கெல்லி
த சோக்கர்
[[சூப்பர்மேன்]]
| writers = ஃபிராங்கு மில்லர்
| artists = ஃபிராங்கு மில்லர்
| letterers = சோன் கொசுற்றான்சா
| Inkers = கிளாசு சான்சன்
| colorists = இலின் வாளீ
| editors = டிக் சியோடானோ
இடெனிசு ஓ'நீல்

'''த இடாக்கு நைற்று இறிற்றேண்சு''' (ஆங்கிலம்: The Dark Knight Returns ,தமிழ்: இருண்ட மறவனின் மீள்வருகை) 1986இல் நான்கு பாகங்களாக வெளியிடப்பட்ட [[வரைகதை|வரைகதைச்]] சிறுதொடராகும். [[பேட்மேன்|பேட்மேனைக்]] கதாநாயகனாகக் கொண்டு, ஃபிராங்கு மில்லரால் எழுதப்பட்டு, மில்லர் மற்றும் கிளாசு சான்சனின் சித்திரத்தில் வெளிவந்த இக்கதை இடீசீ காமிக்சினால் வெளியிடப்பட்டது. அவ்வருட இறுதியில் இத்தொடர்கள் தொகுக்கப்பட்டு வெளிவருகையில் முதற்கதையின் பெயரானது தொகுப்புக்கு வழங்கப்பட்டது. இது ஐம்பத்து ஐந்து வயதான புறூசு வெய்ன், ஓய்விலிருந்து மீண்டு குற்றங்களைத் தடுக்கும் தனது பணிக்கு மீளத்திரும்புவது பற்றியும் அதற்காக கோதம் நகரின் காவற்படையினர் மற்றும் ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் எதிர்ப்புகளைச் சந்திப்பது பற்றிய கதையாகும்.

''த இடாக்கு நைற்று சுரிறைக்சு அகென்'' (ஆங்கிலம்: The Dark Knight Strike Again, தமிழ்: இருண்ட மறவன் மீளத்தாக்குகிறான்) என்று தலைப்பிடப்பட்ட மூன்று பாகங்களைக் கொண்ட இக்கதையின் தொடர்ச்சி ஃபிராங்கு மில்லரால் எழுதப்பட்டு 2001இல் வெளிவந்தது. இதன் மூன்றாவது பாகமாக, த இடாக்கு நைற்று III: த மாசுரர் இறேசு, மாதம் (ஆங்கிலம்: , தமிழ்: இருண்ட மறவன் 3: சிறந்த சாதி) இருமுறை வெளிவரும் என்று 2015 ஏப்பிரலில் அறிவிக்கப்பட்டது. இது பிராங்கு மில்லர் மற்றும் பிறயன் அசறேலோவால் சேர்ந்து எழுதப்படுகிறது.<ref name="DC Comics">[http://www.dccomics.com/blog/2015/04/24/superstar-writerartist-frank-miller-returns-to-batman]</ref> பிளாசுபொயின்றுக்கு முன்னதான இடீசி பல்பிரபஞ்சத்தில் த இடாக்கு நைற்று இரிற்றேண்சு மற்றும் அதனுடன் தொடர்புபட்ட கதைகள் உலகு-31இல் நடைபெறுவதாகச் சித்தரிக்கப்படுகிறது.

=கதை=

திசுதோப்பிய எதிர்காலத்தின் கோதம் நகரத்தில் நடப்பதாகச் சித்தரிக்கப்படும் இக்கதையில், ஐம்பத்து ஐந்து வயதான புறூசு வெய்ன் குற்றங்களைத் தடுக்கும் பணியிலிருந்து பத்து வருடங்களாக ஓய்வுபெற்றுள்ளார். விளைவாகக் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதன் பிறகு ஒரு திருப்புமுனையைச் சந்திக்கும் புறூசு, தனது மனச்சாட்சிக்கு எதிராக நிற்கமுடியாமல் மீண்டும் குற்றங்களை வேரறுக்கும் பேட்மேனாக மாறுகிறார். புறூசு வெய்னாக அவர் தனது முன்னாள் எதிரியான காவீ இடென்ற்றின் முகச் சத்திரசிகிச்சைக்கு உதவுகிறார். குணமடைந்து விட்டதாகக் கருதப்படும் காவீ இடென்ற்று மீண்டும் குற்றங்களைச் செய்யத்தொடங்கவே, பேட்மேன் அவரை எதிர்கொள்கிறார். பணத்துக்காக நகரில் குண்டுவெடிப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார் இடென்ற்று. இடென்ற்றை எதிர்கொள்கையில் அவனது உண்மையான முகத்தை உணர்கிறார்.

இதன்பிறகு "மியூற்றன்று" எனும் பெயர்கொண்டு இயங்கும் காடையர் கும்பலின் மோதல் நடவடிக்கைகளிலிருந்து காரீ கெல்லி எனும் பதின்மூன்று வயதுச் சிறுமியை பேட்மேன் காக்கிறார். பேட்மேனின் காலஞ்சென்ற உதவியாளன் "உறொபின்" போல உடையணிந்து நகரெங்கும் அவரைத் தேடிச் செல்கிறாள் அச்சிறுமி. நகரத்தின் குப்பை கொட்டும் பகுதியில் "மியூற்றன்று" அமைப்புடன் மோதுகையில் அவரைக் காண்கிறாள். தனது போர்க்கருவிகள் மூலம் மியூற்றற்றுகளைத் தோற்கடிக்கின்றபோதிலும், அவர்களின் தலைவனை வீழ்த்தும் முயற்சியில் தோல்வியடைகிறார் பேட்மேன். மியூற்றன்று தலைவனின் கவனத்தை சிதறடித்து பேட்மேன் தப்பிக்கக் கெல்லி உதவுகின்றாள். பிற்பாடு பேட்மேன், ஓய்வுபெறும் காவற்றுறை அதிகாரியான சேம்சு கோடன் மற்றும் கெல்லியின் உதவியுடன் மியூற்றன்று தலைவனை வெல்கிறார். சிதறடிக்கப்பட்ட மியூற்றன்று அமைப்பின் அங்கத்தவர்கள் சிலர் "சன்சு ஒப் பேட்மேன்" (பேட்மேனின் மகன்கள்" என்ற புது அமைப்பை உருவாக்குவதுடன், குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டிக்கிறனர்.<ref name="DC Comics">[http://www.dccomics.com/blog/2015/04/24/superstar-writerartist-frank-miller-returns-to-batman]</ref>

மனநலம் பாதிக்கப்பட்டு ஆக்கம் புகலிடத்தில் அனுமதிக்கப்படும் குற்றவாளியான சோக்கர், பேட்மேனின் மீள்வருகையால் கண்திறக்கின்றார். தான் குணமடைந்து விட்டதாகப் பிறரை நம்பவைக்கும் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நச்சுப்புகையின் பிரயோகத்தினால் அங்குள்ள அனைவரையும் கொல்கிறார். மீண்டும் களியாட்ட நிகழ்வொன்றில் மக்களைக் கொலை செய்யும் இவரைத் தேடி பேட்மேன் வருவதற்குள் காலம் கடந்துவிடுகிறது. கடுங்கோபமுற்ற பேட்மேன் சோக்கரைக் முரட்டுத் தனமாகத் தாக்குகிறார். பெத்மேனைக் குற்றவாளி என்று மற்றோரை நம்பவைப்பதற்காக சோக்கர் தனது கழுத்தைத் திருகித் தற்கொலை செய்கிறார். இதிலிருந்து தப்பிச் செல்லும் பேட்மேனைப் பிடிக்கக் காவற்றுறையினர் நகரமெங்கும் வலைவீசுகின்றனர்.

சூப்பர்மேன் பேட்மேனுக்கு விளக்கமளிக்க முயல்கின்றபோதிலும், பேட்மேன் தனது தொழ்நுட்பக் கண்டுபிடுப்புக்கள் மட்டும் வர்மக்கலைப் பயிற்ச்சிகளின் உதவியுடன் அவருடன் மோதுகிறார். பேட்மேனின் கவசத்தில் தாக்கும் சூப்பர்மேனை, ஒலிவர் குயீன் கிரிப்ரன் பதிக்கப்பட்ட அம்பினை எய்து பலவீனமடையச் செய்கிறார். திடீரென்று பேட்மேனுக்கு மாரடைப்பு வந்து சாகும் தருவாயில் இருக்கின்றார். அவரது உதவியாளரான அல்பிரடு பெனிவேத்து, பேட்மேனின் இல்லமான வெய்ன் மனர் மற்றும் பதுங்குமிடமான பேட்கேவை வெடிக்கச் செய்வதன் மூலமாக அவரது இரகசிய அடையாளத்தை வெளியுலகுக்குத் தெரியப்படுத்துகிறார். பக்கவாதத்தினால் அவதியுறும் அவர் பின்பு மரணிக்கிறார். வெய்னின் மரணச் சடங்கின் பிறகு, பேட்மேன் இன்னும் உயிரோடுதானிருக்கிறார் எனவும், அவர் இரசாயனங்களின் பாவனையுடன் மரணித்தாக வெளியுலகை நம்பவைத்தார் என்றும் தெரியவருகிறது. அவருடைய இதயத்துடிப்பு மீண்டும் கேட்கவே, கிளாக்கு கென்ற்று கெல்லியைப் பார்த்துக் கண்சிமிட்டுகிறார். சிகாலத்தின் பின்பு புறூசு வெய்ன் கெல்லி, குயீன் மற்றும் தன்னைத் தொடரும் பிறரின் உதவியுடன் உலகைக் காப்பாற்றும் தனது யுத்தத்தை மீளத் தொடங்குகிறார். இதற்காக அவர்கள் ஒரு இராணுவத்தைத் தோற்றுவிக்கின்றனர்.

==கதாபாத்திரங்கள்==

*'''புறூசு வெய்ன்/ பேட்மேன்''': குற்றங்களைக் களையும் பணியிலிருந்து ஓய்வுபெறும் புறூசு வெய்ன் குற்றங்களின் அதிகரிப்பைக்கண்டு பொறுக்க முடியாமல் மீண்டும் பேட்மேன் எனும் முகத்திரையின் கீழ் மக்களைக் காப்பாற்றுகிறார்.

*'''ஆல்பிரட்டு பெனிவேத்து: புறூசின் நம்பிக்கைக்குரிய உதவியாளர் மற்றும் மருத்துவர். இவர் தனது 80கலீல் இருப்பதாக இக்கதை சித்திரிக்கிறது.

*'''காரீ கெல்லி/ உறொபின்''': பெற்றோரின் கவனிப்பின்றி வாழும் 13 வயதுச் சிறுமி. இவர் பிறகு பேட்மேனுக்கு உதவும் கதாபாத்திரமான உறொபினாக மாறுகிறார். சிலசமயங்களில் முந்தைய உறொபினாகப் பிறரால் பிழையாக அறியப்படும் இவர் வயதான பேட்மேனைக் காப்பாற்றுவதன் மூலம் அவர் நம்பிக்கையைப் பெறுகிறார்.

*'''சேம்சு கோடன்''': பேட்மேனின் உண்மையான அடையாளத்தை அறிந்த சிலரில் ஒருவரான இவர் தனது 70வது வயதில் காவற்றுறை அதிகாரி வேலையிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

* '''காவி இடென்ற்று/ உரூபேசு''': கடந்த பன்னிரண்டு வருடங்களாக ஆக்கம் புகலிடத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர் தற்போது தனது ஐம்பதாவது அகவையிலுள்ளார். மேலும் மூன்று வருடமாக வைத்தியரான வோல்பரின் கண்காணிப்பிலிருக்கும் இவருக்கு முகச்சத்திரசிகிச்சை செய்யப்படுகிறது. வோல்பரால் குணமடைந்துவிட்டார் என்று சான்றிதழ் கொடுக்கப்பட்ட இவர் உண்மையில் பழைய எண்ணங்களுடனேயே இருக்கின்றார். தனது முகத்தின் இருபக்கமும் சேதமடைந்தாக எண்ணிக்கொள்ளும் இடென்ற்று, முகத்தைத் துணியால் மறைத்துக்கொண்டு நகரத்தை அச்சுறுத்துகிறார்.
135

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1864330" இருந்து மீள்விக்கப்பட்டது