"நைமிசாரண்யம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

468 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(added info)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
}}
 
'''நைமிசாரண்யம்''' என்பது [[108 திவ்ய தேசங்கள்|108 வைணவத் திருத்தலங்களில்]] ஒன்றாகும்.<ref name="Ramesh">{{cite book|title=108 Vaishnavite Divya Desams: Divya desams in Malai Nadu and Vada Nadu|last= M. S. |first=Ramesh|publisher= Tirumalai-Tirupati Devasthanam|year=2000|page=188}}</ref> [[திருமங்கையாழ்வார்|திருமங்கையாழ்வாரால்]] பாடல் பெற்ற இத்தலம் இந்தியாவின் வட மாநிலங்களில் ஒன்றான உத்திரப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் தான் [[உக்கிரசிரவஸ்]] என்ற சூத பௌராணிகர், [[மகாபாரதம்|மகாபாரத இதிகாசத்தை]] சௌகனர் தலைமையிலான முனிவர்களுக்கு கூறினார்.
 
== தல வரலாறு ==
 
இந்துத் தொன்மத்தின்படி ஒரு சமயம் தவவலிமையில் சிறந்த முனிவர்கள் எல்லாம்குலபதி '''சௌகனர்''' தலைமையில் ஒன்று கூடி 12 ஆண்டுகளில் செய்யக்கூடிய சத்திர வேள்வியைச் செய்ய விரும்பினர். அதற்குகந்த இடத்தை தெரிவு செய்து தருமாறு எல்லோரும் பிரம்மனிடம் வேண்டினர். பிரம்மன் ஒரு தருப்பைப் புல்லை எடுத்து அதை ஒரு வளையமாக வளைத்து கீழே உருட்டி அது எங்கு விழுகிறதோ அதுவே தவம் செய்ய சிறந்த இடம் என்று தெரிவித்தார். இந்த பாரத தேசத்தில் கோமதி ஆற்றங்கரையில் உள்ள இவ்விடத்தில் வந்து விழுந்தது<ref>{{cite book|title=Four reports made during the years, 1862-63-64-65, Volume 1|first=Sir Alexander|last= Cunningham}}</ref>. இவ்விடமே தமது சத்திர வேள்வியைச் செய்ய உகந்தது என்று முனிவர்கள் கண்டு தமது வேள்வியைத் தொடங்கினர். நேமி என்ற சொல்லுக்கு சக்கரம் அல்லது சக்கரவளையம் என்பது பொருள். நேமி சார்ந்த ஆரண்யம்(காடு) ஆனதால் நேமிச ஆரண்யமாகி நைமிசாரண்யம் ஆயிற்று.<ref name="108 திவ்ய தேசம்"/>
 
வேள்வியை இவ்விடத்தில் துவங்கிய முனிவர்கள் அதன் முழுப்பலனை [[திருமால்|திருமாலுக்கு]] வழங்க எண்ணினர். அவ்விதமே திருமால் குறித்து
தவமியற்ற வேள்வியின் இறுதியில் அந்த வேள்வி குண்டத்திலேயே தோன்றி அவிர்ப்பாகம் ஏற்றுக்கொண்டு அம்முனிவர்கட்கெல்லாம்
அருள்புரிந்தார் என்பது வரலாறு. இந்தக்கருத்தைப் பின்பற்றியே (அதாவது நைமிச ஆரண்யம் என்ற கருத்தை) இங்குள்ள மக்களும் இறைவன் இங்கு ஆரண்ய வடிவில் கொண்டு (காடுகளையே உருவமாய்) காட்டையே வணங்குகின்றனர். தற்போதுள்ள சன்னதியிலும் ஆழ்வார் பாடிய சிலைகள் இல்லை.<ref name="108 திவ்ய தேசம்">{{cite book | title=108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு | publisher=தமிழ் இணையப் பல்கலைக் கழகம் | author=ஆ.எதிராஜன் B.A.,}}</ref><ref>Nilakanta Sastri, K.A. (1955). ''A History of South India'', p. 142, Oxford University Press, New Delhi (Reprinted 2003), ISBN 0-19-560686-8)</ref>
 
[[பகுப்பு:108 திவ்ய தேசங்கள்]]
[[பகுப்பு:வைணவம்]]
40

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1864916" இருந்து மீள்விக்கப்பட்டது