"பயனர்:Chenkodan Sabalingam/மணல்தொட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

980 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
*'''செலினா கைல்''': தனது கேட்வுமன் அடையாளத்திலிருந்து விலகி வாழுகின்றார்.
 
1980களின் ஆரம்பத்தில் இடீசீ வரைகதை நிறுவனமானது பேட்மேன் குழுவாசிரியரான இடிக்கு சியோடானோவை, ஆசிரிய இயக்குனராகப் பணியில் அமர்த்தியது. எழுத்தாளரும் ஓவியருமான பிராங்கு மில்லர் "த இடாக்கு நைற்று இறிற்றேண்சு" கதையாக்கக் குழுவில் இணைக்கப்பட்டார். இக்கதையை மில்லருடன் சேர்ந்து எழுதிய சியோடானோ,"இறுதி வடிவமானது நான்கு அல்லது ஐந்து தடவைகள் எழுதப்பட்ட பின்னரே உருவானது. கதை அடிப்படை ஒன்றாக அமைந்திருந்த போதிலும் இடையிடையே பல வழிமாற்றங்கள் செய்யவேண்டியிருந்தது" என்று தெரிவித்தார். சக எழுத்தாளரும் ஓவியருமான சோன் பேண், "உறொபின் கட்டாயகமாக ஒரு பெண்ணாக இருக்கவேண்டும்" என்று கூற, மில்லரும் அதற்கு உடன்பட்டார். இடேட்டி கரி திரைப்படங்களை, குறிப்பாக 1983இல் வெளியான சடுன் இம்பாக்ற்று திரைப்படத்தினை (இதில் இடேட்டி கரி கதாபாத்திரமானது நீண்டகாலமாக நோயினால் பாதிக்கப்பட்டுப் பின்பு மீண்டும் குற்றங்களைத் தடுக்கும் பணிக்குத் திரும்புவது போலச் சித்தரிக்கப்பட்டுள்ளது) உதாரணமாகக் கொண்டு இக்கதையை எழுதியதாக மில்லர் தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் தனக்கு வயதாவதைக் கூட இதன் உதாரணமாக எடுத்துக்கொண்டதாக மேலும் கூறினார். இக்கதையில் ஒரு பக்கத்துக்குப் பதினாறு படங்கள் கூடிய கட்டங்கள் அமைக்கப்பட்டன. இது பொதுவாகப் பதினாறு கட்டங்கலாகவோ அல்லது ஒன்றிலிருந்து பதினாறுக்கு இடைப்பட்ட ஏதாயினும் எண்ணிக்கையை உடையதாகவோ உருவாக்கப்பட்டன. தயாரிப்புக் கேடு தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடுகளின் காரணமாக, சியோடானோ இதன் ஆக்கப் பணிகளின் அரைவாசியுடன் விலகினார். வரைகதை ஆராய்ச்சியாளரான இலெ தானியல்சு, மில்லரின் கெடுவைத் தள்ளிப்போடும் பழக்கத்தைப் பற்றி எழுதுகையில், "கலைச் சுதந்திரந்த்துக்கான தேடலின் உச்சக்கட்டம்" என்று வருணித்துள்ளார்.
 
"த இடாக்கு நைற்று இறிற்றேண்சு" இதழ்கள் மேலதிகப் பக்கங்களை உள்ளடக்கியதோடு இலின் வாளீயின் நீர்வண்ணத்தினால் தீட்டப்பட்ட பக்கங்களை வெளிச்சப்படுத்திக் காட்டுவதற்காகச் சதுர வடிவுடைய பக்கவாட்டைக் கொண்டதாகப் பக்கங்கள் கட்டப்பட்டுள்ளதுடன், பளபளப்பான தாளினால் ஒவ்வொரு பக்கமும் அமைக்கப்பட்டன.
135

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1864400" இருந்து மீள்விக்கப்பட்டது